Tuesday, 28 April 2020

தினம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் # 790 : மூன்றாம் தந்திரம் - 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்

ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்

வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்

தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

விளக்கம் :

வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் இட நாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் வல நாடி வழியே மூச்சு இயங்க வேண்டும். வளர்பிறை வியாழக் கிழமைகளில் இடநாடியிலும் தேய்பிறை வியாழக் கிழமைகளில் வலது நாடியிலும் மூச்சு இயங்க வேண்டும், இவ்வாறு இயங்குவது உடல் நலத்திற்கு ஏற்ற இயற்கையான பிராண இயக்கமாகும்.

No comments:

Post a Comment