Saturday, 25 April 2020

தருமம் தலை காக்கும் - அய்யன் அருள் பரிபூரணமாக கிடைத்ததற்கு சாட்சியாக சரியாக அகத்தியர் பீடம் அமைந்திருக்கும் பொகளூரில் விநியோகம் செய்யும் போதே அய்யன் மனம் குளிர்ந்து மழையாய் பொழிந்தார்கள்.

நேற்று நமது பொகளூர் அகத்தியர் பீடத்தின் சார்பில் மேட்டுப்பாளையம் பகுதியிலும் பொகளூர் பகுதியிலும் வீடு வீடாக சென்று மளிகை பொருட்கள் காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதன் புகைப்படங்களை கீழே பகிர்ந்துள்ளோம். அய்யன் அருள் பரிபூரணமாக கிடைத்ததற்கு சாட்சியாக சரியாக அகத்தியர் பீடம் அமைந்திருக்கும் பொகளூரில் விநியோகம் செய்யும் போதே அய்யன் மனம் குளிர்ந்து மழையாய் பொழிந்தார்கள். சித்திரை மாதம் வெய்யில் கொடுமை, அன்னூர் பகுதி கோவையிலேயே மிக அதிக வெப்பம் கண்ட இடம். நீர் நிலைகள் கிடையாது. வறண்ட பூமி. கடந்த 15 நாட்களாக எந்த ஒரு மழையும் இல்லை. இன்று ஏன் பெய்ய வேண்டும், அதுவும் தானம் வழங்கும் போதே ஏன் மழை பெய்ய வேண்டும். நாத்திகர்களுக்கு வேண்டுமானால் இது தற்செயலாக இருக்கலாம். ஆனால் நம்மை போன்றவர்களுக்கு தெரியும், நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய் என பெய்யும் மழை. எத்தனையோ பேர் எங்கெங்கேயோ தானம் தருமம் பல நாட்களாக செய்கிறார்கள், எத்தனை இடத்தில் மழை பெய்து இருக்கும் தெரியவில்லை, பெய்தும் இருக்கலாம். அகத்தியர் ஆசீர்வாதம் உடனடியாக நேரடியாக கிட்டியது ரெட்டிப்பு மகிழ்ச்சி. தானம் கொடுத்தவர் அனைவருக்கும் யாம் பல வகையாக ஆசி வாக்கு வாழ்த்தியுள்ளோம். அவை எல்லாம் நிறைவேற்றுவது அகத்தியரின் கடமையாகும். அதற்கு சாட்சியே இந்த ஆசீர்வாதம். அட்சய திருதியை யம் கிருத்திகையும் சேர்ந்து வந்த நன்னாளில் அகத்தியர் பீடத்தின் சார்பாக செய்த தானம் இறைவனின் புண்ணிய ஏட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

ஓம் சிவாய அகத்தீஸ்வராய நமோ நமஹ





























































No comments:

Post a Comment