Wednesday 29 April 2020

பொதிகை அனுபவம் - சித்தர் காட்சி

பொதிகை அனுபவங்கள் - விஸ்வரூப தரிசனம் 

2016 இல் அகத்தியர் உத்தரவுப்படி பொதிகை மலை மேலே செல்லும் வழியில் நடுவில் ஓரி இடத்தில புனித புஷ்கரினி  உள்ளது. அதில் நீராடி விட்டு மேலே ஏறி வாருங்கள் விஸ்வரூப காட்சி தருகிறோம் என்று ஏற்கனவே வாக்கு உரைத்து இருந்தார். 

அதன்படி நாங்களும் மேலே ஏறி ஐயனுக்கு பல வகை அபிஷேகம் செய்து கொண்டு இருக்கும் பொது திடீரென்று மேகங்கள் வேகமாக நகர ஆரம்பித்தன. பெரிய அளவு உருவம் கொண்ட பறவைகள் கத்தி போன்று றெக்கை கொண்டு மேகத்தை காற்றை கிழித்து இங்கும் அங்கும் பறந்தன. 

இங்கே அபிஷேகம் நடந்து கொண்டு இருக்க மழையின் பின்னணியில் மேகங்கள் நகர்ந்து அழகாக ஒரு உருவம் உருவானது. அது ஒரு மனித முகம் ஒரு ரிஷியின் முகம் பின்னர் தான் நாங்கள் உணர்ந்தோம் அது அகத்தியர் முகம் போலவே மேகங்கள் சூழ்ந்து நின்றது. அதுவும் பொதிகை மலை உச்சியில் 3 ஆடி  உயர  அகத்தியர் சிலை நிறுவப்பட்டு இருக்கும். 

அந்த சிலை 100 ஆண்டுக்கு முன்னர் திருவனந்தபுரம் மன்னனால் பிரதிட்டை செய்யப்பட்டது. மலை உச்சியில் எப்போதும் ஒரு கல் பீடம் உண்டு அந்த பீடத்தின் கீழ் பகுதியில் ஒரு முக அமைப்பு வடிக்கப்பட்டு இருக்கும். அது ஒரு  மூவாயிரம் வருடம் முன்பு வடித்த ஓவியம் போல இருக்கும். 

அந்த 2016 ஆம் ஆண்டு நாம் காட்சி கண்ட பின் நான் எனது தொலைபேசியில் எடுத்த அய்யனின் திருவுருவ படமே நமது www.agathiyarpogalur.blogspot .com என்ற இணையதளத்தின் முகப்பு  பக்கமாக வைக்கப்பட்டு இருக்கிறது.விஸ்வரூப காட்சி மீண்டும் கிடைக்கவே இல்லை. 

மிக அரிதான ஆட்சி அது. யாருமே புகைப்படம் எடுக்கவில்லை .எதிர்பார்க்கவே இல்லை. அங்கே கயிற்றில் தொங்கி ஏறி செல்வதே சிரமம். பூஜை பொருட்களை எடுத்து கொண்டு முதல் முறை ஏறியது மிகவும் புதிதாகவும் பயமாகவும் இருந்தது. 

.............. அனுபவங்கள் தொடரும் 

TRS

No comments:

Post a Comment