Tuesday 28 April 2020

இன்று செய்ய வேண்டியவை

🕉️ ஷஷ்டி கூடும் புதன் - ஆறு விதமான ஸ்கந்த சித்புத்தி சக்திகள் பூரிக்கும் “பௌம்ய ஸ்கந்த பவித்ர நாள்”🕉️

 🌀  *புதன் + சஷ்டி 2️⃣*
🌀
     _வாத்தியார் அருளுரையிலிருந்து_
                       _தேன் துளிகள்_

✡️கல்லூரிப் பருவப் பிள்ளைகள், மற்றும் பள்ளிப் பிள்ளைகள் திருப்புகழ்ப் பதிகங்களை தினமும் ஓதி வந்தால், காம தோஷங்களுக்கு வயப்படாது, மனதைத் தினப்படுத்திக் கொண்டு, நல்லொழுக்கத்தில் சிறந்து விளங்குவார்கள்.

✡️இன்று ஸ்கந்த சக்திகள் நிறைந்த புதன் ஆகையால், அமர்ந்த நிலை முருகப் பெருமான் முன் அமர்ந்து குறைந்தது 36 திருப்புகழ்ப் பாக்களை ஓதி, உலகக் குழந்தைகளின் நல்ல புத்தி அம்சங்களுக்காக அர்ப்பணித்து, முருகனை வழிபட்டு, மயில்களுக்கு உணவிடுதல் விசேஷமானது.

✡️அலைபாயும் மனமடங்க இது நித்திய வழிபாடாகிறது.

🛐கிருஷ்ணார்ப்பணம்

🌀  *புதன் + சஷ்டி 3️⃣*
🌀
     _வாத்தியார் அருளுரையிலிருந்து_
                       _தேன் துளிகள்_

✡️சஷ்டி திதிகளில் பத்து வயதிற்கு உட்பட்ட ஆண் பிள்ளை, குழந்தையின் கைகளால் மூன்று வேளையும் அரிசியைப் பெற்று, உணவு சமைத்து உண்ணுதலும்,

✡️அவர்கள் கரங்களாலேயே அன்னதானம் செய்தலும் சிறப்புடையதாகும்.

✡️இதனால் ஆண் சந்ததியினர் ஸ்திர வாழ்வு பெற, நல்வரங்கள் கிட்டும்.

✡️பெண் பிள்ளைகளைக் கொண்டோர்க்கு, நல்ல மாப்பிள்ளைகள் அமைய நல்ல வழிகள் பிறக்கும்.

✡️சஷ்டி தோறும் இதனைச் செய்து வருதல் வேண்டும்.

🛐கிருஷ்ணார்ப்பணம்

🕉️பஞ்சரத்ன ஆன்மீக நியதிகள்🕉️

 🌀  *புதன் + சஷ்டி 1️⃣*
🌀
     _வாத்தியார் அருளுரையிலிருந்து_
                       _தேன் துளிகள்_

✡️தினசரி ஆலய வழிபாடு, நித்தியப் பூஜைகள், தியானம், யோகம், தினமுமே இயன்ற அளவு தான, தர்மம் (பசு, காக்கைக்கு மூன்று வேளைகளிலும் உணவு அளித்தலும், ஒரு பொட்டலம் உணவளித்தலும் கூட எளிமையான - நித்தியக் கடமையும் அன்னதான சேவையுமே!)
- போன்ற 5 விதமான “பஞ்சரத்ன ஆன்மீக நியதிகளைக்” கலியுகத்தில் பெற்றோர்கள் முறையாகத் தினந்தோறுமே ஆற்றாமையால்தான், ஸ்திரமான புத்தியும், ஒழுங்கு முறையிலான மனமும் பெற்றோர்களுக்கும் வந்தமையாது, குடும்ப வாழ்க்கையின் தன்மைகளை உணராது திகைக்கின்றனர்.

✡️இந்த ஐந்தில் தினமும் எதையுமே ஆற்றாது கடனே என வாழ்வதால்தான் பணக் கடன்களும், பித்ருக் கடன்களும் பெருகி வாட்டுகின்றன.

✡️இதனால், தம் துன்பங்களுக்குப் பிறரே காரணம் எனப் பலரும் எரிச்சலடைந்து, கணவன், மனைவி, குழந்தைகள், உற்றம், சுற்றத்தின்“ மீது பகைமை பாய்கிறது.

✡️இதற்குக் காரணம் நல்ல ஸ்திரமான புத்தியும், நிலையான நல்மனமும் பெற்றோர்களுக்கே இல்லாமையே!

✡️“தீதும் நன்றும் பிறர் தர வாரா, தம் இன்னல்கள் யாவும் தாம் செய்த தீ வினைகளின் விளைவுகளே!” என அறியாது, பிறரை வையும் மனப்பான்மையே கலியில் பெருகி வருகிறது.

✡️இதற்குக் காரணமும் நல்புத்தி அமையாமையே!

✡️ குடும்பத்தில், தொழிலில், அலுவலகத்தில் பொங்கும் மிதமிஞ்சிய பிரச்னைகளுக்குத் தீர்வுகளை நாடித் தற்போது, ஜாதகம், நாடி ஜோதிடம் போன்றவற்றின் மூலம் ஆன்மீக ரீதியான தீர்வுகளைத் தேடுவோர் பெருகி வருகின்றனர்.

✡️திருமண உறவுப் பிரிவுகள், கணவனால் கைவிப்பட்ட மனைவியின் வேதனையான புலம்பல்கள், கணவனோ தன்னோடு மனைவி வாழ மறுக்கிறாள் என வேதனை அடைதல், குழந்தைகள் இல்லாமை, ஆண் அல்லது சந்ததி இல்லாமை, மனநோயாளிக் குழந்தைகள், ஊனமுற்ற பிள்ளைகள், கடுமையான நோய்கள், சொத்துத் தகராறுகளால் பிள்ளைகள், பெற்றோர், சகோதர, சகோதரிகளிடையே பிளவு, பணக் கஷ்டங்கள், தொழில் நஷ்டங்கள் - என்றவாறாகப் பல துன்பங்களும் கலியுகக் குடும்பங்களில் மலிந்து காணப்படுகின்றன.

✡️இவற்றுள் பலவும் புத்தி மாறாட்டக் கர்ம வினைகளால் தோன்றுபவை.

✡️அனைவருமே *சஷ்டி நாளில் நன்கு விரதம் பூண்டு வருதல் வேண்டும்*.

✡️ *ஞானம், அறிவு, கல்வி, வித்யை, புத்தி, மனம் ஆகிய அந்தையும் சீர்மைப் படுத்தித் தருவது, ஸ்கந்தப் பூர்வமாக சித்சுத்தியுடன் பெற்றுத் தருவது சஷ்டி நாள் வழிபாடும் விரதமும் ஆகும்*.

✡️ கலியுகத்தில் பெற்றோர்களுக்கே ஆழ்ந்த பக்தி, பொறுமை, பணிவு, அடக்கம் இன்மையால் அனைத்துக்கும் உடனடியாகத் தீர்வுகளை வேண்டி, புத்தி பேதலித்துத் தீவிரமான முடிவுகளையும் எடுத்துப் பிறகு, இதனாலும் கூடுதல் பிரச்னைகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள்.

✡️ பலரும் வாழ்வில் பெருந் தவறுகளைச் செய்து வருந்துதலும் பிறகு வாழ்நாள் முழுதும் இதற்காக வேதனை அடைதலும் உண்டு. வெறும் வருத்தமே தீர்வு ஆகுமா?

✡️இதற்கெல்லாம் காரணம், சிறுவயதிலிருந்தே தக்கப் பூஜை முறைகளைக் கடைபிடிக்காமையும், பெற்றோர்களும் பிள்ளைகளை முறையாக வளர்க்காததும் ஆகும்.

✡️இதற்காகத் தான் சிறு வயதிலிருந்தே நிறையப் பூஜைகளை ஆற்றச் செய்து பழகியிருந்தால், நாளடைவில் நற்குணங்கள் தாமே நன்கு பொருந்தி வரும்.

✡️பிள்ளைகளை, பெண்களை நல்வழிப்படுத்த வேண்டிய நற்பண்புகளை போஷித்திட, பிள்ளைகளின் 12 வயது வரைத் தாய், தந்தையர்க்கு மிகுந்த பொறுப்பு உண்டு.

✡️இதன் பிறகு, 12 வயதிலிருந்து பிள்ளைகள் தாமே பூஜிக்கத் தொடங்கிட வேண்டும்.

✡️இதனால், பிள்ளைகளுக்கு நல்லொழுக்கமான குணங்கள் இயற்கையாகவே வந்து சேரும்.

✡️இதுதானே வளரும் சமுதாயத்திற்கான உண்மையான தெய்வீக மூலதனம்.

✡️ஒவ்வொரு இல்லத்திலும்
1. தினமும் ஐந்து முறை லலிதா சஹஸ்ர நாமத் துதிகளை ஓதுதல்.
2. மூன்று முறை ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரித் துதிகளை ஓதுதல்
3. அபிராமிஅந்தாதி, அங்காளி அந்தாதி, விநாயகர் அகவல் போன்ற மிகவும் எளிமையான நித்தியத் துதிகளை ஓதுதல்
4. புருஷஸுக்தம், விஷ்ணு ஸூக்தம், நாராயண ஸூக்தம், துர்க்கா ஸூக்தம், பூ ஸூக்தம், நவ கிரக ஸூக்தம், ருத்ரம், சமகம் போன்ற மாமறைத் துதிகளைத் தினசரி ஓதுதல்
5. தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருஅருட்பா, திவ்யப் பிரபந்தம், திருமந்திரம்
- போன்றவை தினமும் ஏதேனும் ஒரு வகையிலேனும் ஓதப் பெறுதல் வேண்டும்.

✡️இவைதாம் கலியகத்தில் புத்தி, உள்ளம், மனதைச் சுத்திகரிக்கும் அருமருந்துகள்.

🛐கிருஷ்ணார்ப்பணம்

No comments:

Post a Comment