Saturday 18 April 2020

திருப்பணங்காடு - இரண்டு மூலவர்கள் இரண்டு அம்பாள்கள் எழுந்தருளியுள்ள தலம், ஒரே தலத்தில் இரண்டு சன்னதிகள் உள்ளன

☁☁🌥🌥⛅⛅⛅🌤🌤🌤☀

        🙏சிவாயநம🙏
       திருச்சிற்றம்பலம்

🌸 *இன்று சார்வரி ஆண்டு சித்திரை மாதம் 06-ம் நாள் (19.04.2020)*
*ஞாயிற்றுக்கிழமை*

🔆 படம்:-
இறைவர்:-
*தாளபுரீஸ்வரர்*

🔆தலம்:-
*வன்பார்த்தான் பனங்காட்டூர்*
*( திருப்பனங்காடு )*
(இத்தலம் காஞ்சிபுரம் - பெருங்கட்டூர் பாதையில் ஐயங்கார்குளம் வழியாக சென்றால் திருப்பனங்காடு எனும் கை காட்டி நிற்கும் கூட்டு பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்)

🔆 *இரண்டு மூலவர்கள் இரண்டு அம்பாள்கள் எழுந்தருளியுள்ள தலம், ஒரே தலத்தில் இரண்டு சன்னதிகள் உள்ளன*

*(1)அகத்தியர் வழிபட்ட மூர்த்தம்:-*
 🔅இறைவர்:
 *தாளபுரீஸ்வரர்*
🔅 இறைவி:-
 *அமிர்தவல்லி*

(2) அகத்தியரின் சீடர் *புலத்தியர்* வழிபட்ட மூர்த்தம்:-
🔅இறைவர்:-
*கிருபாநாதேஸ்வரர்*
🔅இறைவி:-
 *கிருபா நாயகி*


🙏சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல் பெற்ற தலம்.

🙏 அகத்தியர் வழிபடும் பொருட்டு இறைவர் தமது முடியில் உள்ள கங்கை நீரை அளித்தருளினார் அவ்விடத்தில் உள்ள குளம் *"சடாகங்கை"* எனப்படுகிறது.

🙏 இத்தலத்தில் இறைவர் சுந்தரருக்கு உண்ண உணவும், பருக நீரும்  அளித்ததாக கூறுகிறார்கள்.


🌸 நினைவில் கொள்ளவேண்டிய தமிழ்வேத வாசகம்:-
*"மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர் நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவென்னே".*
- சுந்தரர்.


No comments:

Post a Comment