Thursday 16 April 2020

ராஜ ராஜேஷ்வரி திருவிளையாடல்கள்

திருவாலம்பொழில் - காஞ்சி மஹாபெரியவர் தரிசனமும் தந்து அருள்
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி, நகரப்பேரூந்து அல்லது ஆட்டோவில் ஏறி, தஞ்சாவூர்--கண்டியூர் மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. பயணம் செய்தால், திருப்பூந்துருத்தியை அடுத்து வரும் ஊர், திருவாலம்பொழில். 1950 ம் வருடங்களில், திருவாலம்பொழில் அக்ரஹாரத்தில் 7 அல்லது 8 பிராம்மண வீடுகள் மட்டுமே இருந்தன. இந்த அக்ரஹாரத்திற்குள் நுழையும்போதே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ராகமாலிகையாகப் பாடும் கணீரென்ற குரல் நம்மையெல்லாம் பரவசப்படுத்தி ஊருக்குள் அழைக்கும்.
அந்தக் குரல் வந்த திசை நோக்கிச் சென்றால்,அக்ரஹாரத்தில் இரண்டாவது வீடு, ஸ்ரீவித்யாபரம்பரை, தர்மராஜ அய்யர் வீடு. இந்த வீட்டிலுருந்துதான் லலிதா சஹஸ்ர நாமாவளி வெள்ளிக்கிழமை, மற்றும் பௌர்ணமி தினங்களில் இரவு 9-00 முதல் 10--00 மணிவரை ஒலிக்கும். தற்போதய கால கட்டத்தில் அக்ரஹாரத்தில் உள்ள குடும்பங்கள் பிழைப்பு காரணமாக வெளியூர்களில் குடி பெயர்ந்துவிட்ட நிலையில், தர்மராஜ அய்யர் குடும்பத்தினரும் மற்றும் அவர் செய்துவந்த விக்ரஹ பூஜையும் சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டது. தற்போது அக்ரஹாரத்தில் ஒரேஒரு பிராம்மண வீடு மட்டுமே ( பிழைப்பு-- விவசாயம் ) எஞ்சியுள்ளது. திருவாலம்பொழிலைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை கொரட்டூரில் வசித்துவருபவருமான, ஸ்ரீவித்யா உபாசகர் தர்மராஜஅய்யர் வம்சம், அவரது மகள் ஸ்ரீமதி ருக்மணி, கூறுகிறார்--- "இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உள்ளது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாபெரியவர் ஜெகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் 1950ம் ஆணடு என ஞாபகம். தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு, திருவாலம்பொழில் வழியாகப் போகும்போது, எங்கள் கிராம அக்ரஹாரத்தில் இருதினங்கள் பூஜையுடன் தங்கி, திரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்திரமௌளீஸ்வரர் பூஜை செய்துள்ளார். வந்த அனைத்து பக்தர்களுக்கு தரிசனமும் தந்து அருள் புரிந்துள்ளார். “எங்கள் வீட்டுக்கு மேற்குப்புற வீட்டில் மஹாபெரியவர் தங்கி பூஜை செய்யும்பொது ஒரு நாள் அதிகாலை 4-30--5-00மணி வாக்கில் தீப்பந்த ஒளி ஏந்தி, தனது சிஷ்யர்கள் புடை சூழ, பக்கத்திலுள்ள எங்கள் கிரஹத்திற்கும் திடீர் விஜயம் செய்துள்ளார்.. நேரே வீட்டிலுள்ள பூஜை அறைக்குச் சென்று, எங்கள் தகப்பனார், ஸ்ரீவித்யா உபாசகர், பூஜை செய்துவந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி விக்ரஹம், ஸ்ரீ ஸோமாஸ்கந்தர் விக்ரஹம், ஸ்ரீ மீனாக்ஷி விக்ரஹம், மற்றும் ஸ்ரீசக்ரம், பஞ்சாயதன பூஜை விக்ரஹங்கள் ஆகியவைகளைதரிசனம் செய்துகொண்டு அவைகளின்விவரங்களை விசாரித்திருக்கிறார்.
அவர் செய்துவந்த ஸ்ரீவித்யா பூஜை முறைகளைப் பற்றியும் விசாரித்திருக்கிறார் ." " மேற்படி விக்ரஹங்கள் திருவையாரில் வசித்து வந்த ஒருவரிடம் இருந்ததாகவும், அவர் செய்துவந்த விக்ரஹ பூஜைகள் ஏதோ காரணங்களுக்காக தடைபட்டு விட்டதாகவும் விக்ரஹங்ளை மூட்டைகட்டி வீட்டுப் பரணையில் வைத்துவிட்டதாகவும், அவரது கனவில் திருவாலம்பொழிலில் அப்போது வசித்துவந்த ஸ்ரீ விஸ்வநாத அய்யரிடம் ( தர்மராஜ அய்யரின் தகப்பனார் ) விக்ரஹங்களை ஒப்படைத்துவிடுமாறும் ஸ்ரீஅம்பாள் தோன்றி, உத்திரவு கொடுத்திருக்கிறாள். அதேபோன்று திருவாலம்பொழில், ஸ்ரீ விஸ்வநாத அய்யர் கனவிலும் அம்பாள் தோன்றி, தான் பூஜை. புனஷ்காரங்கள் இன்றி, திருவையாறில் இன்னார் வீட்டில் இருப்பதாகவும், உடனே அந்த நபர்வீட்டிற்குச் சென்று விக்ரஹங்களை பெற்றுவந்து, தினசரி பூஜை செய்து தன்னை பராமரிக்க வேண்டுமென்றும் உத்திரவு ஆகியுள்ளது..
ஸ்ரீ விஸ்வநாத அய்யர் விடிந்தவுடன், திருவையாறு சென்று, அம்பாள் கனவில் குறிப்பிட்ட நபர் வீடு தேடிச்சென்று, அவரிடம் விவரங்களைக் கூற, அந்த நபரும், தன் கனவிலும் அம்பாள் தோன்றி இவ்வாறே கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். விக்ரஹங்கள் தங்கள் வம்சத்தில் பரம்பரையாக இருந்து வருவதாகவும், தற்போது முறையாக பூஜை செய்ய வசதி இல்லாததால், மூட்டைகட்டி மேலே பரணில் வைத்து விட்டதாகவும் அந்த நபர் கூறி, அம்பாள் உத்திரவு கொடுத்தபடி விக்ரஹங்கள் அனைத்தையும் ஸ்ரீ விஸ்வநாத அய்யர் வசம் ஒப்பதைத்துவிட்டார். விக்ரஹங்கள் தங்கள் பரம்பரையில் சுமார் 300 வருடங்களாக இருந்து வருகிறது. இவ்வாறாக தங்கள் வம்சத்திற்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மற்றும் இதர விக்ரஹங்கள் வந்த கதையை ஸ்ரீ பெரியவாளிடம், தர்மராஜ அய்யர் கூறி, தான் செய்யும் பூஜை முறைகளைப் பற்றியும் அவரிடம் தெரிவித்து மஹாபெரியவாளின் ஆசிகளை பெற்றுள்ளார்.”
மேலும் ஸ்ரீமதி ருக்மணி அவர்கள் இன்னொரு நிகழ்ச்சியையும் நினைவு கூறுகிறார்.
" மஹாபெரியவர் எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்து, பூஜை அறையைவிட்டு, வெளியே வரும்போது, வீட்டுக் கூடத்தில், ஒருவர் மட்டும் தரிசனம் செய்ய வராமல் படுக்கையாக இருந்ததைப் பார்த்துவிட்டு, இது யார் ? ஏன் எழுந்திருக்கவில்லை? என பெரியவர், என் தந்தையாரிடம் கேட்க, தனது தமயனாரின், மாட்டுப்பெண் கடந்த சில தினங்களாக உடம்பு சரியில்லாமல் இருந்து, தற்போது, பக்கவாத நோயினால், எழுந்திருக்கமுடியாமல் உள்ளதாகவும், அதனால் பெரியவா தரிசனத்திகு வரமுடியாமல், மனம் வேதனைப்படுவதாகவும் கூறினார். மஹாபெரியவா நின்ற இடத்திலேர்ந்து, அந்த அம்மாள் படுத்திருந்த திசை நோக்கி, தன் கை கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தினால், தெளித்துவிட்டு, தான் தங்கியிருந்த இடம் நோக்கி, திரும்பச் சென்றுவிட்டார்.
என்ன ஆச்சரியம் ! கை, கால், இயங்காமல் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்த எங்கள் மன்னி,(பெரியப்பாவின் மாட்டுப் பெண் ) பெரியவர் எங்கள் கிரஹத்திற்கு வந்து சென்ற இருதினங்களிலேயே உடம்பு ஸ்வஸ்தமாகி, எழுந்து நடமாடஆரம்பித்துவிட்டார்." என்று கூறி முடிக்கும்போது அவள் கண்களில் நீர் முட்டியது.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தீபம்  ஸ்லோகம்:
விருத்தம்:
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சந்த்ர வதயே நித்ய தீபஸ்ய ரூபக்ரஹ...
சாந்தி நித்ய மங்களே...
பாபாந்த்ர ஹாரே பூபஞ்சனி ப்ரத்யட்ச தேவீ மனோபாவ
ஸம்பூர்ணானந்த ஜாஜ்வல்ய ஜோதி ஸ்வரூபே.. த்ரைலௌக்ய நாயகி...

ஸ்லோகம்;
அண்டண்ட புவனங்கள் கொண்டாடும் ஜோதியே!
அகில ரஹித‌ சுக்யான மெய் ஜோதியே!
சதகோடி பானு ப்ரகாச மெய் ஜோதியே!
ஸகல  லோகங்களுக்கும்  ஏக மெய் ஜோதியே!
முக்குணமும் மும்மூர்த்தியான மெய் ஜோதியே!
எக்காலும் ஒளிவீசும் இன்பமய ஜோதியே!
தீபமாம் நமஸ்துதே துல்ய மெய் ஜோதியே!
பாப ஸம்ஹார ப்ரம்மானந்த ஜோதியே!
நாசிமுனை நின்றதொரு நீல மெய் ஜோதியே!
மாசில்லாது வளரும் அக்ஞான ஜோதியே!
முப்பத்து முக்கோடி முடித்தாளும் ஜோதியே!
இப்போது வந்தென் முன் ஆளும் மெய் ஜோதியே!
ஓங்கார வடிவான ஒளிவீசும் ஜோதியே!
நீங்காத நடுநிலை நின்ற மெய் ஜோதியே!
நேதாக்னியான நிகண்ட மெய் ஜோதியே!
க்ரோதாதி மோகம் கொளுத்தும் மெய் ஜோதியே!
ஏமச்சுடர் வீசி எரிந்தோங்கும் தீபமே!
என்னாளும் அழியாத பலன் தரும் தீபமே!
சந்தியா காலத்தில் செழித்தோங்கும் தீபமே!
அந்தகாரங்களை அழிக்கும் மெய் தீபமே!
பஞ்ச லிங்காகார பூதமெய் தீபமே!
காஞ்சி மாபுரி காமகோடி நில தீபமே!
தில்லையில் வாழ்கின்ற சிவகாமி தீபமே!
எல்லைப் பிடாரி யாய் எரிந்தோங்கும் தீபமே!
அண்ணாமலை வளரும் அருணகிரி தீபமே!
உண்ணாமுலையாக ஓங்கும் மெய் தீபமே!
மயிலை நகர் தன்னில்
மணக்கும் மெய் தீபமே!
மதுரையில் விளையாடும் மீனாட்சி தீபமே?
காசி விஸ்வேஸ்வரர்  கண்டு களிக்கும் மெய் தீபமே!
கோமதி கௌரி கௌமாரி மெய் தீபமே!
பெண்களுக்கழகான பதிவ்ரதா தீபமே!
கண்காட்சி யானதொரு கனிந்த மெய் தீபமே!
காளாஸ்தியில் வாழும் ஞானாம்பாள்  தீபமே!
கண்ணப்பர் கண்டு களிக்கும் மெய் தீபமே!
பூத தேகத்தை பொசுக்கும் மெய் தீபமே!
வேதனைகள் அகற்றும் விக்ஞான மெய் தீபமே!
லக்ஷ்மி பராசக்தியான மெய் தீபமே!
பக்ஷமாய் இக்ஷணம் போற்றினேன் தீபமே!
கஷ்டங்கள் வாராமல் காக்கும் மெய் தீபமே!
இஷ்ட தேவதை உன்னை ஏற்றினேன் தீபமே!
எந்நாளும் அழியாத பலன் தரும் தீபமே!
எமபாதை இல்லாமல் செய்யும் மெய் தீபமே!
சகல பாக்யம் தரும் ஸாஸ்வத தீபமே
சுந்தரி மனோகரி சுகம் தரும் தீபமே
நமஸ்தே !நமஸ்தே!
நமஸ்தே... நமஹா🙏

*சிறுமி வடிவத்தில் அருள் பாலிக்கும்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி*

காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார்.

வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார்.

பின்பு பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.

அப்போது அவருக்கு சற்றே நாவறட்சி ஏற்பட்டு, தண்ணீர் பருக வேண்டும் என்று தோன்ற தனது சிஷ்யர் ஒருவரை அழைத்தார். மகா பெரியவா கேட்டது சிஷ்யர் காதில் விழவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு சிறுமி கையில் தண்ணீர் சொம்புடன் மகா பெரியவர் முன்பாக வந்து, "இந்தாருங்கள்.... தண்ணீர் கேட்டீர்களே" என்று கூறி கொடுத்தாள்.

அதை வாங்கிப் பருகிவிட்டு சொம்பை திருப்பிக் கொடுக்க சிறுமியை அவர் தேடியபோது அங்கு அவளை காணவில்லை.

உடனே தனது சிஷ்யரை அழைத்து விவரத்தைகூறி, "யார் அந்த சிறுமி தண்ணீரை நீங்கள் தான் சிறுமியிடம் கொடுத்து அனுப்பினீர்களா?" என்று கேட்க, அவர்களோ, "இல்லையே... அந்த சிறுமி யாரென்றே தெரியாது" என்று வியப்புடன் கூறினார்கள்.

தொடர்ந்து மகா பெரியவர் சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார்.

வந்தது சாட்சாத் அந்த அகிலமெல்லாம் காக்கும் அம்பிகையான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியே என்பதை உணர்ந்து, அன்றைய கிராமமான பழவந்தாங்கல் கிராம பெரியவர்களையும், ஊர் மக்களையும் அழைத்து,

"இந்த இடத்தில் அம்பிகை எங்கோ புதைந்து கிடக்கிறாள். உடனே தோண்டி கண்டு பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்க சென்றுவிட்டார்.

மகா பெரியவர் கூறியபடி, கிராமப் பெரியவர்கள் அந்த இடத்தைத் தோண்ட, முதலில் அம்பிகையின்
குழந்தை வடிவிலான விக்ரகமும், தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி விக்ரகமும் கிடைத்தது.

இந்தத் தகவல் மகா பெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் மகிழ்வுற்று, அந்த இடத்தில்
திரும்பவும் விக்ரக பிரதிஷ்டை செய்து, அந்த அம்பிகைக்கு 'ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி' என்ற
திருநாமத்தை வைத்தார்.

இதுதான், நங்கநல்லூரில்,
பழவந்தாங்கல்.. நேரு காலனியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில்.

இங்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, சிறுமி வடிவத்தில் அருள் பாலிப்பது சிறப்பு. இந்தக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது...

ஜெய ஜெய ஜெய சங்கரா!
ஹர ஹர ஹர சங்கரா!
சிவ சிவ சிவ சங்கரா!
🙏🙏🙏

No comments:

Post a Comment