Monday, 20 April 2020

வேலாயுத வழிபாடு

வேலாயுதம் எப்படி உலகத்தை எல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதற்கு
ஒரு ரகசிய குறிப்பு கந்தர் அலங்காரத்தின் 3 வது பாட்டில் காணலாம்...

தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
   கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர்
      நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்
         பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே

வேலாயுதம் அணுகுண்டு போல் சகல பிரபஞ்சத்தையும் அழிக்க
வல்லது என்பதை மேற்கண்ட அலங்காரத்தால் உணரலாம்.

எமன் அடியார்களைப் பற்ற வரும் போது, எப்படி மார்க்கண்டேயரைப்
பிடிக்க வந்த எமனை சிவபெருமானின் திருப்பாதம் உதைத்து
விரட்டி விட்டதோ, அது போல முருகப் பெருமானின் வேலாயுதமும்
நம்மைக் காக்கும் என்பதை வேல் வகுப்பில்,

தருக்கி நமன் முருக்கவரின் எருக்கு மதி
   தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகராகும்

என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள்

முருகன் வேறு .. வேலாயுதம் வேறு என்பது கிடையாது என்கிற
ரகசியக் கருத்தை,

உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள் உதயமென ..

என்கிற அதே அடை மொழியை வேலுக்கும் கூறுகிறார்.

முருகனுக்கு ஒரே சமயத்தில் சூரிய ஒளியுடன் சந்திர ஒளியும் உண்டு என்பதை
'சந்தர நிறங்களும்' என்கிற அடியில் காணலாம்.

அதாவது சூரியனைப் போல ஒளி உண்டு. ஆனால் வெப்பம் கிடையாது.
சந்தரனைப் போல குளிர்ச்சியும் உண்டு.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

உலகம் முழுவதும் பகிர்வோம்.


No comments:

Post a Comment