Thursday, 16 April 2020

தினம் ஒரு சித்தர் பாடல் - பட்டினத்தார்

பட்டினத்தார்*

*பரம் பொருளை அறிய முடியாமல் தவிக்கும் நிலை பாடல்*

*தந்திரத்தை உன்னித் தவத்தை மிக நிறுத்தி*
*மந்திரத்தை உன்னி மயங்கி தடுமாறி*

*விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல் அந்தரத்தே கோறெிந்த அந்தகன் போல ஆனேனே*

*பொருள்*

ஆகமங்கள் அறிவதால் பலன் இல்லை என்று எண்ணி தவமே மேலென்று அதிலே மனம் செலுத்தி வேதத்தை சிறப்பென்று ஓதியும் மனம் தெளிவின்றி மயங்கி தடுமாறி விந்து நாதத்திற்க்கு அப்பால் ஓங்கி நிற்க்கும் *பெரும் ஜோதியான பரம் பொருளைக்காணாமல்* ஆகாயத்தில் வெட்ட வெளியில் கோலை எறிந்துவிட்டு அது எங்கு போனது என்ன ஆனது எப்படி பிடிப்பது என்று தெரியாமல் தவித்து தடுமாறும் அந்தகன் போல ஆகிவிட்டேனே!

குறிப்பு: பரம் பொருளை அறிய பட்டினத்தாரின் அனுபவம் எக்காலத்துக்கும் பொருந்தும்.

ஓம் நம சிவாய

No comments:

Post a Comment