Thursday 16 April 2020

மருதமலையான் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்

மருதமலையான் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்

முன்னாளில் கொங்கு மண்டலத்தில் மக்களுக் கும், கால்நடைகளுக்கும் பாம்புகளால் ஏற்பட்ட தொல்லைகளும் இழப்பும் ஏராளமாகும்.

 எனவே,  பாம்புகளை அடக்கி அவற்றின் தொல்லைகளில் இருந்து காக்கும் மகான்கள் இம்மண்டலத்தில் தோன்றினர்.

இவ்வகையில் தோன்றியவர்களில் தலை  சிறந்தவர்கள் தம்பக்கலை ஐயன், வாழைத் தோட்டத்து ஐயன் போன்றவர்களாவர்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கொங்கு மண்டலத்தில் தோன்றி அன்பர்களுக்குத் துணை நின்றவர் பாம்பாட்டி சித்தராவார்.

இவர் பாம்புகளை  அடக்கி ஆண்டாலும், பாம்புகளை ஆடச் சொல்லி ஆடு பாம்பே என்று முடியும் வகையில் கருத்துகள் பொதிந்த பாடலைப் பாடியதாலும் பாம்பாட்டிச்  சித்தர் என்று பெயர் பெற்றார்,

இவரைப் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகப் போற்றுகின்றனர்.

மருதமலைக் காட்டிற்குள் இளைஞனொருவன் பாம்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். அவன் இடுப்பில் ஒரு மகுடி தொங்கி கொண்டிரு ந்தது.

நல்ல வளர்ந்த பாம்பாக தேடி பிடித்து அதனு டைய விஷத்தை எடுத்து வைத்தியர்களிடம் விற்று விடுவான்.

வைத்தியர்கள் அந்த விஷத்தை மூலிகை சாறுகளுடன் கலந்து மருந்து தயாரிப்பார்கள். அந்த மருந்துகள் புற்று நோய் , குட்டரோகம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவார்கள்.

பாம்புகளைப் பிடிப்பதில் இளைஞன் கில்லாடி. அவன் மகுடிக்கு மயங்காத பாம்புகள் இல்லை. பாம்புகளைத் தேடி காடுகளில் அலைவதுதான் இளைஞனின் அன்றாடப் பணியாக இருந்தது.

இருப்பினும் அவனுக்கு போதிய விஷம் கிடைப்பதில்லை.

ஒவ்வொரு புற்றாக சிதைத்து அதிலிருக்கும் கூட்டிப் பாம்புகளைப் கொன்றுவிட்டு பெரிய பாம்புகளைப் பிடித்து விஷத்தை எடுத்து குப்பிகளில் அடைத்து கொள்வான்.

நூறு வயதான ராஜநாகத்திடம் நாகரத்தினம் என்றொரு ரத்தினம் இருக்குமாம்.

அது கிடைப்பவனைத் தேடி உயர்ந்த செல்வங்களெல்லாம் ஓடிவருமாம்.

பேரரசர்கள் கூட அந்த மணி இருபவனைப் பணிவார்களாம்.

அது மட்டும் நமக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவனுக்குள் ஒரு ஆசை இருந்து கொண்டிருந்தது.

பாம்புகளைத் தேடுமொழுதில் நூறு வயது ராஜநாகம் கண்ணில் படாதா? படும் படும் என்றாவது ஒரு நாள் அந்த ராஜநாகம் கண்ணில் படும்.

அந்த ராஜநாகம் இடமே பிரகாசமாக இருக்குமாம்.

இந்த அடையாளத்தை வைத்து அந்தப் பாம்பைப் பிடித்துவிட்டால் , அந்த நாகரத்தினம் என் கைக்குள் வரும். அப்போது நான் உலகில் பெரும் செல்வந்தன் என்று எண்ணிக்கொள்வான்.

ஒரு நாள் காட்டிற்குள் பாம்புகளைத் தெடிக் கொண்டிருந்தபோது ஒரு புற்றிற்குள்ளிருந்து பிரகாசமான ஒளி வெளிப்பட்டு கொண்டிருந்தது.

இளைஞனுக்கு ஆச்சரியம். நூறு வயது ராஜநாகம் வெளியில் வரும் போலிருக்கிறது.

 அது பறந்து செல்வதற்குள் எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று மெதுவாக புற்றை அணுகினான்.

புற்றை உதறிக் கொண்டு முனிவர் ஒருவர் எழுந்தார்.

இளைஞன் ஆச்சரியம் அடைந்தான்.

முனிவரோ இளைஞனைப் பார்த்து என்ன? ராஜநாகம் என்று நினைத்து ஏமாந்து விட்டாயா?

நாகரத்தினம் கிடைத்து விட்டால் உலகப் பணக்காரனாகி விடலாம் என்ற எண்ணமா?

சரி அது கிடைத்து விட்டால் எல்லாமே கிடைத்து விடுமா? என்றார்.

இளைஞன் தன்னையாரியாமல் அவரது கால்களில் விழுந்தான். ஐயா! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் மின்னுகிறதே என்று அதிசயித்தான்.

மகனே! இந்த உடல் அழிந்து போகும். பொன்னும் பொருளும் காணாமல் போகும். அழிய போகும் இந்த செல்வத்திற்காகவா நூறு வயது பாம்பை தேடி அலைகிறாய்?

அதைவிட பெரும் செல்வம் தரும் பாம்பொன்று இருக்கிறது அறிவாயா?

 ஸ்வாமி அந்த பாம்பு எங்கே இருக்கிறது? முனிவர் சிரித்தார்.

இன்னும் ஆசை அதிகமாகும் போலிருக்கிறதே. அந்தப் பாம்பு எங்கேயும் இல்லை. அது உன்னிடமேதான் இருக்கிறது என்றார் முனிவர்.

அப்படியா? ஏற்கனவே அதை நான் பிடித்து விட்டேனா? எங்கே இந்தக் கோணியில் இருக்கும் பாம்புகளில் அது இருக்கிறதா என்றவாறு பாம்புகளைப் போட்டிருந்த தன் கோணிப் பையை பிரித்தான்.

முனிவர் இப்பொது சத்தமிட்டு சிரிக்க ஆரம்பித்தார். ஏன் ஸ்வாமி சிரிக்கிறீர்கள்? மடையா அது உன்னிடம் இருக்கிறது என்றால் உன் உடலில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

ஸ்வாமி குழப்புகிறீர்களே? இளைஞன் தலையை சொறிந்தான். வா என்னருகில் என்றார்.

இளைஞனே! உன்னை முறைப்படுத்தவே நான் வந்தேன். உன் எதிர்காலத்தை நான் அறிவேன். வா அருகே என்றார்.

அவரது குரலில் இருந்த வசியம் இளைஞனை இழுத்தத்து.

அருகில் சென்று அவர் பாதங்களை பணிந்தான். சடேரென அவனது முதுகில் ஓர் அடிவிட்டார் முனிவர்.

இளைஞனின் முதுகுத் தண்டின் அடிபாகத்தில் சுருண்டு படுத்திருந்த குண்டலினி சக்தி என்ற நாகம் படமெடுத்து சீறி இளைஞனின் சிரசை நோக்கி விரைந்தது.

இளைஞன் ஆனந்தத்தில் கூச்சலிட்டான். கதறி அழுதான்.

அவனது முன் ஜென்மங்கள் எல்லாம் அவன் கண்ணில் தெரிந்தது.

தன் எதிரே இருக்கும் முனிவர் சட்டை முனி என்ற மாபெரும் சித்தர் , சென்ற பிறவியில் அவரிடம் சேவையாறியதன் பலன் இந்தப் பிறவியில் என்னை ஆட்கொள்ள வந்திருக்கிறார் என்பதைத் தெளிந்தான்.

முனிவர் அவனை ஆசிர்வதித்தார். அவனை சீடனாக ஏற்றுக் கொண்டு சகலமும் அங்கேயேக் கற்று தந்தார்.

மகனே! நீ பாம்பாட்டிப் பிழைத்த வந்தபடியால் எல்லோராலும் பாம்பாட்டிச் சித்தர் என்றழை க்கப் படுவாய். மக்கள் சேவை புரிந்து இறைபடி சேர்வாய் என்று கூறி மறைந்தார்.

பாம்பாட்டிச் சித்தர் என்றழைப்பட்ட இளைஞருக்கு அஷ்டமா சித்திகளும் கைகூடின.

வானில் பறக்கவும் ஆற்றல் வந்தது. கல்லைத் தொட்டு அதை மணிகளாக்க முடிந்தது.

அவர் நாகரத்தினத்தைத் தேடியது போய் இப்பொது அவர் கல்லைத் தொட்டாலும் அதை நாகரத்தினமாய் மாறியது.

 அனால் அவற்றின் மேலிருந்த ஆசைகள் அவரை விட்டு விலகின.

ஒரு நாள் அவர் வான் வழியே சென்று கொண்டிருந்த போது , ஒரு நகரில் முந்திய இரவில் நகர்வலம் வந்த அரசனை பாம்பு தீண்டி இறந்து போய் கிடந்தான்.

அவனைச் சுற்றி நின்று அரசியும் , அமைச்சர் களும் , மக்களும் அழுது கொண்டிருந்தனர்.

அரசனைக் கடித்தப் பாம்பை அருகில் அடித்துப் போட்டிருந்தனர். பாம்பாட்டிச் சித்தர் அரசனின் உடலுக்குள் புகுந்தார்.

அரசன் உயிர் பெற்று எழுந்தான். ராணியோ பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்.

அருகில் ஓடி வந்த ராணியை கைகாட்டி நிறுத்தி விட்டு பாம்பின் அருகில் சென்று பாம்பே எழுந்திரு என்றார்.

பாம்பு உயிர்பெற்று ஊர்ந்து ஓடியது. மக்கள் திகைத்தனர்.

உயிர் பிழைப்பது என்பது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா? ஆதி வாங்கி செத்தும் வாழும் ஆசை போகவில்லையா பாம்பே என்று பாம்பிடம் பேசிய மன்னனைக் கண்டு அரசி வியந்தாள்.

எப்போதும் அந்தப்புர அழகிகளிடமே மயங்கி கிடந்து ஆனதப்படும் அரசன் இப்படி தத்துவம் பேசுகிறானே , இவன் புத்தி பேதலித்து விட்டதா என்று வியந்தாள்.

மன்னா! இதென்ன அதிசயம் தாங்கள் எப்படி உயிர்பிழைத்தீர்கள்? பாம்பையும் உயிர்ப்பித்தீர்கள்?

தாங்கள் உண்மையில் இப்பொது யார்? என்றாள்.

பெண்ணே உன் கணவனின் உடலில் இருக்கும் ஏன் பெயர் பாம்பாட்டி சித்தன்.

பெண்ணே இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. நிரந்திரம் என்பது இறைவனின் திருவடிகளே. பிறவிகள் தொடருகின்றன.

எனவே இறப்பிற்காக அழ தேவையில்லை என்றார்.

பின்னர் சித்தர் மன்னரின் உடலிலிருந்து விடுபட்டார்.

சில காலம் அந்நகரில் தங்கியிருந்து பல பாடல்களை இயற்றினார்.

அவை பாம்பாட்டி சித்தர் பாடல்கள் என வழங்கப்பட்டன.

நோய்களுக்கு மருந்துகள் தயாரித்து கொடுத்தார். பல வைத்திய நூல்களையும் இயற்றினார்.

சித்தர் ஆரூடம் என்ற ஜோதிட நுழையும் எழுதினார்.

பாம்பாட்டிச் சித்தர் பிறந்த ஊர் புதுக்கோட்டை யின் அருகிலுள்ள கோகர்ணம் என்று கூறுகின்றனர்.

வருடங்களும் நாட்களும் வாழ்ந்து மறைந்த பாம்பாட்டிச் சித்தர் மருத மலையில் சித்தி அடைந்தார் எனவும் , விருத்தாசலம் பழமலையில் சித்தியடைந்தார் எனவும் கூறுகின்றனர்.

இரண்டு இடங்களிலும் இவரது சமாதி உள்ளது.

சங்கரன் கோயில் என்ற இடத்தில பாம்பாட்டிச் சித்தர் சமாதி அடைந்தார் என்பதற்கு தற்போது பல நூல் ஆதாரங்களை காட்டி நிரூபித்துள்ளனர்.


*FORWARD MESSAGE*

No comments:

Post a Comment