Tuesday, 28 April 2020

ஒரு நண்பர் கேட்டுக்கொண்டதர்கினங்க வாசி பற்றி வித்தியாசமான ஒரு பதிவு

ஒரு நண்பர் கேட்டுக்கொண்டதர்கினங்க வாசி பற்றி வித்தியாசமான ஒரு பதிவு இடலாம் என்று எண்ணுகிறேன். வ் + ஆசி = வ் என்றால் வான் சக்தி வான்காந்தம் விண்ணுலகம் விண்ணவர்கள் , ஆசி என்றால் அருள் செய்தல். வ என்று உச்சரிக்கும் பொது அ சத்தம் வரும் - வ வுக்குள்ளே அ இருக்கிறது ; வ் என்று உச்சரிக்கும் போது இ சத்தம் வரும் இவ் என்று தான் உச்சரிக்க வேண்டும் - எனவே வ் க்குள்ளே ஏ இருக்கிறது ; சி என்றால் ஏ சத்தம் வரும் - எனவே ஸ் குள்ளே இ இருக்கிறது ; வா குள்ளே ஆ இருக்கிறது. புள்ளி வைத்தால் தான் இ சத்தம் வரும் எனவே புள்ளிக்கு உரிய எழுத்து இ ஆகும் ; சுவாசி என்ற எழுத்துக்குள்ளே வாசி இருக்கிறது - எனவே சுவாசத்தினுள்ளே வாசி இருக்கிறது ; வாசி இல் சிவா தலை கீழாக இருக்கிறது. தலைமை இடம் ஆனது தலையில் இல்லாமல் மூலாதாரத்தில் இருக்கிறது . அதுவே வாசி செய்யும் போது கீழே உள்ள தலை மேலே தலைக்கு ஏறுகிறது அப்போது வாசி என்பது சிவா என்று ஆகிறது. வாசி என்பது உயிர். நமது உடலை தாங்கி பிடித்து உள்ள சக்தி. வாசி என்பது இயங்கும் சக்தி - உயர்வு நிலை - கல்லிலும் உயிர் உண்டு மண்ணிலும் உயிர் உண்டு. கல்லை உறைநாள் நெருப்பு வரும் நீரை கொதிக்க வைத்தால் ஆவியாகும். அவற்றில் உயிர் இருப்பதால் தானே அவை தம் உணர்வுகளை இவ்வாறு வெளிப்படுத்துகின்றன. உலகம் சுழலுதலும், சூரிய கதிர்கள், கிரகங்கள் நிலவு, எல்லாமே ஒரு பேரியக்கம் தான். அதன் ஒரு சிறு பகுதி இயக்கமே நமது உடலில் உள்ள இயக்கம். அது தான் வாசி.. உயிரை பறிப்பதற்கு முன் உயிரை பிரிக்க வேண்டும். நாமாகவே உயிரை பிரித்து பார்க்கும் கலை வாசி கலை உயிரை பறிப்பது எமன் - அது எப்போது, எப்படி என்று அவன் எடுக்கும் முடிவு. ஆனால் வாசியின் மூலம் உயிரை பிரிப்பது என்பது நாம் சுயமாக செய்யும் செயல். இதில் மரணம் நிகழாது. இதில் மங்களம் நிகழும். நமது உயிர் நம் கையில். எமன் வந்து பறிக்க முடியாது. நாம் விழிப்பு நிலையில் சதா சிவமாக சிவத்தை பற்றி கொண்டு இருக்கும் போது எமனால் ஒன்றும் செய்ய முடியாது. சிவம் என்றால் தோன்றா நிலை, அல்லது மனமற்ற நிலை, தூய மனம், சூன்ய நிலை, வெற்றிடம் என்று எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். வாசி ஆரம்பிக்க வேண்டுமானால் மனம் ஒடுங்க வேண்டும். தவம் கூட வேண்டும். தவம் செய்ய வேண்டும். தவம் செய்யும் போது மனம் அலைபாயாமல் சிந்தனையற்று ஒடுங்கி நிற்க வேண்டும். அப்போது மனம் ஒடுங்கிய நிலையில் எண்ணங்கள் நீங்கிய நிலையில் தான் சுவாசமும் நிற்கும். சுவாசத்தை மூக்கினால் இழுத்து காற்றை உள்ளே நிறுத்தி அடக்கி வைத்தல் ஆகாது, அது மிகுந்த உஷ்னத்தையும் பித்து நிலையையும் கொடுக்கும். இது தான் நுழைவு வாயில். யாரவது முயற்சி செய்து இந்த நுழைவு வாயிலை தட்டினால் கதவு திறந்தாள் வாசி ஓடினால் மேலும் பல அதிசயங்கள் காத்து இருக்கின்றன. யாருக்கு வாய்க்குமோ அவருக்கே வாய்க்கும்.

5 comments:

  1. உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை...lock down time தினமும் உங்களின் face book பதிவை படிப்பேன் ..

    ReplyDelete
  2. நான் இதை எதிர்பார்க்கவில்லை... அடியேன் தான் இதை கேட்டது பயன் உள்ளதாக இருந்த்து... நீங்கள் பதிவு இடமல் கடந்து சென்று விடுவார்கள் என்று நினைத்தேன்.... நன்றி ஐயா

    ReplyDelete
  3. நல்லது அய்யா நன்றி அய்யா. மேலும் மகத்தான அனுபவங்கள் உண்டு

    ReplyDelete
  4. மிகவும் அருமையான பதிவு அய்யா....

    ReplyDelete