Tuesday 21 April 2020

தரும சத்திய சிந்தனை துளிகள்

தரும சத்திய சிந்தனை துளிகள்
உணர்ச்சி என்பது வேறு உணர்வு என்பது வேறு ஒருமிக அருமையான  பாடலை கேட்டுக்கொண்டு அதை ரசிக்காமல் வேலையில் கவனம் செலுத்தி இருப்பது உணர்வற்ற செயல். ஒரு தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நின்று வணக்கம் செலுத்தி நாமும் சேர்ந்து பாடும் பொது மனதில் ஏற்படும் உணர்வு மிக சிறந்தது . அது வேறு நாட்டு தேசிய கீதத்தில் வராது. எடைதூக்கும் போட்டியில் போட்டியாளனுக்கு எடையை தன தலைக்கு மேலே உயர்த்தி காட்டும் போது ஏற்பாடு ஒரு உணர்வு - அதை பார்ப்பவர்களுக்கு அந்த உணர்வு கிடைக்காது - அந்த செயல் செய்பவனுக்கு மட்டுமே அந்த உணர்வு ஏற்படும் - தாய்மை ஒரு உணர்வு - அன்பு ஒரு உணர்வு - பசி ஒரு உணர்ச்சி - தாகம் ஒரு உணர்ச்சி - பிச்சைக்காரனுக்கு சாதராண தயிர் சாதமே மிக பெரிய நல்ல உணர்வை கொடுக்கும் - ஆனால் பெரிய பணக்காரனுக்கோ தயிர்சாதம் இழிவை கொடுக்கும் உணர்வை ஏற்படுத்தும் - எனவே உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் வேறு வேறு வகையானது ஆகும்
இறைவனுக்கு புறத்தில் செயல்கள் செய்யும் போது - அதாவது மலர் அர்ச்சனை தீப ஆரத்தி அபிஷேகம் மங்கள வாத்தியம் ஊர்வலம் தேரோட்டம் திருமணம் வேள்வி ஆகிய பல செயல்களை செய்யும் பொது ஏற்படும் உணர்வுகள் தான் மிக முக்கியம். அணைத்து செயல்களும் செய்பவர்களின் உணர்வுடன் கலந்து செய்யும் போது  தான் முழுமை பெறுகிறது. மேலோட்டமாக இறை உணர்வு இல்லாமல் அகந்தையுடன் செய்யும் செயல்களில் அந்த இறை உணர்வு என்பது ஏற்படாது - உணர்வுகள் பல வகை - அன்பு கோபம் கருணை இரக்கம் ஆச்சர்யம் வெட்கம் போல பல வகைகளை கூறலாம் . காமம், வலி, எரிச்சல்,கசப்பு, இனிப்பு , மோகம், இரைச்சல், சத்தம் ஆகியவை உணர்ச்சிகள்.
நீங்கள் ஆங்கில படங்களில் பார்த்து இருப்பீர்கள். வேற்று கிரகத்துக்கு நாம் செல்ல வேண்டுமானால் அந்த கிரகத்துக்கு ஏற்றவாறு முழு உடல் கவசம் சுவாச வாயு உடல் வெப்பம் கட்டுக்குள் வைத்திருக்கும் சாதனங்கள் ஆகியவை அணிந்து கொண்டு தான் வேற்று கிரகத்தில் இறங்குமாறு காண்பிப்பார்கள். அந்த வகையில் நாம் நமது உலகத்திலேயே இருக்க வேண்டுமானால் அத்தகைய கவசங்கள் அவசியமில்லை. எந்த கவசங்களும்  இல்லாமல் நாம் சுதந்திரமாக உலவி வரலாம். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் இந்த உலகத்துக்கு வரும் போதே கவசத்துடன் தான் வருகிறோம் கவசம் செயல் இழந்தவுடன் நாம் உலகத்தை பிரிகிறோம். நாம் ஒரு சிறிய ஒளி துகள். அந்த சிறிய ஒளி துகள் இந்த உலகத்தில் வாழ வழியில்லை. இந்த உலகத்தில் வாழ வேண்டுமானால் அந்த ஒளி துகள் தனக்கு உண்டான கவசத்தை தானே உருவாக்கும் திறமை வேண்டும். அவரவர் திறமைக்கு ஏற்றவாறு கவசங்கள் எறும்பு, விலங்கு , பறவை மனிதன் - ஆண் , பெண் ஆகிய கவசங்கள் உருவாக்கி கொள்கின்றனர். இப்போது உங்களுக்கு வாழ்க்கை தத்துவம் புரிந்திருக்கும். நாம் உலகில் வாழ கவசம் தேவை - உலகம் நமது இடம் கிடையாது - வேறு பரிமாணத்தில் இருந்து நாம் உலகத்திற்கு வருவதற்காக உடல் என்னும் கவசம் ஏற்படுத்தி கொண்டு வருகிறோம். தாயின் கருவறையில்  மாதம் உழைத்து தனக்கான கவசத்தை ஏற்படுத்தி பின்னர் பாதுகாப்பாக உலகத்தினுள்ளே வருகிறோம். உள்ளே இருப்பவன் வேறு , வெளியே உள்ள கவசம் வேறு. வெளியே உலகத்தில் பல உணர்ச்சிகள் பலவகையாக ஏற்படுகின்றன அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஏற்படும் உணர்ச்சிகள் அறியப்படுகின்றன. அவை கவசத்தில் வந்து மோது உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த உணர்ச்சி உள்ளே இருக்கும் ஒளி துகளாகிய ஆத்மனுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கே ஆத்மனுக்கு எடுத்து செல்லும் முன்னர் அந்த ஆத்ம அரசனின் மந்திரியாகிய மனம் என்னும் ஆறாம் அறிவு அந்த உணர்ச்சிக்கு விளக்கம் கொடுத்து ஒரு தவறான பதிவை ஏற்படுத்தி வைக்கின்றது. அதுவே கர்மா. இந்த உடல் ஒரு கவசம், இந்த கவசம் தினமும் அழிந்து கொண்டு, பலம் குன்றிக்கொண்டு கெட்டு போய்க்கொண்டு இருக்கிறது. இந்த கவசம் நாம் உருவாக்கியது. ஆனால் இது உறுதியானது இல்லை. தினமும் மூன்று வேளை இந்த கவசத்தை பழுது பார்க்கும் செயலே உணவு இட்டு பஞ்ச பூதங்களை உடலில் சேர்த்து கொள்ளுதல். உறங்குதல் கவசத்தை பலமாக்கும் ஒரு செயல்.
இந்த உலகத்தில் கடினப்பட்டு கவசம் உருவாக்கி ஒரு வேலைக்காக வந்து நுழைந்து இங்கே உலகில் வெளி வந்த அந்த மாத்திரத்திலேயே எல்லாம்மும் மறந்து போய், பாதி நேரம் கவசத்தை சரி செய்யும் பணியிலும் மீதி நேரம் பொருள் ஈட்டி உணர்ச்சிகளை அனுபவிக்கவும் சில வகை உணர்வுகளை அனுபவிக்கும் செலவு செய்து முடிவில் வீடியோ விளையாட்டில் கேம் ஓவர் ஆவது போல ஒரு நாள் கவசம் முழுமையாக பழுதுபட்டு பாழ்படும் போது, அந்த ஒளி துகள் உலகில் இருந்து வந்த வேலையே முடிக்காமலேயே வெளியேறுகிறது.
சரி மீண்டும் உணர்ச்சி மட்டும் உணர்வுகளுக்கு வருவோம். ஆலயத்தில் கடவுளை மனம் ஒன்றி வழிபடும் போது ஒரு நிறைவு என்பது உள்ளே ஏற்படும் மிக நுண்ணிய உணர்வு. தமது பொருட்களை கடவுளுக்கு அர்பணிப்பதால் ஏற்படும் ஒரு உணர்வு, கவலைகள் மறந்த நிலை, ஒரு வகையான நிம்மதி, ஒரு வகையான பாதுகாப்பு உணர்வு, தாயின் மடியில் பொறுப்பில் இருக்கும் ஒரு உணர்வு, ஒரு சுதந்திரம், அச்சமில்லாத ஒரு உணர்வு ஆகிய பல உணர்வுகள் ஒருங்கிணைந்த சங்கமம் தான் கடவுள் உணர்வு. மனதில் தீய எண்ணம். கோபம், காமம், மோகம், மதம் சுய லாபம் , சுயநலம், பண மோகம், பொறாமை, ஆகியவை வைத்து கொண்டு கடவுள் வழிபாடு செய்தால் எந்த ஒரு மண்ணாங்கட்டி உணர்வும் கூட வராது. அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். சுயநலமில்லாத ஒரு செயல் செய்ய வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிந்தித்தி பாருங்கள் - என்ன செயல் செய்யலாம்.
பத்திரிகைகளில் வருவது போல, குப்பை அகற்றுவது போல படம் எடுத்து போட்டு சமுதாயத்துக்கு நல்லது செய்வது போல காட்டி கொள்வது சுயநலம் - போலி புகழ். சத்தமே இல்லமால் 100 பேருக்கு உணவு ஏற்பாடு செய்து விட்டு தான் செய்ததை வெளியே காட்டிக்கொள்ளாமல் எல்லாம் இறைவனின் கருணை என்று இயம்புவது பொது நலம் - அதில் எந்த சுயநலமும் இல்லை. அவ்வாறு செய்ய வேண்டுமானால் தான், தனது குடும்பம், தனது உறவினர், தனது நண்பர், தனது ஜாதி, தனது மொழி, தனது இனம் என்ற எல்லா சுயநலன்களையும் தாண்டி முகம் காட்டாமல் முகம் தெரியாத நபருக்கு உதவி செய்வதில் தான் உண்மை சத்தியம் புதைந்து உள்ளது. அவ்வாறு ஒருவன் செய்ய வேண்டுமானால் அவனது பற்றை விளக்க வேண்டும். குடும்ப பற்று, தன மீது உள்ள பற்று, தன பந்தங்கள்,நண்பர், மொழி இனம் தாண்டி பற்றறுக்க வேண்டும். மனிதனுக்கு மனிதன் உதவுவதை விட மனிதன் அல்லாத விலங்குகள் உயிரினங்கள் ஆகியவற்றுக்கு உதவுவது இன்னமும் சால சிறந்தது. சரி மீண்டும் ஆரம்பத்துக்கே வருவோம். ஏன் பற்றை விலக்க வேண்டும் - மனம் அடங்க ; ஏன் மனம் அடங்க வேண்டும் - அப்போது தான் இறை உணர்வு முழுமையாய் கிடைக்கும் ; இறை உணர்வு என்பது எது - அது தான் அந்த மனித கவசம் அணிந்து உள்ள ஒளி துகள் ; என் ஒளி துகளாக உணர வேண்டும் - இப்போது ஞானம் இல்லாமல் ஒளி துகளை உணராமல் இந்த கவசம் தான் உண்மை என்று எண்ணிக்கொண்டு மதி மயங்கி உணர்ச்சிகளுக்கு அடிமையாகி வந்த வேலையையும் கவனிக்காமல் மயங்கி கிடக்கிறான்.
நாம் சாலையில் செல்லும் போது ஒருவர் மயங்கி இருக்கிறார் என்றால் அவரை அப்படியே சும்மாவா விட்டு விட்டு செல்வது. அவருக்கு மயக்கம் தெளிவிப்பது நமது பொறுப்பல்லவா. இந்த உலகம் ஒரு மதி மயக்கும் கூடம் , இதனுள் நுழைபவர் ஆத்ம பலம் குன்றி சுய நினைவை இழக்க வேண்டும் என்பது தான் இந்த விளையாட்டே. ஆம் மனித வாழ்க்கையே ஒரு விளையாட்டு போல தான். இந்த மாயை மயமான மனதில் எண்ணங்களை விலக்கி தூய மனதுடன் இருக்கும் போது அந்த இறைநிலை உணர்வு ஏற்படுகிறது அப்போது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணி தன சுய நலத்தை பெரிதும் கருதாது தருமம் செய்து கடவுளை ஆலயத்தில் தொழும்'போது மனிதனுக்கு அந்த கடவுள் உணர்வு என்பது ஏற்படும்.கடவுளை உணர வேண்டுமானால் சுய நலத்தை விட வேண்டும். மற்றவர் நன்றாக இருக்க வேண்டும், அதற்கு நாம் உதவ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அப்போது தான் இறை நிலை உணர்வு பற்றியே பேச முடியும். மனம் அடங்கிய ஞான நிலையில் சத்தியத்தில், பொது நலத்தில் இருக்கும் போது தான் இறை உணர்வை பெரும் தகுதியே ஒருவனுக்கு வாய்க்கும். பொது நலம் பேணும் பொது ஆனந்தத்துடன் செய்ய வேண்டும் ; அதை ஒரு கடனுக்காக செய்தால் அதில் உணர்வு மெய்ப்படாது. தன முனைப்பு அடங்கி ஆணவம் அடங்கி அன்பும் கருணையும் பெருகும் நிலையே தானம் ஆகும். அந்த நிலையில் இருக்கும் மனம் மட்டுமே ஒரு நிலையில் அடங்கும் தன்மை பெரும். பல பூசை முறைகளில் ஈடுபட்டாலும் மனம் அடங்கும், யோக முறைகளில் ஈடுபட்டாலும் மனம் அடங்கும், சும்மா இருந்தாலும் மனம் அடங்கும். ஆகவே சுயநலம் துரைப்பீர் பொது நலம் மிகுவீர், கருணை கொள்வீர் மற்றவர்களுக்கு இயன்ற உதவியை செய்வீர், எக்காரணமும் கோபம் கொள்ளவே கூடாது, குறை கூற கூடாது, எந்த தீய குணங்களும் அறவே கூடாது - அவைகளில் எது வந்தாலும் அங்கே சுய நலம் வந்து விடும்
 ...............Trs 21/04/2020

No comments:

Post a Comment