Thursday, 16 April 2020

தினம் ஒரு திருமந்திரம்

தினம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #778 : மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரிட்சை

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடில்

பாயிரு நாலும் பகையற நின்றிடும்

தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்

ஆயுரு வாறென் றளக்கலு மாமேல்

விளக்கம் :

மூச்சுக்காற்று ஒரு நாடியின் வழியாகவே இருநாட்கள் சென்றால் கன்மேந்திரியத்ததின் வழியாக கீழே செல்லும் அபானன் என்னும் பகைக்காற்று தடைபட்டு மூச்சுக் காற்றுடன் மூன்று நாட்கள் இணைந்தது நிலை பெற்று இருந்தால் ஆயுள் வளர்ச்சி அடையும்.


No comments:

Post a Comment