Sunday, 5 May 2019

அகத்தியர் வாக்கு - இறையருளை பெறுதல்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பாெது வாக்கு :*

*இறையின் அனுக்ரகம் மழை என்று வைத்துக் காெள்வாேம்.* அதை ஒவ்வாெரு மனித பாத்திரமும் வைத்துக்காெள்ளத்தான் வேண்டும். பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறையின் அருள் பிரசாதத்தை ஏன் பல்வேறு மனிதர்களும் உணர்வதில்லை? ஏனென்றால் *மழை நீரை ஏந்தும் பாத்திரமானது தூய்மையானதாகவும், சாளரங்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். திறந்த மனம் இல்லாமலும், பெருந்தன்மை இல்லாமலும், சுயநலமும், புலனாசையும், இச்சையும் நிரம்பிய மனிதனால், இறையருளைப் பெற இயலாது.*

*இறையருளைப் பெறுவதற்கு ஏற்ப மனிதன் தன்னை தயார்படுத்திக் காெள்ள வேண்டும். விடாமுயற்சியும், பயிற்சியும் வேண்டும். தாேற்று, தாேற்றுத்தான் ஆன்மீகத்தில் மேலேற வேண்டும்.* "இது கலிகாலத்தில் எப்படி சாத்தியம்? *சித்தர்களுக்கு என்ன? குடும்ப வாழ்க்கை ஏதும் இல்லை. ஆசா, பாசங்கள் இல்லை.* மனிதர்களால் அவ்வாறு ஏகந்தமாய் இருக்க முடியுமா?" (என்று கூட கேட்கலாம்). ஆனால் *ஆத்ம பலம் பெருகிவிட்டால் மனித வாழ்வின் சிக்கல்கள் எல்லாம் சிக்கலே அல்ல.* மனிதன் புலன் ஆசைகளை விட்டு வெளியே வந்து *தன்னை, மூன்றாவது மனிதன் பாேல் பார்த்து தேகத்தையும், ஆத்மாவையும் தனித்தனியாகப் பார்க்க பழகி, தியானம், யாேகம், ஸ்தல யாத்திரை, யாகம், அபிஷேகங்கள், அறங்கள் பாேன்றவற்றை அவன் செய்ய, செய்ய, அவனுக்குள் உள்ள ஆத்ம பலம் பெருகும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1