Sunday, 5 May 2019

கால சக்கரம். வாழ்க்கை சக்கரம்

பிண்டம் முதல் அண்டம் வரை!

அரை மூடி உயிர் நீரால் ;
அடித்து பிடித்து முன்னேறி!!

அணு அளவு உள் சென்று ;
அடிவயிற்றில்   பிண்டமாகி !

ஆன்மாவோடு சேர்ந்ததினால்;
பிண்டம் மறைந்து  உருவுமாகி !

புவி உலகை க்காண்பதற்கே ;
பச்சை மண்ணாய் பூமி வந்து  !

புழுவாய் நெளிந்து.: பூனையாய் மாறி :
நல் விலங்காய்  மாறி !

 பின்னே !!

முன்கால் இரண்டும் கைகளாய் மாறி !
நிமிர்ந்து நடக்குங் காலந் தனில் !!

அறிவுங் கொஞ்சம் சேர்ந்து விட:
நல்விலங்கும் நகர்ந்து விட ;

புது ரத்தம் உடலில் ஊறி !
நாடி நரம்பும் முறுக்கேற !
பொறுப்பும்  ஏற !!

வாழ்க்கை எனும் மேடைதனில் :
வேடம் பலவும் ஏற்றுக்கொண்டு !
பலவிதமாய்  நடிப்பும் கூட !

கைதட்டல்  : கடுஞ் சொற்கள் !!
பல  பல  அதிகரிக்க !

முறுக்கேறிய நரம்பும்  அது:
முனைப்பாய் இப்போ  வேலை செய்ய !

ஊருக்குள்ளும் பெரும்புள்ளி ஆகிவிட:
படிகள் பல மேலேறி :
உச்சி தனை அடைகின்றோம் !!

ஆட்டம் பல அதிகரித்து :
கொக்கரித்து  கூச்சலிட !!

மனிதம் மறைந்து  மிருகம்  தோன்றி ;
அழிவின் பாதை ஆரம்பிக்க !!

அங்கிருந்து பார்க்கையிலே ;
ஏறிவந்த படிகள் எல்லாம் :
எறும்பாய்த் தோன்றி  மறைந்து விட!

ஏறி வந்த படிகளையே !
இடித்துத் தள்ளி  துகளாய்  மாற்ற !

காலச்சக்கரம் மெதுவாய் சுழல ;
பயணம் அதில்  சிறப்பாய்த்  தொடர !

பெரும் புள்ளி சிறுபுள்ளியாய்  மாற;
ஆடும் ஆட்டம் அடங்கத் தொடங்க !

புலன் ஐந்தில் ஒன்று ஒடுங்க !
காலனையும்  வேண்டி  த்தொழுக !

கிழிந்த நாராய்  கீழ் கிடக்க !
மேன் மேலும்  மீதம் ஒடுங்க !

கடைசிக் காற்றும்  காலம் கடக்க!!
காத்திருக்கும்  வேளையில் !

அஃது !!

மீண்டும் உடல் எடுக்கு(மோ)மா ??
அண்டத்திலே கலக்கு(மோ) மா ??