Wednesday 15 May 2019

சித்தன் கேள்வி பதில் - குளிக்கும் முறையில் உடல் சூட்டு தத்துவம்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*சித்தன் கேள்வி*:—
தினமும் குளிக்கும் பொழுது மனிதர்கள் செய்கிற தவறுதான் காரணம். என்ன செய்கிறார்கள்? தண்ணீர் தரும் குளிர்ச்சியை ஆனந்தமாக உணர, முதலில் தலையில் ஊற்றிக்கொள்கிறார்கள். பின்னர் மற்ற அவயவங்களை நனைத்து குளிக்கிறார்கள். இல்லையா?"

*அடியவர் பதில்*:—
ஆம் உண்மை

*சித்தன் விளக்கம்/கேள்வி*:—
தலையில் ஊற்றப்பட்ட தண்ணீரின் குளிர்ச்சி, அக்னியை உடனேயே குளிர வைத்து, நீராக்கி, தலை முழுவதும் நீர் கட்டை உருவாக்கி, ஜலதோஷம், மூக்கடைப்பு, நீர் தாரையாக ஓடுவது, ஒற்றை தலைவலி, அப்புறம் வேறு ஏதோ சொல்வீர்களே, cynus என்கிற வியாதியை எல்லாம் உருவாக்குகிறது. அத்தனை நீர்க்கட்டையும், விலக்க உடல் இன்னும் ஏரி சக்தி வேண்டும், என உத்தரவிட, அக்னி அதன் வீரியத்தை மேலும் கூட்டி அனுப்பும். அக்னிக்கு வீரியம் கூட்டிட, வயிறு, உணவில் கட்டுப்பாட்டை விலக்கி, கண்டதை எல்லாம் தின்ன வைக்கும். இப்பொழுது புரிந்ததா, ஒரு தவறு பல தவறுகளை செய்ய எப்படி தூண்டுகிறது என்று?" என புன்னகைத்தபடி நிறுத்தினார்.

*அடியவர்*:—
அடடா! இதை ஒன்றைக்கூட நாங்கள் கவனிப்பதில்லையே!"

*சித்தன் கேள்வி*:—
சரியான முறை என்ன? என்று பார்க்கும் முன், ஒரு சில கேள்விகள்!" என்றார்.

"நம் முன்னோர்கள், நதி, குளம் இவற்றில் தான் போய் குளிப்பார்கள். அங்கு அவர்கள் நடந்து கொள்கிற விதத்தை கவனித்திருக்கிறாயா?"

*அடியவர் பதில்*:—
குளத்தில், நதியில் முன்னோர்களுடன் நீராடிய ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதங்கள் கவனத்தில் இல்லை"

*சித்தன் விளக்கம்*:—
அந்தக்காலப் பெரியவர்கள், குளத்தில் குளிக்கச்சென்றால், முதலில், தான் உடுத்திய உடையையும், துவட்டிக்கொள்ள கொண்டு சென்ற துணியையும், நீரில் நன்றாக நனைத்து, பிழிந்து, படியில் வைத்துவிட்டு, சிறிது நீர் எடுத்து, கால்களை கழுவி, தலையில் தெளித்துவிட்டு, பின்னர் இரு கை நிறைய நீர் எடுத்து, வாய்க்குள் வைத்துக்கொண்டு, குளத்து நீரை வேகமாக கலக்காமல், ஒரு இலை நீரில் விழுந்து செல்வதுபோல், நிதானமாக இறங்கி சென்று மார்பளவு ஆழம் வந்தவுடன், அங்கேயே நின்று, முதலில் மூன்று முறை தலை நனைய மூழ்கிய பின், சற்று நேரம் உடலின் பாகங்களை கைகளால் இழுத்துவிட்டு, பின்னர் சீயக்காய் அல்லது சோப்பு போட்டு குளித்து, பின்னர் கரை ஏறி, அந்த நனைந்த துண்டால், முதலில் முதுகு பாகத்தை துவட்டியபின், முகத்தை துவட்டி, பின்னர் மார்பு, வயிறு, கைகள், தொடை, கால்கள் என நீரை ஒற்றி எடுப்பார்கள். பின்னர் குளிக்கும் முன் வாயில் ஊற்றி வைத்துக் கொண்ட நீரை, கரையில், வெளியே துப்பிவிடுவார்கள். இது ஆரோக்கியமான முறை. இது ஒரு சரியான உடற்பயிற்சியும் கூட."

*சித்தன் விளக்கம்*:—
இதிலிருந்து உணர வேண்டியது என்னவென்றால், காலில் பட்ட நீர், அங்கிருந்து அக்னியை மேல் நோக்கி விரட்டும். அக்னி துரத்தப்பட்டு கழுத்தை அடைந்ததும், வாயிலிருக்கும் நீர் அதை பிடித்துக்கொள்ளும். மேல் ஏற விடாது. பின்னர் தலை மூழ்கும்பொழுது மேலிருந்து கீழே விரட்டப்படுகிற அக்னியையும், வாயிலிருக்கும் நீர் வாங்கிக்கொள்ளும். ஆதலால், உடலில் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுகிற சூட்டை அந்த நீர் வாங்கிக்கொண்டு விடுவதால், உள் உறுப்புகள், சரியான அளவு அக்னியை பெற்று சரியான விகிதத்தில் வேலை பார்க்கும். ஏன்? பாதிக்கப்பட்ட LENS கூட தன் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும்.

*அடியவர் கேள்வி*:—
சரி! வீட்டில் குளியலறையில் குளிப்பவர்கள் என்ன செய்ய முடியும்?

*சித்தன் பதில்*:—
இதையே பின்பற்றுங்கள்!

1. துவட்ட எடுக்கும் துண்டை நனைத்து பின் துவட்டுங்கள். (முதுகு, முகம், தலை, மார்பு என)

2. இருகை நீர் எடுத்து வாயில் வைத்திருந்து, குளித்து துவட்டிய பின் துப்பிவிடுங்கள்.

3. காலிலிருந்து நனைத்து தலைக்கு வாருங்கள்.

4. வாரத்தில் ஒருநாள், வாயில் வைக்கிற நீருக்கு பதிலாக, வாய் நிறைய நல்லெண்ணையை வைத்துக்கொள்ளலாம். பின்னர் துப்பி, வாய் கழுவிவிடவும்.

*இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால், இழந்த காண்பார்வையை இந்த ஜென்மத்திலேயே மீட்டுவிடலாம். கண்ணாடி, லென்ஸ் போன்றவைகளை சார்ந்திருக்கிற நிலையை விட்டு வெளியே வந்து விடலாம்.*

இது போக இன்னும் ஒரு சில வழி முறைகள் உண்டு. பொதுவாக சொல்வதென்றால், *உள்சூட்டை கட்டுப்படுத்த தெரிந்தவனுக்கு, வாழ்க்கை அவன் கையில். இனி வரும் தலைமுறைக்கு இந்த முன்னோர்களின் வழி தெரிந்திருக்க வேண்டும். ஆகையால், கண் பார்வையின் முக்கியத்தை எல்லோருக்கும் தெரிவித்துவிடு"* என்றார்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************