Tuesday, 14 May 2019

அகத்தியர் ஜீவ நாடி அருள் - எனக்காக வாசிக்கப்பட்டது 13,14Apr 2019

***********************************************
அகத்தியர் ஜீவ நாடி

அழகப்பனூர் , பொகளுர் - மேட்டுப்பாளையம் to அன்னூர் சாலை


நாடி வாசிப்பவர்  - குருஜி இறைசித்தர்

அருள் கேட்பவர் - தி. இரா. சந்தானம்

நாள் : 13April2019

***********************************************


நவகோடி சித்தனின் நல்லாசி பெற்றவனே

உமை யாம் அறிவோம்
உமை யாம் காப்போம்
தயங்காதே தூயவனே

வாழ்வில் நிலை பெறுவாய் என் மகனே கலங்காதே

யாம் முழு சித்த நிலைக்கு யாம் அழைப்போம்

பிறவிக்கடனை தீர்த்து வா , பின் அழைப்பேன்

இன்னவன் தேகத்திலே சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையுதே

இது கர்மம் அது தீரவே யாம் தந்து உமை  காத்தோம்

------------------  அதை விடிகாலை பொழுதினிலே முளையுடன் பருகி வா

தேகமது சீர் பெரும் அப்பா

ஆங்கில மருத்துவம் அதை தொடாதே

இன்னவன் தேகத்தில் இருக்கும் இன்னல் தனை யாம் காப்போம் 

தயங்காதே - தானம் செய் என் மகனே

நாவடக்கம் கொள்ளப்பா

உனக்கு நாடி வழி நற்பலன்களே யாம் உரைத்தோம்

வீண் வாதமதை விட்டொழி

மூடனே அன்றுரைத்தேன் - வாதமதை விட்டொழிவாய் சித்த நிலையை நீ பெருவாய்

உனக்கு செய்தொழில் தன்னிலே இருக்கும் அத்துணை இன்னல்களையும் யாம் முழுமை நிறைவேற்று வைத்தோம்

கள்ளவனும் குள்ளவனும் உனைவிட்டு ஒழிந்தானே - அறிவாய் நீ

_________________________________ யாம் தந்தோம் - நீ அறிவாய்

மாற்று மதம் கொண்ட பொருந்திய ஒருவனால் இன்னல் நேரிட இருந்ததே - யாம் உமை காத்தோம்
விட்டொழிந்தானே அக்கள்ளனும

பின்பு உனது கொண்டவள் அவள் தேகம் தனிலே இருக்கும் சிறு சிறு இன்னல்களும் விட்டொழியும் அப்பா

கரு நில மருந்தை ஒரு முறை பருகு , பருக்கச்சொல்

சீர் பெரும்

அவளை ஈன்றோரின் விதி நிறைவுற்றதே

நல்லதொரு திதியிலும் நல்லதொரு நட்சத்திரத்திலும் யாம் இன்னல்கள் இன்றி அழைப்போம்

மனம் தளராதே

இது இயற்க்கையின் நியதியே

இயற்க்கைக்கு மாரும் யாரும் இல்லையப்பா

இயற்க்கை ஒன்றே உன்னை சார்ந்து நிற்குமே

யாம் உம் மழலைகளை ஆசீர்வதிப்போம்

என் அப்பன் எனை ஆளும் என் தமிழ் சக்தி வடிவேலவன் ஆலயம் சென்று

வேல் தனை காணிக்கையிட்டு மண்டியிட்டு தொழுது வா

யாம் உமை ஆசீர்வதிப்போம்

                                                வந்து காட்சி தருவேன்

வாழ்வில் நிறை பெறுவாய் என் மகனே

தேகம் அதிலே இருக்கும் அத்துணை இன்னல்களும் விட்டொழியுமே

கொண்டவள் அவள் தேகத்துக்குள்ளே சிறு பிழை கட்டிகள் உள்ளதய்யா

தீருமே அவள் தேகத்தில் இருக்கும் இன்னல்கள்

மனம் தளராதே என் மகனே

வாழ்வில் நிலை பெறுவாய்

- முற்றே - 

மீண்டும் ஒரு கேள்வி - முருகர் நாடி தனிலே வேல் பூசை உபதேசம் பெறுவதற்கு 19Apr 2019 அன்று திட்டமிட்டுள்ளோம் - அதற்க்கு ஏதாவது தடங்கல் வருமா (மாமனார் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது )

முன்னுரைத்தேன் அறியவில்லையா மூடனே உனக்கு

_____________________________________   என்று உரைத்தேனே

வேலவனுக்கு நீ செய்த வேல் தன்னை காணிக்கையிட்டு தொழு

உபதேச நிலை பெரும் நிலையில் இன்னல்கள் இன்றி நீ உபதேசம் பெறுவாய்

நல்லதொரு நிலை பெறுவாய்

யாம் உமை சித்தத்திற்கு யாம் அழைப்போம்

உன் மனை தனிலே ________________ இட்டு _______________ இட்டு         வீட்டினுள்  இட்டு தொழு

நிலை பெறுவாய்

காகபட்சிக்கு அன்னம் இடு

பைரவனுக்கு அன்னம் கொடு

ஈசனுக்கு வில்வம் இடு

நிலை பெறுமே வாழ்வு

- முற்றே -









*************************************************************************
அகத்தியர் ஜீவ நாடி

அழகப்பனூர் , பொகளுர் - மேட்டுப்பாளையம் to அன்னூர் சாலை


நாடி வாசிப்பவர்  - குருஜி இறைசித்தர்

அருள் கேட்பவர் - தி. இரா. சந்தானம்

நாள் : 14April2019, சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் வருடப்பிறப்பு

*************************************************************************************

சித்தனின் நல்லாசி பெற்றவனே

உமை யாம் முன்னரே ஆசீர்வதித்தோமே

நான் மனமகிழும் சித்திரை திருநாளன்றே உமக்கு யாம் உரைப்போம்

ஆணி முதல் நாள் அன்றே மண் அது அமையப்பெறுமே அய்யா

யாம் சிறு இன்னல்களை தந்தே அமைத்து தருவோமே

பக்குவ நிலை அடைய செய்

அரசு அரசியல் துறையில் ஒரு சிறு மாற்றம் நிகழுமப்பா

நல்லதோர் நிலையை நீ பெறுவாய்

உமை குருபூசை தனிலே மீண்டுமொரு நல் பொக்கிஷம் அது உமை நாடி வருமப்பா - பத்திரப்படுத்து , யாம் பின் உரைப்போம் உமக்கு

உன் மழழைகளால் நீ பெரும் மகிழ் நிலை அடைவாய்

பார் போற்ற புகழ் பெற்று உயர் நிலை அடையக்கடைவோமே

உன்னை தூற்றுவோர்  எல்லாம் துதி பாடுவாரே

இன்று உரைக்கிறேன் உன் மனை தனிலே  ____________ அரங்கேறும்

______________  அது அமையப்பெறுமே

- முற்றே -