Friday 3 May 2019

சித்தர் கேள்வி பதில் - பூணூல் பற்றி

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*சித்தன் கேள்வி*:—
பூணூலை பற்றி பேசினாலே, பொதுவாக இவ்வுலகில் பிரச்சினைதான் வரும். இருப்பினும், என் கேள்விக்கு உனக்கு தெரிந்த விடையை கூறு. பூணூல் போடுகிற நிகழ்ச்சியை என்னவென்று கூறுவார்கள்?

*அடியவர் பதில்*:—-
உபநயனம் என்பார்கள்.

*சித்தன் கேள்வி*:—-
அந்த வார்த்தையின் அர்த்தம்?

*அடியவர் பதில்*:—-
ஒருவனை இறையிடம் அழைத்துச்செல்வது" என்று கூறுவார்கள்!

*சித்தன பதில்*:—-
சரியான பதில். இதை நாங்கள் "ஒருவனுக்கு" "அவனை" அறிமுகப்படுத்துவது, என்று கூறுவோம்" என்றார். இங்கு அவன் என்பது இறைவன் அல்லது அந்த மனிதனின் உண்மை சொரூபம் எனக் கொள்ளலாம். பிரளயகாலம் முடிந்து யுகம் தொடங்கும் நேரத்தில், மஹாவிஷ்ணுவுடன், பூணூல் தோன்றியது என்று புராணங்கள் கூறுகிறது. சிவபெருமான் கையிலிருக்கும் சூலம், பூணூல், முருகரின் கையிலிருக்கும் வேல், போன்றவை, ஒரு மனிதனுக்குள் ஓடும் வாயுவை குறிக்கும். இடைகலை, பிங்களை, நடுமத்தியாக சுழுமுனையை குறிக்கும். எந்த ஒரு மனிதனும், தன்னை அறிய, இறை நிலையை உணரவேண்டுமானால், உள்ளே மூன்றாக ஓடும், பிராண வாயுவின் காலை பிடிக்க வேண்டும், என்பதை உணர்த்தவே, இறையே இறங்கி வந்து, இந்த சின்னங்களை நமக்கு காட்டி, சூக்க்ஷுமமாக உணர்த்துகிறது. நீயே உணர்ந்திருக்கலாம், ஒருவனுக்கு பூணூல் போட்டபின், வீட்டில் இருக்கும் பெரியவர்கள், அவன் *குறைந்தது இரண்டு நேரம், பிராணாயாமம், சந்தியாவந்தனம் பண்ணுகிறானா என மேற்பார்வை செய்வார்கள். அவனுக்கு உரைக்கப்பட்டது மிகப்பெரிய பொக்கிஷம்.* அதை அவன் பத்திரமாக பயிற்சி செய்து பாதுக்காக்கிறானா? மேலும் முன்னேறுகிறானா  என்று சோதிப்பார்கள். 

*அடியவர் கேள்வி*:—-
நூல்கள் தாத்பரியம் என்ன?

*சித்தன் பதில்*:—-
மூன்று நூல்கள் - பிரம்மச்சரியம், ஆறு நூல்கள் - மணமாகிய குடும்பநிலை, ஒன்பது நூல்கள் - பிதுர்கர்மா என நூல்களின் எண்ணிக்கை, ஒருவன் வளர்ச்சியை குறிக்கும். எவனொருவன் பிராணாயாமத்தை சரியாக செய்து வருகிறானோ, அவன் ஒன்பதை அடையும் பொழுது, உடல் மெலிந்து, தேஜஸ் நிறைந்து வழிய, எங்கும் ஒரு நல்ல தன்மையை பரப்புபவனாக மாறுவான். இது கூட, *குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும், சித்த மார்க்கத்தின் முக்கிய குறிக்கோளை, தன் கடமைகளை குடும்பத்துக்கு சரிவர செய்வதினால், எளிதாக அடைந்துவிடலாம், என மனிதனுக்கு உணர்த்துவதே, இறையின் விருப்பமாகும். *

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1