Friday, 17 May 2019

எனதனுபவம் 17மே 2019 ஐந்து முகம் ஆறு முகமாக மாறிய உண்மை சம்பவம்

எனதனுபவம் 17மே 2019


ஐந்து முகம் ஆறு முகமாக மாறிய உண்மை சம்பவம் 


சில நாள் முன்பு ஒரு பிரபல ஆன்மீக பொருட்கள் விற்கும் கடைக்கு சென்ற பொது அகத்தியர் உத்தரவு - ஒரு 108 ருத்திராக்ஷ மணிகள் பதித்த மாலை வாங்க சொல்லி . என் எதற்கு என்று தெரியாது - அகத்தியர் சொன்னால் தட்ட முடியுமா

விலையை பார்த்தால் 108 ஐந்து முக ருத்திராக்ஷ மாலையின் விலை ரூபாய் 120 மட்டுமே

விசாரித்த போது மணி சிறியதாக இருக்கும் மாலை 54 மணிகள் பதித்தது - ஐந்து முகம் கொண்டது சுமார் 300-400 வரும் என்றார்கள்

மணி பெரியதாக இருந்தால் தான் விலை கம்மி - அகத்தியர் உடனே நீ என்ன பகட்டுக்காகவா ருத்திராக்ஷம் அணிகிறாய் - பெரிய ருத்திராக்ஷத்தில் தான் நல்ல பலன் இருக்கும் - விலையும் பார்க்க வேண்டாம் , அழகும் பார்க்க வேண்டாம்பெரிய ருத்திராக்ஷத்தையே வாங்கவும் என்று உத்தரவு

உடனேயே பல மாலைகளில் ஒரு மாலையை தூரத்தில் இருந்தே பார்த்து தேர்ந்தெடுத்து கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டேன்

என்னிடம் ஏற்கனவே அதே போல ஒரு மாலை உள்ளது - பூஜை செய்யும் போது அதனை  அணிந்து கொண்டு பூசை செய்வேன் - இன்னொரு மாலை எதற்கு வாங்கினேன் என்று தெரியவில்லை.

அகத்தியரை வழிபட சொல்லி உத்தரவு - அய்யன் படத்தை பிரேம் செய்து மாம்பலகை ஒன்று எடுத்து கழுவி மஞ்சளால்  மெழுகி கோலமிட்டு பட்டு துணி விரிப்பு விரித்து அதன் மேல் அகத்தியர் படத்தை வைத்து தீபமேற்றி வழிபாடு செய்ய உத்தரவு - 108 அகத்தியர்  போற்றி சொல்லி உத்தரவு வந்தது –

பின்னர் வீட்டில் ஒரு செம்பினால் ஆன ஒரு கலசம் அல்லது கும்பம் இருந்தது - கும்ப முனிக்கு கலச கும்பத்தை வெறுமனே வைத்து ருத்திராக்ஷத்தால் 108 அர்ச்சனை செய்ய சொல்லி உத்தரவு  -

ஒவ்வொரு முறையும் ஒரு அகத்தியர் போற்றி அதை தொடர்ந்து  - எனக்கு தனியாக ஜீவ நாடி மூலம் உபதேசம் ஆன அகத்தியர் மூல மந்திரம் - ஆகிய மந்திரங்களை - ரூத்ராக்ஷ்த்தை ஹ்ருதயத்தில் வைத்து மூல மந்திரத்தையும்  அர்ச்சனையும் சொல்லி முடித்து ஒரு ருத்திராக்ஷத்தை கும்பத்தினுள் சத்தம் கேட்குமாறு இட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு  அர்ச்சனையின்  நடுவிலேயும் அகத்தியர் மூல மந்திரத்தை நுழைத்து கூறி நூற்றியெட்டு அர்ச்சனையும் செய்து வந்தேன் .

இவ்வாறு 108 ருத்திராக்ஷத்தயும் கும்பத்தினுள்ளே இட்டு  அர்ச்சனையை முடித்து தீபம் காட்டி தூபம் காட்டி நெய்வேத்தியம் செய்து பூஜையை முடிக்க சொல்லி உத்தரவு ஆனது –

பல நாட்கள் இந்த பூசையை செய்து வந்தேன் - பின்னர் அந்த ருத்திராக்ஷங்களை கும்பத்தனுள்ளேயே போட்டு அகத்தியர் படம் அருகிலேயே வைத்து விட்டேன் –

அது அப்படியே இருந்தது சுமார் 1.5 வருடம் –

பின்னர் இரண்டு மாதம் முன்பு நண்பர் ஒருவர் ஒரு ருத்திராக்ஷம் உன் கையாலே தானம் கொடு , நான் அணிந்து கொள்ள வேண்டும் என்பது அகத்தியர் உத்தரவு என்றார் - நானும் மறுக்க முடியாமல் ஐந்து முகம் தானே எவ்வளவு வேண்டுமானாலும் நாம் வாங்கி கொள்ளலாம் - ருத்திராக்ஷம் கேட்கும் போது தானம் கொடுப்பது சிறந்தது என்று - நமது வீட்டில் இருந்த கும்பத்தினுள் கை விட்டு ஒரு மணியை எடுத்து அவருக்கு கொடுத்தேன் - அவரும் இன்று வரை சுமார் 6 அல்லது ஏழு மாதங்களாக அணிந்து வந்து உள்ளார் –

பின்னர் அலுவலகத்தில் உடன் பணி  புரியும் மேலும் ஒரு நண்பர் வந்து தனக்கும் தன நண்பர் ஒருவருக்கும் தல ஒரு ஐந்து முக ருத்திராக்ஷம் வேண்டும் என்று என்னை கேட்டார். நான் மீண்டும் என் வீட்டில் இருக்கும் கும்பத்தில் இருந்து இரு மணிகளை அவருக்கு தானமாக அளித்தேன்.
நான் அளித்த ருத்திராக்ஷத்தை தங்கத்தில் கோர்த்து அணிந்து கொண்டார் - பின்னர் அவர் தான்  கூறினார் - அய்யா நீங்கள் எனக்கு கொடுத்தது ஆறு முக ருத்திரம் என்று கூறினார் - எனக்கோ வியப்பான வியப்பு . பின்னர் நீங்கள் கொடுத்த இன்னொரு ருத்திராக்ஷமும் உடன் வேலை செய்யும் நண்பருக்கு கொடுத்து விட்டேன் - அதுவும் ஆறு முகம் கொண்ட ருத்திரம் தான் என்றார் –

எனக்கோ ஆச்சரியம் - என்னடா இது, நாம் வாங்கியது ஐந்து முகம் கொண்ட நூற்றியெட்டு மணிகள் கொண்ட மாலை ஆயிற்றே அதனுள் ஆறு முகம் கொண்ட மணி கலந்து வந்திருக்குமோ - அதுவும் நம் கையில் அகப்பட்டு இவருக்கு கிடைத்து இருக்கிறதே - முருகன் மேல் மிகவும் பக்தி கொண்ட இவருக்கு முருகப்பெருமான் அவர்களே நம் மூலம் ஆறுமுகம் கொண்ட ருத்திரத்தை பரிசாக கொடுத்து உள்ளாரே - எல்லாம் அய்யன் செயல் - நம் செயல் ஆவது யாதொன்றுமில்லை , என்று இறைவன் அவருக்களித்த கருணையை நினைத்து வியந்தேன்.

இவ்வாறு மூன்று ருத்திரங்களை தானம் செய்தது இவ்வாறிருக்க , அந்த கும்பத்தினுள் இருந்த ருத்திரங்கள் அப்படியே பத்திரமாக பூஜை அறையினுள் இருந்து வந்தன -நான் பிறகு அதை சென்று பார்க்கவும் இல்லை.

இதன் நடுவே நாங்கள் பொதிகை யாத்திரை சென்றது அனைவரும் அறிந்ததே - அங்கே சில ருத்திராக்ஷ மரங்கள் இருக்கும் என்று தெரியும் - ஆனால் அவற்றை அடையாளம் பார்த்ததில்லை - ஏதாவது கீழே ருத்திராக்ஷ மணி கிடைத்தால் நன்றாக இருக்கும் - அதுவும் ஒரு முக ருத்திராக்ஷம் கிடைத்தால் நன்றாக இருக்கும் - கிடைக்குமோ கிடைக்காதோ - கிடைத்தால் எதனை முகம் உள்ள ருத்திராக்ஷம் கிடைக்குமோ - நமக்கு என்ன அதிருஷ்டம் இருக்குமோ இவ்விஷயத்தில் என்று ஏங்கினேன் –

அனால் நாங்கள் பொதிகை மலை கானகத்தினுள் நடந்து செல்லும் பொது ருத்திராக்ஷ  மணிகள் பல கீழே கிடந்ததை கண்டோம் - நிமிர்ந்து பார்த்தால் ருத்திராக்ஷ மரமும் இருந்தது - பொறுமையாக குனிந்து ருத்திராக்ஷ மணிகள் பலவற்றை சேகரித்து பையில் வைத்து கொண்டோம் - பின்னர் ஐயனை தரிசித்து மலையிறங்கி இல்லம் வந்து குளித்து ஓய்வெடுத்து மறுநாள் சேர்த்தது வைத்த ருத்திராக்ஷ மணிகளை பிரித்து கொட்டி கழுவி ஒரு கலத்தில் இட்டு பூஜை அறையினுள் வைத்து விட்டோம் –

பின்னர் 2-3 தினங்களுக்கு பிறகு அகத்தியர் உத்தரவு , ருத்திராக்ஷங்களை எடுத்து பார்க்கவும் என்று - உத்தரவு கிடைத்ததும் சேகரித்த ருத்திராக்ஷங்களை எடுத்து பார்க்கும் போது - முதன் முதலில் எடுத்த காயே ஒரு முக ருத்திரம்  ஆக இருந்தது –

பத்து லக்ஷம் காய்களுக்கு ஒரு காய் தான் ஒரு முகம் வட்ட வடிவில் கிடைக்கும் - அகத்தியர் அருளால் நான் அவ்வித ஒரு முக ருத்திரத்தை அகத்தியரிடம் நாடியில் உத்தரவு வாங்கி குருஜி இடம் இருந்து பெற்றுக்கொண்டு சுமார் ஒரு வருடம் பல வித சுத்தி முறைகள் செய்வித்து பின்னர் இப்போது அணிந்து கொண்டு சுமார் 2 வருடம் ஆகிறது - மீண்டும் இன்னுமொரு ஒரு முக ருத்திரம்  கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதை அப்படியே பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறேன் - குருநாதர் எப்படி உத்தரவு இடுவாரோ அவ்வாறே அது உபயோகப்படுத்த முடியும் - நான் ஒரு பாதுகாவலன் - அவ்வளவு தான் - அய்யனின் சொத்து - அவர் அளித்தது - அவர் விருப்பம் - நம் செயல் எதுவும் இல்லை .

அவ்வாறு இருக்க - நாடியில் எனக்கு கிடைத்த ஒரு முக ருத்திரத்தை பற்றி கேட்கும் போது - ஒரு முக ருத்திரத்தை பற்றி எதுவும் கூறாமலே, மேலும் ஒரு பொக்கிஷத்தை உனக்கு அடுத்த குரு பூஜையின்போது தருவேன் - பெற்று பத்திரப்படுத்தி என்று உத்தரவு - அது என்ன என்று தெரியவில்லை.

இவை இவ்வாறிருக்க - முருகர் நாடியில் சில உபாசனை முறைகள் மற்றும் பூசை முறைகள் உரைக்கப்பட்டது - அதில் ஒரு இடத்தில் ருத்திராக்ஷத்தை பூஜையின் பொது உபயோகிக்க சொல்லி உத்தரவு –

அனால் அப்போது நாடி வாசிக்கும் பொது குறுக்கே கேள்வி கேட்டு விட்டதால் முருக உபாசகர் உயர் திரு குருஜி ஜெகதீஸ்வரன் அய்யா அவர்கள் எனக்கு எனது இடை கேள்விக்கு பதிலளித்து திரும்ப ஜீவ நாடியை பார்க்கும் முன்பே அந்த ருத்திராக்ஷத்தை பற்றிய வரி மறைந்து விட்டது –

ஜீவ நாடி பற்றி தெரிந்தவர்களுக்கு த்தான் புரியும் - ஜீவ நாடியில் வரிகள் தோன்றி , பின்னர் படித்தவுடன் மறைந்து விடும் - எனவே எனக்கு இது ஒரு சோதனையாக அமைந்தது –

சிறிது முயற்சிக்கு பின் குருஜி ஜெகதீஸ்வரன் அய்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு  கொண்டு எனது சந்தேகத்தையும் , அந்த ருத்திராக்ஷத்தை பற்றிய வரியை தவற விட்டதையும் எடுத்து கூறினேன் –

அதற்க்கு குருஜி அவர்கள் ஆறுமுக ருத்திராக்ஷம் தான் முருகருக்கு உகந்தது - அதை 54 அல்லது 108 மணிகள் கொண்ட மாலையாக கோர்த்து அணிந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார்.

54 ஆறுமுக ருத்திராக்ஷ மணிகள் எவ்வளவு விலை இருக்கும் - அவ்வளவு மணிகள் கிடைக்குமா ?, யாரிடம் போலி இல்லாமல் உண்மையான மணிகளை வாங்கலாம் என்றெல்லாம் நினைத்து கொண்டு இருக்கும் பொது , அய்யன் உள்ளே இருந்து உரைத்தார் - செல்க வீட்டில் உள்ள கும்பத்தில் உள்ள மணிகளை காண்க - பின்னர் தேவைப்பட்டால் ஆறுமுக ருத்திராக்ஷங்களை வாங்கலாம் என்று அய்யன் உத்தரவு இட்டது நேற்று 16.05.2019.

இன்று 17.05.2019 காலை குளித்து முடித்து முதற்கண் சென்று கும்பத்தில் இருந்த ருத்திரங்களை பார்த்த போது ஆச்சரியம் - அனைத்து ருத்திரங்களும் ஆறுமுகமாகவே இருந்தன !!!!!!!!!!!!!  

வாங்கும் பொது ரூபாய் 120 கொடுத்து ஐந்து முகமாக வாங்கிய ருத்திராக்ஷங்கள் எப்படி ஆறுமுகமாக மாறி உள்ளது - அது அகத்தியருக்கே வெளிச்சம் –

அதனால் தான் அலுவலகத்தில் இரண்டு ருத்திரங்களை தானம் கொடுத்த பொது அது ஆறுமுகமாகவே வந்தது.

எனவே முதலில் ருத்திரத்தை தானம் வாங்கிய இன்னுமொரு அன்பருக்கு அவ்வாறு தான் வந்திருக்கும் என்று எண்ணி அவரை அழைத்து கேட்ட போது - தாம் ஆறு மாதமாக அந்த ருத்திரத்தை அணிந்து வந்ததாகவும் அது எவ்வளவு முகம் என்று பார்க்கவில்லை எனவும் , அது ஐந்து முகமாக தான் இருக்கும் என்றும் கூறினார் - நானோ மீண்டும் எடுத்து பாருங்கள் , அதில் எத்தனை முகம் உள்ளது என்று பார்த்து விட்டு எனக்கு தெரிவியுங்கள் என்று கூறினேன் - அவருக்கோ ஆச்சரியம் , பார்த்து விட்டு அது ஆறு முக ருத்திரமாக உள்ளது என்று கூறி மிகவும் மகிழ்ச்சியடைந்தார் –

எல்லாம் அய்யன் அருள் - நம் செயல் ஆவது யாதொன்றும் இல்லை –

முருகனருள் என்றென்றுமே முன் நிற்குமே !!!!!!!!!

சித்தர்கள்  படை சூழ வரும் அகத்திய மாமுனிவர்  தாள் சரணம் !!!!!!!!!!!!


தி . இரா . சந்தானம்
கோவை
91760 12104



************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************