Friday 3 May 2019

அகத்தியர் கிருபையால் இன்று ஆயிரமாவது பதிவு 1000 - பதிவுகள் பத்தாயிரமாக பெருகி அய்யன் புகழ் பாரெங்கும் பரவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—
"பால் என்பது பசுவின் ரத்தத்திலிருந்துதானே கிடைக்கிறது. பின்னர் எப்படி அது சாத்வீகமாகும், சைவமாகும்? இதற்கு சித்தமார்கம் என்ன விடையளிக்கிறது?"

*சித்தன் பதில்*:—-
"ஹ்ம்ம்  நல்ல கேள்வி! ஒருவனின் உடலில் ஓடும் ரத்தம், உள்ளிருக்கும் இருக்கும் எலும்பு, சதை, நரம்பு போன்றவை அவன் பெற்றோர்களால் பகிரப்பட்டு, அவன் பிறந்த பொழுது தாயிடமிருந்து பால் குடித்து வளர்கிறானே, அப்படிப்பட்ட நிலையில் அந்த குழந்தை வளர்வது சைவமா? அசைவமா? "


*அடியவர்*:—-
என்னிடம் பதில் இல்லை.

*சித்தன் கேள்வி*:—-
"உன்னிடம் ஒரு நூறு ரூபாய் இருக்கிறது. எனக்கு அது தேவை. உனக்கு தெரியாமல் அதை நான் எடுத்துக் கொண்டுவிட்டால், என்னை என்னவென்று அழைப்பாய்?"


*அடியவர் பதில்*:—-
திருடன் என்றழைப்பேன்.


*சித்தன் கேள்வி*:—-
அதே ரூபாயை, நான் கேட்க, நீயாக எனக்கு தந்தால்?


*அடியவர் பதில்*:—-
தானம் வாங்கியவர் என்றாகின்றீர்.

*சித்தன் பதில்*:—-
அதெப்படி ஒரு விஷயமே, இரண்டு வித சூழ்நிலையை உருவாக்குகிறதோ, அதுதான் பால் விஷயத்திலும். ஒரு தாய் தன் குழந்தைக்கு விரும்பி பால் கொடுக்கிற நிலையில் இருக்கிற மனநிலையில் அது தோஷத்தை சுமப்பதில்லை. அது போல் விரும்பி பாலை தருகிற பசுவின் நிலையில் தோஷம் இல்லை. இருந்தாலும், *உலகில் மனிதனுக்கு என்று படைக்கப்பட்ட விஷயங்கள் அனைத்திலும் தோஷம் உண்டு.* அதனால்தான், ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும், பிறவியே வேண்டாம் இறைவா என்று வேண்டுகிறார்கள். ஒரு உயிரை அழித்து உயிர் வாழும் பொழுது, மன்னிக்க முடியாத குற்றம் உருவாகிறது. அதே நேரத்தில், பிற உயிரை வாழவைத்து, தானும் வாழும் பொழுது, மன்னிக்கக்கூடிய குற்றம் உருவாகிறது. எனவேதான், *சித்தர்கள், பெரியவர்கள் அனைவரும் சர்வம் இறைவனுக்கு அர்ப்பணம் என்று வாழ்கிறார்கள். நம்மை, எந்த புகழுக்கும், பெருமைக்கும் அடிபணியாமல் இருக்க சொல்கிறார்கள்!* என்றார்! "ஹ்ம்ம்! இருந்தும் மனிதர்கள் புரிந்து வாழ்கிறார்களா?" "ஆம், இல்லை போதாது என்பதே பதில்" என்றார். "

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*




👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1