Wednesday, 8 May 2019

சித்தன் கேள்வி பதில் - சுத்தம், அதர்மம்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—
சுத்தம் என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?

*சித்தன் பதில்*:—-
முதல் நிலையில் இரண்டும் சார்ந்தது. பிறகு, எவன் ஒருவன் மனதை சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ, இரு நிலை ஒன்றாகி, அவன் மனமே சுத்தமாகிவிடுவதினால், அதுவே பௌதீக உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும். அந்த சுத்த நிலையில், அவனுக்கு வாக்கு வன்மை வந்துவிடும். அவன் சொல்வது, வேண்டுவது அனைத்தும் உடனேயே நடக்கும், அதுவும், இறை அருளினால். இவ்வுலகில், பலதரப்பட்ட நிலையில் "சுத்தமான ஆத்மாக்கள்" உள்ளனர். வாக்கு சுத்தம், அமைதி சுத்தம், எண்ணம் சுத்தம், அருளும் சுத்தம், செயல் சுத்தம். இவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் வழியில், இறைவன் உத்தரவை நிறைவேற்றுகிறார்கள். அனைத்து பெருமைகளையும், இறைவன் காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அதனால்தான், இன்றும் பாரத பூமி கர்மா பூமியாயினும், தர்ம பூமியாக திகழ்கிறது."

*அடியவர் கேள்வி*:—-

"தர்ம பூமியில், இத்தனை அதர்மமும் கூட வாழ்கிறதே?"

*சித்தன் பதில்*:—-
தர்மத்தின் வாழ்வு தன்னை, சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்ற இறை வாக்கியம் வழிதான், தர்மத்தின் மதிப்பு, கலியுகத்தில் மனிதருக்கு உணர்த்துவதற்காக, இறைவன் நடத்தும் நாடகம். என் முன்னே அமர்ந்திருக்கிறான், அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறான் என்பதற்காக, நந்திகேஸ்வரர், சிவபெருமானிடம், பூமியில் அவரை நினைத்து தவமிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பொழுது, உடனேயே அருளினாலும், அவருக்கு அத்தனை பிரச்சினைகளையும், தவத்திற்கு இடையூராக இருக்க, சிவபெருமான் செய்ய வில்லையா? இதன் அர்த்தம் என்ன? *உயர்ந்த எதுவும் எளிதாக அடைய முடியாது. அத்தனை சோதனைகளையும் கடந்து வந்துதான் ஆகவேண்டும் என்று மனிதருக்கு உணர்த்தவே. சோதனைகள் ஒருவனை புடம் போடுகிறது. அவனுள் இருக்கும் கசடுகளை வெளியேற்றுகிறது. அந்த சுத்தமான நிலையில்தான் ஒருவன் இறையை உணர தகுதியானவனாக ஆகிறான்.* உலகியல் வாழ்க்கையில் இருக்கும் உன்னையும் சேர்த்து பலரும் இங்கு வந்து அமர்ந்து பேசும் பொழுது, அவர்கள் கர்மாவுடன் நாங்களும் கலந்து அசுத்தமாகிறோம். ஆனால், பிறகு, எங்களை எப்படி சுத்தம் செய்து கொள்வதென்பது, எங்களுக்கு தெரியும். உங்களை போன்றவர்களின் தவறென்று நங்கள் கருதுவதில்லை. ஒரு நதி போல நாங்களும், மனிதர்களை சுத்தம் செய்கிற வேலையை பார்க்கிறோம், அவ்வளவுதான்."

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

*********************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

*****************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

****************************************************