Monday, 27 April 2020

ஞான ஸ்கந்தர் நாடியில் 10/04/2020 அன்று எம்பெருமான் முருகர் எமக்கருளிய வாக்கு


ஞான ஸ்கந்தர் ஜீவ அருள் நாடி பீடம்
அந்தியூர்
10/04/2020

ஞான ஸ்கந்தர் நாடியில் 10/04/2020 அன்று எம்பெருமான் முருகர் எமக்கருளிய வாக்கு

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

அம்புவியில் நன்மை நிலை கண்ட காலம்
வகுத்த நன் சென்மத்தில் சனியும் தோன்றி
இருந்தாலும் ஆரோக்கியம் சீர்படும் வருந்திடாதே
ஆயுளும் தீர்க்கம் - செப்பு

சிறு சிறு உடல் உபத்திரவம் ரத்தம் சார்ந்த வயிறு
மூச்சாதியும் ஒவ்வாமை கண்டு நீங்கும்
வகுத்த நன் ஆவணி திங்கள் கழிய
எல்லாமே மாறும் அது கவலையில்லை

பார்க்கும் அது தொழில் தன்னில் லாபமாகும்
அரும்புவியில் நல்லதொரு பேரும் புகழும்
பெறுகின்ற அகத்தியன் பிள்ளை இவனாய்
வாகாக இல்லறத்துறவி காட்ட
முறையாக மணம் கொண்டு
மனைவி சௌக்கியம்
தன்னோடு தந்தைக்கு முன் முக்தி கண்டு
தாய் வாழ யோகங்கள் ஆகும்

நலமுண்டு நன்மை
தாயிற்கும் சிறு சிறு உபத்திரவம்
கொடுத்தாலும் நலமாவாள்

சீருன்டு  இரு பிள்ளை ஆணோடு பெண்ணும்
அனுகூலம் பெற்றதொரு மைந்தன் லாபம்
உரைத்திட்டேன் நல்லதொரு
எழுதுதல் பேசுதல் மேலாண்மை நிருவாகம் தன்னில்

சீராக ஆன்மீகம் தன்னிலும் அருள் பெருகும்
அரும்பொருளும் புகழும் அடைகின்ற பிள்ளை
அகத்தியனுக்கோர் ஆலயம் அமைப்பான்

பயனுண்டு நன்மை தருகின்ற உபாசனை
தடைகளது நீக்கவே வேல் உபாசனை ஒன்றை சொன்னேன்
இளையனார் வேலூரும் சென்றாங்கு உண்டுண்டு அதிகாரமான
வேல் தன்னில் முறைகொண்டு இவ்வேலை இட்டு  பூசித்து நலமதாய் 

கண்ட நன் வேங்கை பீடத்தில் வேலை இட்டு
நட்புண்டு திருமஞ்சன நெய்வேத்தியம் வைத்து
வேல் விருத்தம் மிக்கவும் பாராயணம் செய் என்று முன் உரைத்தேன்

மாற்றங்கள் உறுதிபட மகிமையாக
மனைவி இவள் சுகமாய்
இரு பிள்ளை படிக்க
நலமாக இன்னவனுக்கு ராச யோகம்
பொருள் தன்னிலே பொருளாதார உயர்வு
ஆரோக்கியம் சீர்படுதல்

ஆயுள் கூடுதல்
தாயுக்கும் சுகமாக கவசம் போலும்
குடும்பத்திற்கு அது கவசமாய் உண்டு
இன்னும்  சில காலம் தொடர்ந்து அதுவும் செய்திட்டு வா

தற்கால உலகு உபாயமாக மைந்தன்
முறைகொண்டு நல்லதொரு அவ்வேலுக்கும்
சந்தனாதி தைலத்தால் பூச்சிட்டு 
முறை கொண்டு லாபம் சந்தனாதி தைல எண்ணெயை ஏற்றி 
நலமுண்டு லாபம் அனுகூலம் கண்டேன்
சிறப்புண்டு நல்லதாகும் அனுகூலமாக
முறை கொண்டு வேல் விருத்தம் இரண்டாம் ஸ்தோத்திரம்
"வெங்காள கண்டர் கை சூலமும் " என்று வரும் ஸ்தோத்திரத்தை
பதினாறு உரு செபித்து

முறையாக அதில் வாராகி அம்பிகையும் உண்டு

அந்த வாராகி அம்பிகையை மானசீகமாய் துதித்து 
செந்நிற மலர்களை அவ்வேலுக்கு இட்டு பூசித்து வா
மற்ற ஸ்லோகங்கள் அக்காலம் படித்திடுதல் கூடாது

இரண்டாம் ஸ்லோகமான வேல் விருத்தம் தனில் வருகின்ற
ஸ்தோத்திரத்தை மட்டும்
16 முறை படிக்க வேணும்

செவ்வாய் தோறும் செவ்வாய் ஹோரையில் செய்தால் இன்னும் ஸ்ரேஷ்டம்

முறையாக லாபம் உலகிற்க்கே வருகின்ற தொல்லை
முறையாக கண்ட நன் கிருமி தொற்று நீங்குதல்
சீராக உலகத்தில் முடக்கம் நீங்குதல்
நலமாக இன்னவனும் சௌக்கியமாதல்
இன்னவனுக்கும் பணி தன்னில் உயர்வு உண்டாகுதல்
முறையாக லாபம் பொருளாதாரம் ஏற்றம் பெறுதல்
நலமாக சித்தர்களுடன் பேசும் கலை வருதல்
அகத்தியர் அனுகூலம் படுதல்
அகத்தியர் ஆசீர்வாதம் பரிபூரணம் ஆக்க பெறுதல்
இன்னவன் முறையாக சித்தர்களை தரிசனம் செய்தல்
சிறப்பாக ஆலய கைங்கர்யம் செய்தல்
சீராக ஆசிரமத்தை வளர்ச்சி செய்தல்
முறையாக லாபத்தில் நல்லது இது போல நடக்குமென்பேன் 

ஆனபடி வாராகி மூல மந்திரம் பையவே உபதேசம் செய்வேன்

இப்போது இதனை கண்டு வா இந்நாளில் உபதேசம்

நேரில் வா அடுத்த மர்மம் கேள் என்று ஆறுமுகன் பகிர்ந்தனன்

*****************************

இன்று செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை யில் குகாஸ்த்ர பிரயோகம், வராகி அஸ்திர பிரயோகம், உலக நன்மைக்காக🙏🙏🙏🙏🙏 முருகனருள் முன்நிற்க 🙏🙏🙏🙏







No comments:

Post a Comment