Friday 15 May 2020

தேவராயன துர்கா - யோக ந்ருசிம்ஹர் ஆலயம்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்  இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் சசிறிய மலை மேல் நரசிம்மர் ஸ்வாமி ஆலயம் <<தேடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தும்கூர் நரசிம்மர்>>

*தன்னை  நாடி வருபவர்களை அரவணைத்து பக்தர்களின் மனக்குறையை நீக்கி மகிழ்வான வாழ்க்கையை அளிப்பது கடவுளின் பொறுப்பு. நியாயமான கோரிக்கைகளுடன்  தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி தருவதில் முதலாக நிற்பவர் நரசிம்மர்.

*தன் பக்தன் அழைப்பை ஏற்று இரணியனின் வயிற்றை கிழித்து வதம் செய்தவர்  நரசிம்மர்.

*உக்கிரமாக இருந்த அவரை சாந்தமாக்கி, லட்சுமியை தனது மடியில் அமர வைத்து சாந்தமான முகத்துடன் லட்சுமி நரசிம்மராக அருள்பாலித்தவர். அதுபோல், யோக நரசிம்மர், போக நரசிம்மர் என, பல பெயர்களை தாங்கி நிற்கும் நரசிம்மருக்கு கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், கர்நாடகா  மாநிலத்தில், தும்கூர் மாவட்டத்தில் பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி அருள்பாலிப்பவர் அங்கு கோவில் கொண்டுள்ள நரசிம்மர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோவிலை புராண காலத்தில் கரிகிரி என்று குறிப்பிடப்பட்ட இந்த இடம் தற்போது தேவராயன துர்கா என்று  குறிப்பிடப்படுகிறது.

*ராமாயண புராணத்துக்கும், இந்த இடத்துக்கும் தொடர்பு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, ஒரு சமயம் ராமர் இந்த பகுதிக்கு வந்ததாகவும், அப்போது  நாமம் இட நாமக்கட்டியை கரைக்க தண்ணீர் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு அம்பு விட்டு இங்கு நீரூற்றை உருவாக்கியதாக தல வரலாறு கூறுகிறது. இந்த  நீருற்று இன்றும் இங்கு உள்ளது. ராமர் பாதமும் அருகில் உள்ளது. குன்றுக்கு சற்று தூரத்தில் மகாலட்சுமிக்கு தனிக்கோவில் அமைந்துள்ளது. கோவில்  அமைந்துள்ள குன்றின் கீழும், மேலும் நரசிம்மர் இருக்கிறார்.

*கீழே உள்ளவரை போக நரசிம்மர் என்றும், மேலே உள்ளவரை யோக நரசிம்மர் என்றும் அழைக்கின்றனர். இதை தவிர மூன்றாவது அடுக்கில் கும்பி நரசிம்மர்  எனவும், ஒரு நரசிம்மர் குடிக்கொண்டுள்ளார். கீழே உள்ள நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்தி கொண்டு கம்பீரமாய் காட்சி தருவதால், இவர் லட்சுமி நரசிம்மர்  என்று அழைக்கப்படுகிறார்.

*கீழே உள்ள போக நரசிம்மரை தரிசித்த பின் பக்தர்கள் மேலே உள்ள யோக நரசிம்மரை தரிசிக்க செல்ல வேண்டும் என்பது ஐதீகம். 

*கரிகிரி என்று இருந்த இடத்தை ஒரு காலக்கட்டத்தில் மைசூர் மன்னர் மூன்றாவது கிருஷ்ணராஜ உடையார் வென்றார். அப்போது, பழைய பெயரை மாற்றி  தேவராயன துர்கா என, மாற்றி அமைத்தார். தற்போது வரை அந்த பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

*இங்குள்ள கோவிலில் தாயாரான லட்சுமிக்கு என, தனியாக கோவில் அமைத்து, அதில் மூலவராக லட்சுமி அருள்பாலிக்கிறார். 

*இந்த புகழ் பெற்ற ஆலயம் பெங்களூர்  ஊரில் இருந்து 72 km தூரத்தில் அமைந்துள்ளது.

ஓம் நமோ வெங்கடேசாய.

🌸🌸🌸🌸🌸
 *ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதசநாம ஸ்தோத்ரம்*

*ப்ரதமஸ்து*  மஹோஜ்வாலோ

*த்விதீயஸ்* தூக்ரகேஸரீ

*த்ருதீய  க்ருஷ்ண பிங்காக்ஷ :

*சதுர்த்தஸ்து*  விதாரண :

*பஞ்சாஸ்ய  பஞ்சமைஸ் சைவ

*ஷஷ்ட:* : கஸிபுமர்தந  :

*ஸப்தமோ*  தைத்யஹந்தாச

*அஷ்டமோ* தீநவல்லப :

*நவம:*  ப்ரஹ்லாதவரதோ

*தசமோ* நந்தஹஸ்தக :

*ஏகாதச* மஹாரௌத்ரோ

*த்வாதஸ  கருணாநிதி :

த்வாதஸைதாநி  நாமாநி  ந்ருஸிம்ஹஸ்ய  மஹாத்மந :

ந்ருஸிம்ஹனைப் பற்றிய இந்தப் பன்னிரண்டு நாமாக்களைத் தினமும் பக்தியுடன் ஜபித்தால்,

எல்லா ஆபத்துக்களிளிருந்தும்,நிச்சயம் காப்பாற்றுகிறான்....
🌸🌸🌸🌸🌸 நரசிம்மர்
ஸ்ரீமதனந்த ஸ்ரீ விபூஷித அப்பல லக்ஷ்மி நரசிம்மராஜா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (1)

ஸ்ரீ வித்யாதரி ராதா சுரேகா ஸ்ரீராகிதரா ஸ்ரீபாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (2)

மாதா சுமதி வாத்ஸல்யாம்ருத பரிபோஷித ஜய ஸ்ரீபாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (3)

ஸத்ய ருஷீச்வர துஹிதானந்தன பாபனார்யனுத ஸ்ரீ சரணாஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (4)

 ஸவித்ருகாடக சயன புண்யபல பாரத்வாஜ ருஷிகோத்ர ஸம்பவா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (5)

தோ சொவ்பாதீ தேவ லக்ஷ்மி கணஸம்க்யா போதித்த ஸ்ரீ சரணா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (6)

புண்ய ரூபிணீ ராஜமாம்பசுத கர்ப புண்யபல ஸம்ஜாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (7)

சுமதிநந்தன நரஹரினந்தன தத்த தேவ பிரபு ஸ்ரீபாதா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (8)

பீடிகாபுற நித்யவிஹாரா மதுமதி தத்தா மங்கள ரூபா
ஜய விஜயீபவ திக்விஜயீபவ ஸ்ரீமதகண்ட ஸ்ரீவிஜயீபவ (9)

☘️நரசிம்ம பிரதோஷம் 🌺☘️

               கதம்பமுனிவர் பெற்ற வரத்தினால் அமைதி கொண்டிருந்தது கோட்டியூர்
தேவர்களும் முனிவர்களும் நாரயணனின் வருகைக்காக காத்திருந்தனர்!
ப்ரத்யக்ஷமானார் பரந்தாமன்!

             அனைவரும் அவர் திருவடி தொழுது கலங்கி நின்று அசுரகோன் இரணிய கசிபுவின் அட்டகாசங்களை ப்ர்ஸ்தாபித்தனர்! அவர்களை அமைதி படுத்திய மாலவன் தம் நரசிம்ம ஸ்வரூபத்தை அப்போதே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து இரணியனை வதைப்பதாய் வாக்களித்தார்!மகிழ்ந்த தேவர்கள் அவரை வணங்கி சென்றனர்!

        அசுரகுல தோன்றலானாலும்,
நாரயணனையே ஸ்மரித்தும் பணிந்தும் இருந்தான் இரணியனின் மகன் ப்ரகல்லாதன்!!. ஶ்ரீஹரி மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டிருந்த இரணியன்
ஹரிபக்தி கொண்ட தன் மகனைகொல்லவும் துணிந்தான்!. ஆனால் தோல்வியுற்றான்!

வெகுண்ட அவுணன் "எங்கே உன் ஹரி"?

               என்று வினவ" ஸர்வ வ்யாபியான ஹரி தூணிலும் ஏன் துரும்பிலும்கூட இருப்பான் என ப்ரகல்லாதன் உரைக்க தன் கதையால் தூண் ஒன்றினை ஓங்கி அடித்தான் இரணியகசிபு!!

"பிளந்தது தூணும் ஆங்கே
பிறந்தது சீயம், பின்னை
வளர்ந்தது , திசைகள் எட்டும்
பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது அப்புறத்து செய்கை
யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; க கனமூட்டை
கிழிந்தது மேலும் கீழும்!" என
கம்பன் உரைத்தபடி
அண்ட சராசரங்கள் கிடுகிடுக்க
துணினை பிளந்து வெளிவந்தான்
நரஹரி!! தன் பக்தன் ப்ரக்லாதனின் வாக்கினை மெய்ப்பிக்க  தூணினின்று வெளிப்பட்டான்!

                  நான்முகன் அளித்த வரத்திற்கு பங்கம் வாராமல், இரணியனை, பிரதோஷ காலத்தில் நிலைவாயிற்படியில், ஆயுதமின்றி தம்  கூரிய நகங்களாலேயே,
வதைத்தார்!!

                 ஸர்வ வ்யாபியான நாரயணன்
நரஹரியாய்த் தோன்றிய ஸ்வாதி திரு நாளாம். இந் நாளை நரசிம்ஹ
ஜெயந்தியாய்க் கொண்டாடி அவன் திருவடி தொழுவோம்!!

நரசிம்மா! நரசிம்மா!! நரசிம்மா!!!

No comments:

Post a Comment