Sunday 17 May 2020

கண்டுபிடி

காலையில்
கண் விழிக்கிறாய் ..
விழித்தது
உனது
உடலா
மனமா
உயிரா
பிரம்பமா
கண்டு பிடி..
...
படுத்தவன் எல்லாம்
விழித்தானா
விழித்தவன் எல்லாம்
விதி அறிந்தானா
விதி அறிந்தவன் எல்லாம்
வீதி வரும் பிரச்சினையில்
வெற்றி கொண்டானா
...
விழித்தது
மனம் என்றால்
மனம்
எங்கே தூங்கியது...
....
ஒரு உடலில் தூங்கி
அதே உடலில் எழுந்தால்
அதன் பெயர் தூக்கம்
...
ஒரு உடலில் தூங்கி
மறு உடலில் எழுந்தால்
அதன் பெயர் பிறவி
...
இடையில்
நடப்பது என்ன
...
அந்த இடையை
நிரப்புவது என்ன
...
கண்டு பிடி
...
உன் மேல்
யாருக்கு நம்பிக்கை
இன்று
உன்னை விழிக்க வைத்து
வேடிக்கை பார்ப்பது எது
....
ஒவ்வொறு விடியலுக்கும்
உன் மீது
அப்படி என்ன
ஒரு நம்பிக்கை
கண்டு பிடித்தாயா
..
கண்டு பிடிக்காமல்
கண் மூடாதே..
...
இல்லையேல்
மறுபடியும்
ஏமாற்றத்துடனே
உனது விழி திறக்கும்
நாளை விடியலில்
...
ஆனால்
அந்த வாய்ப்பு பிறந்த வனுக்கு
நிச்சயமா ...
.....
நாளை என்பது
உனது கையிலா
....
ஆனால்
இன்று
சர்வ நிச்சயம்
நீ விழித்து
உயிர்ப்புடன் இருக்கிறாய்
...
இன்றாவது
விழித்துக்கொள்
விழித்தவன்
யார்
ஏன்
விழித்தான் என
கண்டு கொள். ..

No comments:

Post a Comment