Saturday 2 May 2020

தினம் ஒரு திருமந்திரம்

அறம் செய விரும்பு - திருமூலர்!

"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே."

- திருமூலர் -

"யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே!"

- திருமூலர் -

உங்களால் எதைக் கொடுக்க முடியுமொ அதை, பாகுபாடு பாராமல் எல்லோருக்கும் கொடுங்கள், அதுவே அறம் எனப்படும்.

மற்ற பிற உயிரினங்களின் துயரைத் துடைக்கும் எதுவும் நல்லறமே!.

அதுவே நிலை பேற்றினை தரும்.

இத்தகைய அறமானது மனதாலும், செயலாலும், சொல்லாலும் செய்யப் படல் வேண்டும்.

இவ்வாறு செய்யும் அறமானது செய்கிறவனையும், அவனது சுற்றத்தையும் மேல் நிலைக்கு இட்டுச் செல்லும்.

மேலும் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குவது மட்டுமே அறம் இல்லை.

பசித்த பசுவுக்கு ஒரு பிடி புல்லைத் தருவதும், தூய மனதோடு ஒரு பச்சிலை இட்டு இறைவனை வணங்குவதும் கூட அறம்தான்.

குறைந்த பட்சம் பிறர் மனம் நோகாமல் இனிமையான சொற்களை பேசுவதும் கூட மேலான அறம்தான் என்கிறார் திருமூலர்.

எளிய வார்த்தைகளில் உயரிய தத்துவம்!

*அறம் செய விரும்புவோம்!*

No comments:

Post a Comment