Sunday 17 May 2020

சித்தர் பாடல்

பூட்டைத் திறப்பதுங் கையாலே மனப் பூட்டைத் திறப்பது மெய்யாலே ;வீட்டைத் திறக்க முடியாமல் விட்ட விதியி தென்கிறார் ஞானப்பெண்ணே ! வாசலிலே யொரு மேல்வா சலந்த வாசலிலே சிறு வாசலுண்டு ;நேசமு டன்றிரு வாசலிற் பூட்டு நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே !(மதுரை வாலைச் சாமி) பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப் பார்தனிலே அறுபத்து நாலு யோகம் ஆரப்பா இருக்குமென்று வெவ்வே றாக அலைந்தலைந்து கெட்டவர்க ளனந்தங் கோடி நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று வீரப்பா பேசாமல் மனக்கண் ணாலே விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே.(காகபுசுண்டர்)

No comments:

Post a Comment