Wednesday 15 November 2017

லிங்க வடிவில் முருகன்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா வில்வாரணி என்னும் ஊரில் உள்ளது அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில். கிட்டதட்ட 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலில் முருகன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவனும் முருகனும் வேறல்ல என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் அவர் இங்கு காட்சி தருகிறார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த குருக்கள் இருவர் வருடா வருடம் ஆடி கிருத்திகை அன்று திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் அவ்விருவராலும் ஒரு வருடம் சில காரணங்களால் திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் அவர்கள் மனமுடைந்து போனார்கள். அன்றிரவு அவர்கள் இருவரின் கனவிலும் வந்த முருகன், தான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளி இருப்பதாகவும், அங்கு கோவில் அமைத்து கிருத்திகை நட்சத்திரத்தன்று வழிபாடு செய்யும்படியும் கூறிவிட்டு மறைந்தார்.

No comments:

Post a Comment