Saturday, 4 November 2017

அகத்தியர் - வாக்கு யாரைத்தேடி இறை வரும்

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

ஒவ்வொரு மனிதனும் எம்மை நாடுகிறானோ, இல்லையோ, எம்மை நம்புகிறானோ, இல்லையோ, எத்தனையோ பிரச்சினைகளை, சிக்கல்களை எதிர் கொள்கிறான். உறவு சிக்கல், பண சிக்கல், ருண சிக்கல், பிணி சிக்கல், தசவழி சிக்கல்கள். பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது ஏற்படும் சிக்கல்கள், என்று இவ்வாறு மாந்தன் வாழ்வில் சிக்கல்களே நிறைந்துள்ளன. காரணம், மிகுந்த புண்ணியத்தை, சத்தியத்தை, பொறுமையை, தர்மத்தை, பெருந்தன்மையை எவன் ஒருவன் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு வாழ்க்கை வசப்படும். அனைத்தும் எளிதாகும். நினைத்தது உடனே பலிதமாகும். அவன் தனவானோ, ஏழையோ, நிம்மதியான வாழ்க்கை வாழ்வான். இல்லையென்றால், எந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மனிதன் குற்றங்களை செய்தானோ, அந்தந்த வழிகளில் எல்லாம் நிம்மதி குறைவதற்கான வழிகள் உண்டாகும். ஆகுமே, எத்தனை தான் ஞானிகள் நேரிலே தோன்றி எத்தனை தான் உபதேசம் செய்தாலும் கூட, மாந்தன் செவியில் இவையெல்லாம் ஏறாது என்பது, எமக்கு நன்றாகத் தெரியும். அகுதொப்ப சுருக்கமாக சொல்லப்போனால் ஆலயங்கள் சென்றாலும், சொல்லாவிட்டாலும், யாகங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும், எவன் ஒருவன் சத்தியத்தையும், தர்மத்தையும் விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ, அவனைத் தேடி இறை வரும் என்பது மெய்யாகும் அப்பா!

No comments:

Post a Comment