Tuesday 14 November 2017

அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் .

மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! நெல்லை மாவட்டம் அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் .

அத்ரி முனிவர் வழிபட்ட சிவாலய ஸ்தலமான அத்ரிமலையில் உள்ள பாலை மரம் என்கிற ஒரு அரிய வகை மரத்தில் பங்குனி மாதத்தின் கடைசி 5 நட்கள் சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் 2 நாட்கள் மட்டும் மரத்தின் நிறத்தை ஒத்த பல்லாயிரக்கணக்கான வண்டுகள்( நம் கண்களுக்கு தெரியாது) கிளைகளில் கூடி தங்கள் உடம்பிலிருந்து சுரபிகள் வழியாக நீரை போன்ற திரவங்களை தெரித்தடிக்கும் . நம் பார்வைக்கு , மரத்தடியில் மட்டும் மழை பெய்வது போலத் தோன்றும் , ஆகையால் இந்த மரத்திற்கு அமிர்தவர்ஷிணி என்ற மற்றொரு பெயரும் உண்டு .

- *சித்தர்களின் குரல் shiva shangar*

No comments:

Post a Comment