Saturday 4 November 2017

அகத்தியர் வாக்கு - சித்தர்களுக்கு "யாது ஊரே யாவரும் கேளீர் "

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"சித்தன்" என்று பகர்ந்தால், நாடு, மொழி, இனம் என்பது கிடையாது. வேறு தேசத்தில் இருந்து இங்கும், இங்கிருந்து வேறு தேசங்களுக்கும் சென்று மனிதர்களோடு, மனிதர்களாய் பணியாற்றுவார்கள். இங்கு மனிதனாகப் பிறந்து தன்னுள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணர்ந்து கொண்ட பிறகு, எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். இதுதான் சொந்த இடம் என்று சித்தர்களால் சொல்ல இயலாது. ஒரு சித்தர் என்பவரின் ஆத்மா, உயர் நிலையில் இருக்கக்கூடிய ஒரு புண்ணிய ஆத்மாதான். ஆக, எப்படிப்பார்த்தாலும், அந்த மேலுலகம், இறை உலகத்திலிருந்து வரக்கூடியவர்கள்தான் சித்தர்கள். "போகருக்கு" வேறு ஒரு சிறப்பு இருக்கிறது தெரியுமா? போகர்தான், "யேசுவாகப்" பிறந்தார். இப்பொழுது சொல், போகருக்கு சீன தேசமா? இந்திய தேசமா? அல்லது வெளிதேசத்தில் வாழ்ந்த சிலுவைக்காரனா? அல்லது கைலாயமா? பழனியில்தான் போகரைக் காணலாம் என்று சொன்னால், அது தவறு. பழனியிலும் காணலாம் என்றால், சரி!

No comments:

Post a Comment