Sunday, 5 November 2017

மயிலம் முருகன் திருக்கோயில்

மயிலம் முருகன் திருக்கோயில்''



.இங்கு மூலவராக வள்ளி தெய்வானை உடன் முருகப்பெருமான் அருள்கிறார்....ஆலய தொடர்புக்கு:9443377145..

சூரசம்ஹாரத்திற்குப் பிறகு சூரபத்மன் முருகனிடம், தம்மை ஆட்கொண்டு அருள் செய்யும்படி கூறினான். முருகப்பெருமான் உடனே அருள் செய்தார்.அவ்வாறே அசுரன் ,முருகனுக்கு மயிலாக அமர்ந்து, பிறகு மலையாக மாறினான்.இத்தலம் மயிலம் ஆனது.இங்கு கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த கிழக்கு ராஜகோபுரவாயில் திறக்கப்படும்.இங்கு பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள்.

முருகரின் திருக்கை வேல் இங்கு சிறப்பு..பால சித்தர் அதிஷ்டானமும் சிறப்பு...திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம்தான் மயிலம் கோயிலை நிர்வகித்து வருகிறது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில்..''மயிலாக நான் மாற வேண்டும்,வள்ளி மணவாளன் என் தோளில் விளையாட வேண்டும்''...ஆம்!சூரபத்மனை மயிலாக ஆக்கி அருள் புரிந்த மயிலம் முருகப்பெருமான் ,என்னையும் மயிலாக ஆட்கொண்டு அருள்வார்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

No comments:

Post a Comment