Saturday, 4 November 2017

ஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை


ஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை

ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் அருகில் அலைவாய்மலை அடிவாரத்தில் ஸ்ரீ கொங்கணசித்தருக்கு தனிக்கோவில் உள்ளது...

ராசிபுரம் அடுத்த பொன்மலை .உலைவாய்மலை .அலைவாய் மலையில் ஸ்ரீ சித்தேஸ்வரர் திருக்கோவில் ஒன்றும் அதில் உள்ள சித்தர்சுவாமிக்கு 4 கரங்கள் உள்ளதாம். இத்திருக்கோவில் கொங்கணசித்தர் ,போகரால் உருவாக்கப்பட்டதாக வரலாறு .

இதன் அருகே கூனவேலம் பட்டி அருகில் இராவணன் சகோதரி சூர்பனகைக்கு திருக்கோவில் உலகிலேயே ஒரே கோவில் தனிக்கோவிலாக உள்ளது ஆச்சர்யத்தின் உச்சம்..

ஸ்ரீ கொங்கணர் சித்தர் கோவில் இராசிபுரம் வெண்ணந்தூர் சாலையிலேயே இருப்பதால் எளிதில் தரிசிக்கலாம் .

மூலவராக ஸ்ரீ கொங்கணசித்தர் இருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு ஸ்ரீ கொங்கணரின் அருள் முழுமையாக கிட்டும் . திருக்கோவில் சுற்றி போகர் ,அகத்தியர் சிலைகளும் அமைந்துள்ளது .

ஸ்ரீ கொங்கணர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலை அடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அலைவாய் மலை என ஸ்ரீ கொங்கணரின் வாழ்வியல் தொடர்ச்சி தமிழகத்தில் கொங்கணர் பலகாலம் வாழ்ந்து ,சித்தமருத்துவம் ,பாஷாணக்கட்டுகள்,ரசவாதம் ஆகிய துறைகளில் உயர்ந்து நின்று திருப்பதி திருமலையில் ஜீவவித்துள்ளார் என்பது புலானாகிறது

மேலும் இங்கு உலைவைத்து ஊதியதிற்கான சான்றுகளும் சித்தர்கள் குகைகளும் உள்ளதாக கூறுவது ஆய்வுக்குரியது . அதனாலேயே உலைவாய்மலை என அழைக்கப்படுகிறதாம் .
ஸ்ரீ கொங்கணர் சித்தர் திருவடியே சரணம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

No comments:

Post a Comment