Saturday, 4 November 2017

தீர்த்தங்கரேசுவரர் - தீர்த்த மலை

தீர்த்தம் பொழியும் தீர்த்தமலை
இந்தியாவின் புன்னியத் தலங்களில் ஒன்றாகவும், தருமபுரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது தீர்த்த மலையாகும். பல்வேறு அவதாரங்களில் பல இடங்களில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் இங்கு தீர்த்தங்கரேசுவரர் எனும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்திற்க்குச் சென்றுவர தருமபுரியிலிருந்தும், அரூரிலிருந்தும் நேரடிப் பெருந்து வசதி உள்ளது. தருமபுரியிலிருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் 60 வது கி. மீட்டரில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை
மலைப்பகுதியில் நடந்துச் செல்வதற்க்கு வசதியாக கற்காரையிலான சாய்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் ஐநுாறு அடி உயரத்தில் அமைந்திருக்கும் மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில், ஆங்காங்கே நடை மேடை மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மலைப்பாதையின் இருபுறத்திலும், வயதானவர்களும், சாமியார்களும் பக்தர்களின் காணிக்கைக்காக ஆங்காங்கே காணப்படுகிறார்கள். இங்கு இறைவி அருள்மொழி வடிவாம்பிகை உடனுறை தீர்த்தங்கரீஸ்வரர் சிவலிங்க வடிவமாக சிவபெருமான எழுந்தருளியுள்ளார்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வெளிப்புறம் மற்றும் இயற்கை         படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்திற்க்கு இராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் வந்து சென்றதாக கல்வெட்டுக்களின் மூலம் அறியப்படுகிறது. இராமபிரான் இப்பூவுலகில் அவதாரம் செய்தவுடன் இரண்டு திருத்தலங்களில் சிவபெருமானை வழிப்பட்டதாக புராணத்தில் கூறப்படுகிறது. அவைகள் இரமேஸ்வரம் மற்றும் தீர்த்தமலை ஆகும்.
இத்திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி தீர்த்தம், அக்னி தீர்த்தம் மற்றும் அகஸ்தியர் தீர்த்தம் ஆகிய ஐந்து புன்னிய தீர்த்தங்கள் வற்றாமல் வளிந்தோடிக் கொண்டிருக்கின்றன. இத்தீர்த்தங்கள் உருவான விதத்திற்க்கு பல்வேறு புராணக் கதைகள் கூறுப்படுகிறது. அதன்படி இத்தலத்திற்க்கு வரும் பக்தர்கள் அரூரிலிருந்து ஊத்தங்கரை செல்லும் வழியில் பத்தாவது கி. மீட்டரில் அமைந்திருக்கும் அனுமன் தீர்த்தம் எனும் திருக்கோவிலுக்கு சென்று தீர்த்தலை வந்து தீர்த்தங்கரீஸ்வரை வணங்கினால் முழுப்பலனையும் அடையலாம் என்பது ஐதீகம்.
இத்திருத்தலத்தில் உயரமான மலை இடுக்கிலிருந்து எந்நாலும் வற்றாமல் நீர்ஊற்றுப் பெருகி வளிந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நாங்கள் அனைவரும் குளித்தவுடன் மனதில் இருக்கும் பாரம் இறங்கி பரவசமுடன் கூடிய புத்துனர்ச்சியை மனப் பூர்வமாக உணரமுடிந்தது. இந்தத் தீர்த்தத்தை குடிக்கும்போது உடலினுள் புது தெம்பும் முகத்தில் புது பொழிவும் உருவாவதை உணர முடிகிறது.
இம்மலையில் சித்தர்கள். ஞானிகள், யோகிகள் வாழ்ந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில அருணகிரி நாத சுவாமிகளால் பாடப்பட்ட ஒரேத் திருத்தலமாக சிறப்புடன் விளங்கிவருகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் இயற்க்கை எழில் கொஞ்சும் இந்த மலைத் திருத்தலத்திற்க்கு சென்று வந்தால் மனதில் இதமான உணர்வு பிறப்பதை உணரமுடிகிறது. வாழ்வில் வளம்பெற இத்திருத்தலத்திற்க்கு தவறாமல் செல்வோமாக.

No comments:

Post a Comment