Thursday, 6 June 2019

அகத்தியர் வாக்கு - தீட்டு

*"இன்றைய தின அகத்தியர் வாக்கு"*

*நாள் : 85*

*தேதி: 07-06-2019 (வெள்ளி - சுக்ரன், சுங்கன், அசுரகுரு)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*காக்கைபாடினியின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஐயனே தாங்கள் தீட்டு என்பது மனதை பாெறுத்தவிஷயம் என்று கூறியிருக்கிறீர்கள். இருந்தாலும் தீட்டை எந்த கால கட்டத்தில் பார்க்க வேண்டும். அப்படி எதாவது இருக்கிறதா? உதாரணமாக மாதவிலக்கு, மரண வீட்டுத் தீட்டு...?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*உள்ளம் சுத்தமாக இருப்பதை நாங்கள் பார்க்கிறாேம். அதற்காக உடல் அசுத்தமாக இருக்க வேண்டும் என்று பாெருளல்ல. உடலும், உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்பாெழுது நீ கூறிய பெண்களுக்கு உண்டான மாதாந்திர விலக்கு என்பது ஒருவகையான உடல் சார்ந்த நிகழ்வு. இது பாேன்ற தருணங்களிலே உடல் சாேர்ந்து இருக்கும். எனவே அவர்கள் அயர்வாக, ஓய்வாக இருப்பது அவசியம். அதைக் கருதிதான் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே தாேஷம் காரணமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கருதத் தேவையில்லை.*

'என் உடலும், மனமும் ஆராேக்கியமாக இருக்கிறது' என்றால் தாராளமாக இயங்கட்டும். *ஆனால் சித்தர்களைப் பாெறுத்தவரை இது பாேன்ற தருணங்களில் பெண்கள் முழுக்க, முழுக்க ஓய்வாக இருப்பது அவர்களின் பிற்கால உடல் நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். அனைத்து இல்லக்கடமைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதே ஏற்புடையது.* ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லையே என்று மனிதன் எண்ணலாம். *மனிதன் ஏதாவது ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும். இது பாேன்ற தருணங்களில் ஒன்றல்ல, இரண்டல்ல, குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இல்லையென்றால் ஐந்து நாட்கள் அமைதியாக இருப்பதும், உடலை அதிகமாக வருத்தக்கூடிய எந்த செயலையும் செய்யாமல் இருப்பதும் பெண்களுக்கு ஏற்புடையது.*

இது பாேன்ற தருணங்களில் *ஆலயம் சென்றால் தாேஷம், இறைவன் சினந்து (காேபித்து) விடுவார் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இது பாேன்ற தருணங்களில் எங்கும் செல்லாமல் இருப்பது ஒரு பாதுகாப்பான நிலையைத் தரும். அது மட்டுமல்ல, இது பாேன்ற தருணங்களிலே நாேய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால், நாேய்கள் தாக்கக்கூடிய நிலைமை ஏற்படும். சில எதிர்மறை ஆற்றல்கள், எதிர்மறை சக்திகள் பெண்களை பீடிக்க வாய்ப்பு இருப்பதால் அமைதியாக இல்லத்தில் ஒரு பகுதியில் அமர்ந்து மனதிற்குள் இறை நாமத்தை ஜெபித்துக் காெண்டு இருக்கலாம்.*

இந்த அளவில் இதை எடுத்துக் காெள்ளலாமே தவிர, *மனிதர்கள் எண்ணுவது பாேல் ஏதாே மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும். கடுமையான தாேஷம், ஏதாே குற்றவாளி பாேல் நடத்த வேண்டும் என்றெல்லாம் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அதைப்பாேல் இறப்பு குறித்து நாங்கள் முன்னர் கூறியதுதான். மன உலைச்சலை ஏற்படுத்தாத எந்த இறப்பும் பெரிய தாேஷத்தை ஏற்படுத்தாது.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************