Friday, 7 June 2019

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது 🙏 01.06.2019

அகத்தியர் ஜீவ அருள் வாக்கு

உரைப்பவர்  : குருஜி இறைசித்தர்
                           Ph. 95850 18295

உரைத்த இடம்  - பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்

அருள் பெறுபவர் -
 தி. இரா.சந்தானம் , கோவை
            Ph.91760 12104

தேதி - 01/06/2019





அகத்தியர் அருளுரை கீழ் வருமாறு



தனிப்பட்ட முறையில் கூறிய பரிகாரங்கள் பகிரப்பட்ட மாட்டாது



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!





அகத்தியர் ஜீவ நாடியை பற்றி உலகோர் புரிந்து கொள்ளவே இந்த பதிவு



பல அன்பர்கள் அகத்தியரின் நேரடி வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள் , இந்த பதிவை படித்து புத்துணர்ச்சி பெறுவர் .



ஜீவ நாடியில் அருள் பெரும் எல்லோருக்கும் அகத்தியர் எல்லாவற்றையும் உரைப்பது இல்லை - சிறந்த அருள் வாக்கினை பெற்றவர்கள் பதிவிடுவது இல்லை - பின் எவ்வாறு அகத்தியரை பற்றி புரியும் -



பலர் ஜீவ நாடி என்றால் ஏதோ பரிகாரம் கூறுவார்கள் - கேட்டு செய்ய வேண்டும் அவ்வளவு தானே என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை -



ஆனால் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதும் - இயற்கை சேதங்களை முன்கூட்டியே அறிவிப்பதும் , இயற்கை சேதங்களில் இருந்து காப்பதும் - ஊக்கம் கொடுப்பதும்  - ஒரு தாயாகவும் தகப்பனாகவும் குருவாகவும் பரம்பொருளாகவும் இருந்து வழி காட்டுவதும் அய்யன் ஒருவரே


படித்து பயன் பெறுவீர்களாக
********************************************************************
அருவாய் திருவாய் நின்ற அப்பனே போற்றி
உருவாய் மலராய் நின்ற உமையவள் திருப்பாதம் போற்றி போற்றி போற்றி பணிந்து

சிரம் தாழ்ந்து

அகத்தியன் யானே

மழல்தனையே உமை யாம் அழைத்தோம்

அருள்தனை உரைப்பேன் கேளடா

வானவர் போற்றும் மகிழ்தனை பெறுவாயே

உமக்கு யாம் ...................................

(குறிப்பு - ஜீவ நாடியில் வரும் வரிகளில் சில அடிக்கோடிட்டு காணப்படும். அவை நாடி வாசிப்பவர் மட்டுமே படித்து க்கொள்ளலாம், அருள் பெறுபவருக்கு அதை படிக்க மாட்டார்கள். நாடி வாசிக்கும் போது, அந்த வரிகளை மனதுக்குள் அவர்கள் படித்து கொள்வார்கள். மேலே உள்ள இடத்தில் -  உமக்கு யாம் - என்று வாசித்து சிறிது இடைவெளி வருகிறது. அடுத்த தொடர்ச்சி புதிதான வாக்கியமாக அமைகிறது. எனவே, எனது அனுமானம் ஒரு மறைக்கப்பட்ட செய்தி அதில் வந்து இருக்கும் என்பது. அது என்ன என்று எனக்கும் தெரியாது. மேலே இடைவெளி விட்டு காட்டியுள்ளேன். 🙏)

உன்னில் இருந்து உமை காப்பேனே

நான் தவமீன்ற மலைதனிலே உமை யாம் அழைத்தோம்.

யாம் மனம் மகிழ்ந்தோம்

மழலையே உமை யாம் தென்றலாக வந்து உமை ஆசிர்வதித்தோம்.

கருட வடிவில் வந்து உமக்கு காட்சி தந்தோம்

ஒரு வயோதிகனாக வந்து உமை வாக்கு உரைத்துச்சென்றேன் உன்னிடம்.

அறிவாய் நீ.

*மச்சியாக* வந்து உன்னிடம் அன்னம் கேட்டோம்.
உன் நினைவுக்கு எட்டவில்லை ஐயா.

யாம் இருக்கிறோம் உனைக்காக்க துயவனே தயங்காதே.

உனை சுற்றி இருக்கும் கள்ளன் அவன், குள்ளன் அவன், துஷ்டன் அவன் அத்துனையும் விட்டொழிவானே

உமக்கு யாம் அன்றேயே உரைத்தோம் இந்த சென்மத்தில் உனைச்சுற்றி ஒரு கூட்டம் கூடுமடா

அப்போது நீ உயர்நிலை அடையக்கடைவாயே என்று.

உனை ஈன்றவள் அவள் மனமாற்றம் பெறுவாளே.
நலம் பெறுவாள் தேக ஆரோக்கியம் சித்தி பெருவாள்

மனம் தளராதே

செய்தொழில்தன்னிலே மீன்டும் ஒரு உயர் நிலை தனை அடைவாய் நீ.

உன் மழலைகள் வாழ்வு சீர் பெரும்.

கொன்டவள் அவள் தேகத்தில் இருக்கும் சிறு சிறு இன்னல்களும் விட்டு ஒழியும் அப்பா.

இன்று மலைபோல் இருக்கும் துயர் எல்லாம் என்னிக்கையில் முப்பது நாளுக்குள் பனி போல் விட்டு விலகுமே. !!!!!!!

தேகம் சீர் பெரும் தூயவனே தயங்காதே !!!!!!!

யாம் என் நாமம் அதை பறை சாற்றச்சொன்னோம்
பறை சாற்று !!!!!!!

ஏசுவோர் ஏசட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் !!!!!

யாம் உனக்கு முன்பேயே உரைத்தோம்
 ஏசுவோர் எல்லாம் எமையே தூற்றுவோர் எல்லாம் ஏமையே. !!!!!!
யாம் காப்போம்.!!!!!!

நாவடக்கம் கொள் மகனே
விவாதத்தை விட்டொழி !!!!!!

ஆலயப்பனி அதனை சிறப்புடன் செய் மகனே !!!!!

உனக்கு ஒரு திங்களுக்குள் அமையப்பெற்று நிலை நிறுத்தைய்யா. !!!!!!!

 உனது வாழ்வு சீர் பெரும். !!!!!!!

உன் மழலைகளின் கர்மம் முற்றும் தீரும்.!!!!!!!

நவகோடி சித்தனின் நல் ஆசி கிட்டுமய்யா !!!!!

மனை அது மாற்றம் பெற்று புது மனை அது அமையப்பெறுமே.!!!!!!!!!

மழலை வாழ்வு சீர் பெரும் அப்பா !!!!!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
யாம் இருக்கிறோம் !!!!!!!!
ஆலயப்பனி அதை செய் !!!!!!!!
உமக்கு யாம் உன்உள்இருந்து இயக்குவோமே !!!!!!!!!

விவாதம் அதை விட்டொழி !!!!!!!!
நான் உனக்கு அன்றேயே உரைத்தேன்
உனக்கு நான் நாடி வழி நற்பலன்கள் உரைக்கின்றேன் என்று
யாசகம் தேடி யாரிடமும் சொல்லாதே !!!!!!!
>>>>>>>>>>>>

உமை யாம் காப்போம் முற்றே 🙏🙏🙏🙏🙏