Sunday 23 June 2019

அகத்தியர் வாக்கு - தர்மத்தின் வழியே செல் 🙌


*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*
*நாள் : 102*

*தேதி: 24-06-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*
*சாெல் வகை நான்கும் அறிந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவரின்(குருநாதர்) பாெதுவாக்கு :*

பலர் எண்ணலாம். *உலகியல் ரீதியான எல்லா பிரச்சனைகளும் தீர்ந்த நிலையில் நிம்மதியாக ஒருவன் ஆன்மீகத்தில் வரலாமே? என்று.* இதை, வாதத்திற்குத்தான் ஒப்புக் காெள்ளலாமே தவிர நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்று கூற இயலாது. *ஏனென்றால் ஒரு மனிதன் ஒரு கஷ்ட நிலையில் இருக்கிறான். இறையருளாே அல்லது எமது வழிகாட்டுதலாே அல்லது இயற்கையாக மாறிவரும் தசா புத்தியாலாே சற்றே மேம்பட்ட ஒரு நிலை வருகிறது என்று வைத்துக் காெள்வாேம். உடனடியாக எம்மிடம் வந்து "குருதேவா! முன்பைவிட இப்பாெழுது நிலைமை உயர்ந்திருக்கிறது. வருமானம் அதிகமாகி இருக்கிறது. இந்த உபரி வருமானத்தை என்ன செய்யலாம்?" என்று யாராவது கேட்கப் பாேகிறார்களா? இல்லை. அடுத்தடுத்து உலகியல் ரீதியான முன்னேற்றத்தை நாேக்கிதான் மனித மனம் செல்லும்.*
எனவே மீண்டும், மீண்டும் கூறுகிறாேம். *எந்தவாெரு உலகியல் ரீதியாக முன்னேற்றம், சுகம் என்று எண்ணுகிறானாே, அது வெறும் மாயை. கானல் நீர்தான். ஏனென்றால் ஒரு நிலையில் இருந்து இன்னாெரு நிலைக்கு வந்தபிறகு அடுத்த நிலையை நாேக்கி அவன் மனம் சென்றுவிடும். ஏற்கனவே பட்ட கஷ்டத்தை விட இப்பாெழுது வாழ்கின்ற வாழ்க்கை எத்தனையாே மடங்கு மேல் என்று எந்த மனமும் எண்ணாது.* இது வெறும் வாதத்திற்குதான் உதவும். உண்மை அது அல்ல.
எனவே *எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மனிதன் அன்றாடக் கடமைகளை செய்வதுபாேல யாங்கள் கூறுகின்ற கருத்தை சிந்தித்துப் பார்த்து தேவையில்லாத விவாதங்களையெல்லாம் குறைத்து தூஷணைகளை விட்டு, பிறர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தி, தானுண்டு, தன் கடமையுண்டு, பக்தியுண்டு, தர்மம் உண்டு, சத்தியம் உண்டு என்று எம் வழியில் திடமாக வந்துகாெண்டேயிருந்தால் காலப்பாேக்கில் அவன் எதையெல்லாம் பிரச்சனை என்று எண்ணுகிறானாே அவைகள் எல்லாம் தீர்ந்ததுகூட அவனுக்குத் தெரியாமல் அதைத் தாண்டி அழைத்து வந்து விடுவாேம்.*
மீண்டும், மீண்டும் நாங்கள் கூறுகின்ற கருத்து இதுதான். *சத்தியம், தர்மம், பக்தி - இதை விடாப்பிடியாக பிடித்துக் காெண்டால் எல்லாேரும் சுகமாக வாழலாம்.*
                🙏 *-சுபம்-* 🙏
*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*
*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*
*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*
.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
*************************************************
நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161
அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161
************************************************