Monday 28 August 2017

வலி வளி வழி நெறி:-- பகுதி ஐந்து ; உள் ஒளி விளக்கம்

வலி வளி வழி நெறி:-- பகுதி ஐந்து
************************************
கேள்வி:---
***************
வலி வளி வழி, பயிற்சியில் ஆழ் நிலையில் புருவ மத்தியில் சூரிய ஒளி தென்படுகின்றது. ஏன் அய்யா.?
பதில்:---
******
வெளியே பார்க்கும் கண்கள் உள்ளேயும் பார்க்கும் திறன் உடையது.. புலனும் பொறியும் விடுபட வேண்டிய கட்டத்தில் இந்த ஒளி புருவ மத்தியில் தோன்றும்.. இரு கண்களும் வெளீயே ஒன்றாகத் தான் பார்க்க முடியும்.. இரு கண்களும் தனித் தனியே வேறு வேறு காட்சிகளை ஒரு நாளும் பார்க்க முடியாது... கண்கள் மூடிய நிலையில் கண்கள் ஒன்றாகப் பார்க்கும் இடம் புருவ மத்தியாக மட்டுமே இருக்க முடியும்.. லென்ஸ் போல் மனக் கண்ணில் தோன்றும் பரவலான காட்சிகள் குவிக்கப் பட்டு புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றுவது இயற்கையே.. இது ஒன்றும் அப்படி பாராட்டும் படியான ஒன்று அல்ல.. மனம் அதிகமாக செயல் பட பட ஒளியின் பிரகாசமும் கூடிக் கொண்டே போகும்.. இதை தவறாக ஒரு முன்னேற்றம் என பாராட்டும் யோகிகளும் உண்டு... ஆனால் உண்மையில் அப்படி இல்லை.. ஒளி கூட கூட அதிகம் ஆக ஆக மனம் தீவிரமாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.. இந்த ஒளியில் நீண்ட நேரம் இருந்து பயின்றால், சோர்வும் களைப்புமே மிஞ்சும்.. மனம் வலிமை அடைந்து, விழிப்பு நிலையின் கட்டுப் பாட்டை உடைத்துக் கொண்டு நெறி தவறி நடக்கத் தொடங்கும்.. இந்த ஒளியில் பழக பழக தன்நிலையில் உள்ள விழிப்பின் பலம் குறைய தொடங்கும் என்பது உறுதி.. புலன் பொறி இணைப்பு இன்னும் உறுதியாகும்.. பொறியிலிருந்து புலன் பிரிந்தால் தான், விழிப்பு நிலையில் தோன்றுவதை புலனால் புலப்பட முடியும்.. பொறியில் சிக்குண்ட புலன் விழிப்பு நிலையை விட்டு பிரிந்தே இருக்கும்.. இதனால் என்ன நடக்கும் என்றால் எல்லாமே நெறி தவறி நடக்கும்.. இந்த ஒளியை பிரமாதமாக பேசி முறை தவறிய நிலையில் பல யோகிகளால் கற்று கொடுக்கப் பட்டு, பல பயிற்சியாளர்கள் விழிப்பின் பலம் இழந்து நிற்கிறார்கள்...
உள்ளே புருவமத்தியில் ஒளியை வேடிக்கை பார்க்கும் நிலையால் ஒரு பலனும் இல்லை என்பதை சுட்டிக் காட்டவே தன் கண்களை தோண்டி எடுக்கும் கண்ணப்பர் சரித்திரம் உள்ளது.. ஒரு கண்ணை தோண்டி எடுத்தபின் மறு கண்ணை எடுக்க சிவன் தடுத்ததின் காரணம் ஒரு கண் உதவியால் புருவமத்தியில் இரு கண்கள் குவிந்த பார்வையால் உண்டாகும் அந்த உள் ஒளியை காண முடியாது என்பதற்க்காக தான்.. அந்த ஒளி வேண்டதக்கது அல்ல.. அதனால் சிறு நன்மைகள் விளையலாம்.. ஆனால் பெருத்த தீமை விளையும் என்பது நிச்சயம்.. நமது யோக பயிற்சியில் குருட்டு தன்மை காணல் என்ற பயிற்சியில் எந்த ஒளியையும் காண முடியாது.. ஆனால் மனம் மிக விரைவாக விழிப்பு நிலையில் அடங்கும் என்பது பயின்றவர்களின் அனுபவம்... மர்ம யோகத்தில் மட்டுமே உண்மை உள்ளவாறு வெளிப் படும்.. புருவமத்தி ஒளியை உள் ஒளி என தவறாக எடுத்துக் கொள்ளப் பட்டு விட்டது.. குருட்டு தன்மையில் வெளிப்படும் விழிப்பு நிலையின் தெளிவு நிலையே உண்மையான உள் ஒளி..
வலி வளி வழி நெறி பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பார்வை உடல் வலியில் இருக்கும் போது, பொது பரிவு பார்வை தானாகவே கை கூடுகிறது.. புருவ மத்தியின் குவிந்த பார்வைக்கு அங்கே இடம் இல்லை.. பொது பார்வையும் ஒரு குருட்டுப் பார்வைக்கு ஒத்தது.. பார்க்காமல் பார்க்கும் பார்வை அது..,, அந்த பார்வையில் மனம் தானாக அடங்குகிறது... உலகில் குருடர்கள் என அழைக்கப் படும் கண் இல்லாதவர்கள் இருட்டைதான் பார்க்கிறார்கள்.. குருட்டு தன்மை அவர்களுக்கு கிடையாது.. இருட்டு தன்மைதான் அவர்களுக்கு உள்ளது என்பது தான் உண்மை.. பொறியினுடைய இருட்டுத் தன்மையோடு அவர்களின் புலன் சதா காலமும் பொருந்தியே இருக்கும்... பொறியும் புலனும் பிரிந்த பிரிவு நிலை, குருட்டுத்தன்மையாலே மட்டுமே சாத்தியமாகும்... இதனை உன்னிப்பாக கவனிக்க..

No comments:

Post a Comment