Tuesday 29 August 2017

அருள்மிகு முத்துக்குமாரஸ்வாமி கோவில், பரங்கிப்பேட்டை, கடலூர்

முருகப்பெருமானின் ஆறு
முகங்களுக்கும் தனித்தனியே
பூஜை!!!!!!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைய
ில் அமைந்துள்ளது முத்துக்குமார
சுவாமி திருக்கோவில். இந்த
ஆலயத்தில் வீற்றிருக்கும்
முருகப்பெருமான், ஆறு
முகங்களுடன் ஆறுமுகனாக
காட்சியளிக்கிறார். இந்த
முருகப்பெருமானின் ஆறு
முகங்களுக்கும் தனித்தனியே
தீபாராதனை காட்சி பூஜை
நடைபெறுவதே இந்த ஆலயத்தின்
சிறப்பாக உள்ளது.
இது போன்று ஆறு
முகங்களுக்கும் தனித்தனியாக எந்த
ஆலயத்திலும பூஜை
நடைபெறுவதில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு
முருகப்பெருமானுக்கு மயில்
வாகனம் இல்லை.
இடும்பன் வாகனமாக இருக்கிறார்.
ஆலய விழாக்களின் போதும்,
இடும்பன் மீது அமர்ந்தே
முருகப்பெருமான் வீதி உலா
வருகிறார். இந்த ஆலயத்தில்
மற்றொரு சிறப்பும் உள்ளது.
பிரம்மா அனைத்து
கோவில்களிலும் நின்ற கோலத்தில்
தான் காட்சி தருவார். ஆனால்
இங்கு அமர்ந்த கோலத்தில் இரண்டு
கைகளையும் கூப்பி இறைவனை
வணங்கிய நிலையில்
காணப்படுகிறார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு
ஈசான்ய திசையில் அமைந்த தலம்
இது. முருகன் சன்னதிக்கு
வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறர்.
அருகிலேயே தென்திசை நோக்கி
விசாலாட்சி சன்னதி உள்ளது.
பொருளை இழந்தவர்கள் மீண்டும்
கிடைக்கவும், தெரிந்தோ,
தெரியாமலோ பதவியிறக்கம்
அல்லது வேலை இழந்தவர்கள்
மீண்டும் பணி கிடைக்க சிவனுக்கு
வஸ்திரம் அணிவித்து, சம்பார் சாதம்
அல்லது பொங்கல் படைத்து
வேண்டிக்கொள்கிறார்கள்.
விசாலாட்சி அம்பிகைக்கு வடை,
சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா
சகஸ்நாமம் பாராயணம் செய்து
வணங்குகின்றனர். இந்திரன், இங்கு
கார்த்திகை முதல் ஞாயிற்றுக்
கிழமையில் வணங்கி அருள்
பெற்றார். எனவே, இந்நாளில் இங்கு
வழிபடுவது விசேஷம்.
நிர்வாக அதிகாரி, அருள்மிகு
முத்துக்குமர சுவாமிதிருக்கோய
ில், பரங்கிப்பேட்டை - 608 507. கடலூர்
மாவட்டம்.

No comments:

Post a Comment