Monday 28 August 2017

வலி வளி வழி நெறி:-- பகுதி 1,2,3

சிவகலப்பின் முகிழ்ப்பில் முனைந்து வலியுடன்  உடன் படும் பயிற்சியை செய்து, பழகாத காரணத்தினால் தான் மரணத்தில் மாள்கின்றனர்... மரணத்தை வெல்லும் அந்த உயரிய பயிற்சி மர்ம யோகத்தில் மட்டுமெ உள்ளது என்பதை மர்ம யோகிகள் நன்கு உணர்ந்து தொடர்ந்து பயின்று கொண்டு இருக்கிறார்கள்.. அவர்கள் வலியோடு இருப்பதைக் காட்டிலும் அந்த வலியோடு உடன்படும் பயிற்சிதான் மிக அவசியம் என உணர்ந்து பயின்று கொண்டு இருக்கிறார்கள்.. மிக விரைவில் எந்த வலியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது... அவர்களை யாரும் சித்திரவதை செய்ய முடியாது.. புன்னகையோடு பெரும் வலியையும் ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வந்து விடுவார்கள்.. இந்த நிலையில் மட்டுமே பயம் என்பது முற்றிலுமாக நீங்கும் ஒரு உன்னத நிலைக்கு விரைவில் வருவார்கள்... எதற்கும் அஞ்சா நிலையும், மர்ம யோகிகளின் பல உன்னத குணங்களில் ஒன்று... அவர்கள் பயிலும் பயிற்சியை இங்கே விளக்கும் போது நேரடியாக பயிலாதவர்களும், உணர்ந்து பயன் பெறுவார்கள்.. கவனமாக தொடர்ந்து பயிலுமாறு அன்பர்களை வேண்டப்படுகிறார்கள்... தொடர்பு அறுந்து போகாமல் ஒரு புரியாத நிலைக்கு சென்று சிரமப் படாமல் இருக்க, இந்த வலி வளி வழி நெறி தொகுப்பின் ஏனைய பழைய பகுதிகளையும் படித்து வருமாறு வேண்டப் படுகிறார்கள்...

வலி வளி வழி நெறி:-- பகுதி
ஒன்று
**************************************************
எனக்கு நானே எனக்கு நான் மட்டுமே என்ற சுய தூண்டல்
பத்து வாரங்கள் சில குறிபிட்ட ஆர்வம் உள்ள அன்பர்களுக்கு மட்டும் தீவிர பயிற்சி என்ற முறையில் நேரடியாக பயிற்சி தரப் பட்டது.. அப்பொழுது வெளிப்பட்ட பல இரகசிய பயிற்சி முறைகள் ஏதோ ஓர் இருவருக்கு மட்டுமே பயன் பட்டது போல் தெரிகிறது.. அந்த அந்தரங்கமான இரகசியங்கள் பகீரங்கமாக வெளியிட்டால் துரோணச்சாரியரை மனதில் நேசித்த ஏகலைவன் போல் சிலர் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள அன்பர்கள் பலன் அடைவார்கள் என உணர்த்தப் பட்டதால், அந்த இரகசியங்களை, பதிவுகளில் ஏற்றிட அண்ட பேரறிவின் துணையோடு ஒன்றன் பின் ஒன்றாக பதிவிட முனைகின்றேன்.. ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கும் இது பெரிதும் தூண்டுதல் தரலாம்...
தூண்டுதல் என வரும் போது சுய தூண்டுதல் புற தூண்டுதல் என இரண்டாக பிரிகிறது.. சுய தூண்டுதலுக்காகவே புற தூண்டுதல் வடிவமைக்கப் பட வேண்டும்.. ஆனால், அப்படி, கள்ளம் கபடம் நிறைந்த உலகில் வடிவமைக்கப் படுவதில்லை... புற தூண்டுதலை வலிமை படுத்தி, மற்றவர்களை அடிமை ஆக்கும் முயற்சியில் ஆதாயம் தேடும் பணி தான் நடக்கிறது... புறத்தூண்டுதலில் சிக்குண்ட அடிமைகள் ஒரு நாளும் சுய தூண்டுதலுக்கு வரவே முடியாது... சுய தூண்டுதலில் மட்டுமே அகப் படும் அகக் குரு ஆட்சி அடைய பெறாமலேயே இந்த அடிமைகள் மண்ணில் அடக்கமாகி விடுகிறார்கள்.. அப்படி மண்ணில் அடக்கமானவர்களில் புற தூண்டுதலை தூண்டி ஆதாயம் தேடிய மகான்கள் என பிரபலமானோர்களையும் சேர்த்து தான் இங்கு குரிப்பிடப் படுகிறது.. அந்த மகான்களும் சுய தூண்டுதல் இல்லாமல்தான் மண்ணில் மறைந்தார்கள்.. ஆகவே சுய தூண்டுதலை அறிந்து உணர்ந்து அதன் வழியில் சென்று, பயின்றால் மட்டுமே எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்றை, தரக்கூடிய ஒரே தெய்வ நிலையான அகக் குருவினை அடைந்து பயன் பெற முடியும்... வேறு எந்த உலகம் கற்பிக்கும் மத தெய்வங்களிலிருந்து பெற முடியாது என்பது அசைக்க முடியாத உண்மையாக உள்ளது... ஆகவே தூண்டப் பட்ட தூண்டுதலில் இருந்து விடுப்பட்டு, சுய தூண்டலை ஏற்படுத்தி, அதனை ஏற்றுக் கொள்ளாத மனிதன், இறைநிலைக்கு அருகில் செல்லவே முடியாது.. முடியவே முடியாது...
அப்படி மேன்மை மிக்க சுய தூண்டலை ஏற்படுத்தும் பயிற்சிகள் அக குருவால் சுட்டி காண்பிக்கப் பட்டு மர்ம யோகத்தில் மட்டுமே வெளிபடுவதால், இதை போன்று உலகியல் வழக்கில் எதுவும் இல்லையே என ஒத்துப் பார்த்து ஒதுக்கி விட்டால் ஒரு மனிதனுக்கு இழப்பு மிகப் பெரிய இழப்பாக இருக்கும்... ஆகவே எதனோடும் ஒத்துப் பார்க்காமல், சுயமாகவே, தானாகவே, பயின்று, அனுபவ முறையில் முன்னேற்றம் காணும் போது சுய தூண்டலின் அவசியம் அருமை நமக்கு தெரிய வரும்.. எனக்கு நானே எனக்கு நான் மட்டுமே என்ற உறுதிப்பாடு மேலோங்க மேலோங்க அதி விரைவான சுய தூண்டலால் அக குருவினை நோக்கிய பயணம் விரைவு படும்.. அன்பர்களே வலி வளி வழி நெறி என்ற தலைப்பிலே வரும் பதிவுகளை கவனமாக படித்து, சுய தூண்டலை அதி விரைவாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.. இந்த காலமே நல்ல காலம்.. என் பதிவுகள் எப்பொழுது நிற்கும் என சொல்ல முடியாது.. அண்ட ஆற்றலே அதை முடிவெடுக்கும்.. மிக கவனமாக பல தடவை படித்து, முக்கியமாக பயின்று பயன் பெற வேண்டுகின்றனன்..

வலி வளி வழி நெறி:-- பகுதி இரண்டு
*****************************************************
வலி மட்டும் தான் வலிமை கூட்டும்
வலி (pain) என்றவுடன் விரைந்து விலகி ஓடும் மனித குலம், வலி வராமல் இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்து கொண்டு இருக்கிறது.. வலியை ஏற்றுக் கொள்ளும் மனிதன் இல்லவே இல்லை போல் தோன்றுகிறது... வலி அற்ற ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கொள்ளவே விருப்பி, அதற்காக வாழ்க்கையை முழுவதும் அற்பணித்து விட்டு பின் ஏமாந்து போய் முடிவிலே நோய் என்ற பெரும் வலியை அனுபவித்து ஆக வேண்டிய சூழ் நிலைக்கு, தள்ளப் பட்டு பின் மரணம் என்னும் மிகப் பெரிய உச்ச கட்ட வலியின் மூலம் கடந்து செல்லும் பொழுது மனம் என்ற நெருப்பு பூதத்தின் கனல் அணைக்கப் படுகிறது.. காரணம் நீர் என்ற சித்த பூதம் அந்த வலியினை அனுபவபடாத காரணத்தினாலும், அதில் பயின்று தேர்ச்சி பெறாத காரணத்தினாலும், நிலை தடுமாறி, நீர் பெருக்கத்தால் வாதம் பித்தம் சிலேக்குமம் என்ற மூன்றில் நீர் நிலையாகிய சிலேக்குமம் மேலோங்கிய நிலையில், பித்தத்தின் உஷ்ணம் அல்லது கனல் அணைக்கப் படுகிறது.... இதனால் உடலின் இத நிலை என்ற ஓர் உன்னத நிலை சீர் நிலை கெட்டு உடல் திசுக்கள் செயல் இழந்து போய் விடுவதால், முடிவில் உடலை மரணம் கவ்விக் கொண்டு பாழ் படுத்தி விடுகிறது.. இந்த முடிவான உடலின் பெரும் துயரத்திற்கு மூலம் காரணம் சித்தம் வலியை அறிந்து அதன் போக்கை உணர்ந்து பயிலாமையே..
முதலில் வலி என்பது என்ன? யாரும் கொடுக்காத விளக்கத்தை மர்ம யோகமாகிய தமிழ் யோகம் கொடுக்கிறது... சித்தத்தில் புதைந்து விடாபிடியாக மிக மிக உறுதியாக பல பிறவிகளின் வாசனை பதிவுகளை, அசைத்தல், பெயர்த்தல், இடம் மாற்றம், நீக்கல் என்ற செயல்களை முறையாக ஒன்றன் பின் ஒன்றாக செய்யும் போது, வலி ஏற்படுகிறது.. அணு பிளவு ஏற்படும் பொழுது எப்படி உஷ்ணம் வெளி கிளம்புகிறதோ அதே போல் இறுகி போன பல பிறவி பதிவுகள் உடையும் போது ஏற்படுகின்ற உடலின் இத நிலைக்கு உடன் படாத அதிகபட்ட உஷ்ணம், கனல் தான் மனதிற்கு வலியாக தோன்றுகிறது... ஓங்கும் கனலோடு மனம் பயின்று பழக்கப் படுத்திக் கொள்ளவில்லையென்றாலும், ஓங்கும் கனலோடு மனம் பயில முடியவில்லையென்றாலும், ஓங்கும் கனல் தோன்றும் வேளைகளில் எல்லாம் மனம் அதோடு ஒன்றித்து உடன் பட்டு போக முடியாமல் தவிக்கின்ற வேளையில் தான் இந்த தவிப்பே மனமாகிய நமக்கு வலியாக தோன்றுகிறது...
இந்த தவிப்பை நீக்கி, ஓங்கும் கனலோடு பழகி, எந்த தவிப்பும் இல்லாமல் இயல் நிலையிலே, யதார்த்தமாக ஏற்றுக் கொள்ள, பயிலாத ஆன்மீகம் ஆன்மீகமே இல்லை... வலியை ஏற்றுக் கொண்டு வலியோடு, பழகி எந்த வலியோடும், எந்த நிலையிலும் உடன்பாடு கொள்ள மனம் தயாராகி விட்டால், அப்படி பட்ட மனம் படைத்த மனிதனுக்கு மரணம் வரவே வராது... வலி என்பது மர்ம யோகத்தில் உடன் படவேண்டிய ஒன்று...உடன் படாத வலி என்பது மிக கொடுமையானது... எல்லா யோகங்களிலும் இல்லாத ஒரு பெரும் தனி சிறப்பு மர்மயோகத்தில் இந்த வலியோடு உடன் படும் உன்னத பயிற்சி தான்.. வலியை ஏற்படுத்தி, வலியோடு உடன் பட வைக்க வில்லை என்றால் மா ரணத்தால் மரணம் கொடுக்கும் அல்லது ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் செயல் இழந்து போய் விடுகிறது.. மனம் செயல் இழந்து போனால் எந்த சிகிச்சையும் பலன் தராது.. வலியை ஏற்றுக் கொண்டு அதோடு உடன்பாடு கொள்ளும் பயிற்சியை மேற் கொள்ளாத காரணத்தினால், தான் பெரும் வலியிலே மனம் இழந்த நிலையிலே முதல் அமைச்சராக இருந்தவர் மிக உயர்ந்த சிகிச்சைகள் கொடுத்தும் பலன் இன்றி மரணத்தில் தன்னை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.. அவர் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த மனித குலமும், அந்த வலியோடு உடன் படும் பயிற்சியை செய்து, பழகாத காரணத்தினால் தான் மரணத்தில் மாள்கின்றனர்... மரணத்தை வெல்லும் அந்த உயரிய பயிற்சி மர்ம யோகத்தில் மட்டுமெ உள்ளது என்பதை மர்ம யோகிகள் நன்கு உணர்ந்து தொடர்ந்து பயின்று கொண்டு இருக்கிறார்கள்.. அவர்கள் வலியோடு இருப்பதைக் காட்டிலும் அந்த வலியோடு உடன்படும் பயிற்சிதான் மிக அவசியம் என உணர்ந்து பயின்று கொண்டு இருக்கிறார்கள்.. மிக விரைவில் எந்த வலியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது... அவர்களை யாரும் சித்திரவதை செய்ய முடியாது.. புன்னகையோடு பெரும் வலியையும் ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு வந்து விடுவார்கள்.. இந்த நிலையில் மட்டுமே பயம் என்பது முற்றிலுமாக நீங்கும் ஒரு உன்னத நிலைக்கு விரைவில் வருவார்கள்... எதற்கும் அஞ்சா நிலையும், மர்ம யோகிகளின் பல உன்னத குணங்களில் ஒன்று... அவர்கள் பயிலும் பயிற்சியை இங்கே விளக்கும் போது நேரடியாக பயிலாதவர்களும், உணர்ந்து பயன் பெறுவார்கள்.. கவனமாக தொடர்ந்து பயிலுமாறு அன்பர்களை வேண்டப்படுகிறார்கள்... தொடர்பு அறுந்து போகாமல் ஒரு புரியாத நிலைக்கு சென்று சிரமப் படாமல் இருக்க, இந்த வலி வளி வழி நெறி தொகுப்பின் ஏனைய பழைய பகுதிகளையும் படித்து வருமாறு வேண்டப் படுகிறார்கள்...
சேரும் இடம் அறிந்து சேர்ந்து சீர் பெறுவோமாக...

வலி வளி வழி நெறி:-- பகுதி மூன்று
*****************************************************
சலிப்பை கழித்தால் தான் களிப்பு
வலி வளி வழி நெறியில் முதலில் உள்ள வலியை பற்றி ஆராய்ந்து உணராமல், அதை வெல்லும் வழியை அறியாமல் ஆன்மீகத்தில் துளி அளவும் முன்னேற முடியாது... வலி என்றாலே தேக வலியை மட்டுமே கணக்கில் வைத்துள்ள உலகத்தவர், வேறு மிக கொடுமையான மன வலிகளை பற்றி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.. காரணம், அதிலே தீர்வு ஒன்றினை காண முடியாத காரணத்தினால் தான், அந்த தீர்வினை ( solution ) காட்ட எந்த நீதி நூல்களும் மதங்களும் சரியான துணை புரிவதில்லை என்பதால் தான் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை... தேக வலியாய் அல்லது மன வலியாய் இருந்தாலும், அந்த வலி என்ற ஒன்றின் சரியான நடு மையமாய் இருப்பதும், நடு நாயகமாய் இருப்பதும் சலிப்பு என்ற ஒன்றே என்பதை மறக்கவே கூடாது.. அந்த சலிப்பு என்ற மையத்தை அடையாமல் ஆன்மீகமே இல்லை.. பெரிய பெரிய மகான்கள் என கூறப் பட்ட அனைவரும் இந்த சலிப்புக்கு பலியாகி காணாமல் போனவர்களே..
இந்த சலிப்பை எதிர் கொள்ள துணிந்தவனுக்கு மட்டுமே நிறை நிலை மனிதனாகும் தகுதி கிடைக்கும்... களிப்பு என்ற சந்தோசம் இன்பம் பேரின்பம் என இலட்சியங்களையே, குறிக் கோளாக கொண்டுள்ள மனித குலம், இந்த சலிப்பை கழிக்கும் அதாவது நீக்கும் முறை அறியாத காரணத்தினால் தான் அந்த களிப்பினை தக்க வைத்துக் கொள்ள முடியாமல், அற்ப களிப்பாய் அனுபவித்து முழு களிப்பினை தொலைத்து பின் மண்ணில் மறைகின்றான்... உலகியல் பொழுது போக்கும் அம்சங்கள் அனைத்தும் சலிப்பை விட்டு விலகி விலகி ஓட முயற்சி செய்வதால், சலிப்பிலே மட்டுமே மலரும் உண்மை ஆன்மீகம் இன்றும் மட்டும் அல்ல என்றுமே வாடி கொண்டு இருக்கிறது... மத சடங்குகள், ஆசார சங்கற்ப விகற்பங்கள், குறிப்பாக மத விழாக்கள் அனைத்தும் சலிப்புக்கு மாற்றாகவும் எதிராகவும் வேலை செய்வதால், அவை ஆன்மீகத்தை குழி தோண்டி புதைகின்றன.... தன்னிலையில் முதலில் எதிர் கொள்ளும் இந்த சலிப்பு நிகழ் கால நிசத்தோடு உண்மையோடு பொருந்தி சிவகலப்பு என்ற உயரிய நெறிக்கு அழைத்துச் செல்கிறது...
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் மனதினால் மட்டுமே ஏற்படும் இந்த சலிப்பை வெல்லுவதால், மனம் தானாக அடங்கும்.. அப்படி வெல்ல, அந்த சலிப்போடு உடன்பாடு கொண்டால் மட்டுமே, சலிப்பில் சலிப்பின்றி இருந்து தன் நிலை ஓங்கி, சலிப்பிலே களிப்பினை காணும் மிக உயரிய பண்பு கிடைக்கும்.. அன்னவருக்கு உலகியலில் எந்த ஒரு பொருளும் முழு நிறைவினை கொடுக்க முடியாது.. உலகியலில் நாட்டம் முற்றிலும் நீக்கி, சலிப்பிலே பெரும் களிப்பினை காணும், நிறைநிலை மனிதனிடம் மட்டுமே நீதி நேர்மை திறமை, ஆக்கம் ஊக்கம் போன்றவை, மிக மிஞ்சிய அளவில் காணப் படும்...
கீழ் காணும் குறிப்புகளை சற்று கவனமாக பாருங்கள்
சலிப்பு என்பது நிகழ் கால நிசத்தின், உண்மையின் துவக்கம்....
சலிப்பானது நிகழ் காலத்தில் இணைய மனம் அடம்பிடிக்கும் தன்மையே...
சலிப்பில் மட்டுமே சிவ கலப்பு தோன்றும்..
தோன்றிய அந்த சிவகலப்பு மட்டுமே சலிப்பை வெல்லும்...
சலிப்பை வெல்லாதவன் எக்கணமும் தவிப்போடே இருப்பான்..
களிப்புக்கு முன் தோன்றும் சலிப்பு...
சலிப்பை கடக்காமல் களிப்பு என்பது இல்லவே இல்லை...
சலிப்பை முற்றிலும் வென்றவனே நிறை நிலை மனிதன்..
நீதியும் நேர்மையும் சலிப்பை கடந்தவனுக்கு மட்டுமே இருக்கும்..
நிறை நிலை மனிதனுக்கு சலிப்பும் களிப்பும் ஒன்றே...
தன் நிலையில் முதலில் எதிர் கொள்வது இந்த சலிப்பே...
தோன்றா நிலையே, மனதிற்கு ஒரு முழு சலிப்பே...
மேலே உள்ள ஒவ்வொரு குறிப்பிற்கும் ஓசோ என்ற தத்துவ எழுத்தாளரை போல் ஆயிர பக்கங்கள் விளக்கத்தை கொடுக்க தமிழ் நிலையால் முடியும்.. அப்படியான விளக்கங்கள் படிப்போரையும் படிப்பித்தவரையும் கால விரையத்திற்கு உள்ளாக்கி விடும்... கின்னஸ் சாதனையை, எழுத்தால் படைத்த ஓசோ கரை ஏற வில்லை.. அத்தனை விளக்கங்களும் அவர் நூல்களை படித்தோரையும் கரையேற்ற வில்லை.. அதற்கு மறைமுகமான முக்கிய காரணம், சலிப்புக்கு மாற்றாக, எதிராக, கால கட்டத்தின் கட்டாயத்தால், அவருடைய எழுத்து நடையில் சிறு கதைகளும், நகை சுவை தரும் பகுதிகளும், அதிகம் இருந்ததாலே தான்.. ஆகவே அதிக விளக்கங்களை மனதளவில் நாடாமல், குறிப்புகளிலேயே நம் விழிப்பு நிலையால் விளக்கம் அடைந்து உணர்ந்தாலே போதுமானது..
இன்றைய மர்ம யோகப் பயிற்சியாளர்கள் பலர் சலிப்போடு போராடவும், அதில் உடன் பட முடியாததாலும், பயிற்சியில் ஆழ் நிலைக்கு செல்ல தவிக்கிறார்கள்.. சலிப்பின் தன்மையை உணர்ந்து, வாசியோகப் பயிற்சியின் மூலம் உடன்பாடு கொண்டு முன்னேற்றம் காண்பார்களாக..
சேரும் இடம் அறிந்து சேர்ந்து சீர் பெறுவோமாக...

No comments:

Post a Comment