Tuesday 29 August 2017

சித்தர்கள் சாதி பேதம் கொண்டனரா?

சந்திரரேகை 200 என்ற நூலில் போகரின்
சீடரான கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்
சித்தர்களின் சாத-மத ஒழிப்பு கொள்கை:.:
சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்
றோதி யுணர்ந்தறிவாய் , குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய் (குதம்பைச் சித்தர் பாடல்145)

ஆண்சாதி பெண் சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற வெல்லாம் (குதம்பைச் சித்தர்137)

பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம்
வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரு
மும்முளே(சிவவாக்கியர் பாடல் 40)

தழைப்பதற்குச் சாதியென்றும் விந்துவென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரியென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற்
கதிவேறில்லை (அகத்தியர் ஞானம் 4)

காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக் குலம்தான்மைந்தா
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத் தானே
(
வான்மீகர் ஞானம் பாடல்

நால்வருணன் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சாதியெலாம் பிள்ளை
விளையாட்டே
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணிந்தேன்(வள்ளலார்
திருவருட்பா)

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளில் கோத்திர சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர்
சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக் களுக்கோ
(
பாம்பாட்டி சித்தர்)

சாதிபேதம் சொல்லுறீர் தெய்வம்
தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ
ஓதியபால் அதில் ஒன்றாகி அதில்
உற்பத்தி நெய்தயில் மோராச்சு(கொங்கணர்
வாலைக்கும்மி 94)

மனித அறவின்மையின் உச்சம்
சுயநலம்,சாதி,மதம் வேறுபாடுளும், பின்
தங்களுக்கென்று புது புது சடங்குகளை
போடிப்போட்டு கர்பணையாக உருவாக்கி
மக்களை குழப்பி, தொழிலின் அடிப்படையில்
மட்டுமே நடத்தி உலக அழிவுகள் அரங்கேரும்
என்பதையும் சித்தர்களின் பாடல்கள்
விளக்குகின்றன.

சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன
தன்மையே.
கறந்தபால் முலைப்பகா கடைந்தவெண்ணை
மோர்புகா!
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும்
உடற்புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய்
மரம்புகா!
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை
இல்லையே.
நல்லதல்ல கெட்டதென்றால் நடுவில்நிற்பது
ஒன்றுதான்
நல்லதென்ற போதது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும்
ஆதலால்
(
மனித எண்ணம் போல் பரிணாமிக்கும்)
நல்லதென்று நாடிநின்று நாமும் சொல்ல
வேண்டுமே
கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய்
தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய்
தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய்
தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம்
இல்லையே-சிவவாக்கியர்

2 comments:

  1. Replies
    1. You can very well download and save it. Or you can drop me a message in my whats up 9176012104, I shall send it in whats up

      Delete