Wednesday 30 August 2017

சொகுசு வாகனத்தில் மலை ஏறலாமா?

காசு கொடுத்து
வாங்கிவிட முடியுமா?
புண்ணியத்தை!
இது சோழர் காலத்து கதை!
சோழ மகாராஜா ஒருவர் இருந்தார். அவர்
ஒரு சமயம், ஒரு மகானை தரிசிக்க வந்தார்.
மகானை சந்தித்த ராஜா, அவரை வணங்கி,
நான் கைலாசம் போக என்ன செய்ய
வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அந்த
மகான் நீர் திருவாரூர் முதலான ஏழு சிவ
ஸ்தலங்களை, அரை யாம நேரத்தில் தரிசித்து
வந்தால், (அரையாமம் என்பது 45
நிமிடங்கள்)
உன் ஆசை நிறைவேறும்... என சொல்ல,
உடனே சோழராஜன், இதென்ன
பிரமாதம்... என்று சொல்லி,அரசன்
பஞ்ச கல்யாணி குதிரை மீது ஏறி, (பஞ்ச
கல்யாணி குதிரை என்பது குதிரைகளிலே
சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச
கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி
என்றால் அந்த குதிரையின் நான்கு
கால்களிலும் அதன் கனுக்காலிலும்
வெள்ளை நிறம் இருக்கும். நெற்றியிலும்
பொட்டு வைத்தாற்போல வெள்ளை
நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில்
வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச
கல்யாணி குதிரையாகும்) அந்த குதிரையுடனே
குடைபிடித்து ஒரு சேவகன் ஓடிவர ஏழு
சிவஸ்தலங்களையும் அரை யாமத்தில் தரிசித்து
விடௌடு திரும்பும் நேரத்தில்,
அதே சமயம், குதிரையும், குடை
பிடித்து ஓடிவந்த சேவகனும் மயங்கி விழுந்து,
இறந்து போக அந்த நிமிடமே, வானிலிருந்து ஒரு
விமானம் வந்து, குதிரையையும், குடைபிடித்து
ஓடிவந்த அந்த சேவகனையும் ஏற்றிக்
கொண்டு, கைலாசம் சென்றது.
அந்த அதிசயத்தை கண்டு ஆச்சரியப் பட்ட சோழ
ராஜன், தானும் ஆலயத்தை சுற்றி
வந்திருக்கும் போது, குதிரைக்கும், குடை பிடித்தவனுக்கு
மட்டும், கைலாயம் போகும் பாக்கியம்
கிடைத்திருக்கிறதே... நமக்கு மட்டும் ஏன்
கிடைக்கவில்லை என்று எண்ணி நேராக அந்த
மகானிடம் சென்று, நடந்த விபரத்தை
சொன்னார்.
அதற்கு அந்த மகான் குதிரையும்,
குடை பிடித்தவனும் காலால் நடந்தே, ஆலயத்தை
வலம் வந்தனர். அந்த புண்ணியத்தால்,
அவர்களுக்கு கைலாசம் போகும் பாக்கியம்
கிடைத்தது. நீர் குதிரை மேல் ஏறி வந்ததால்
உனக்கு சரீர சுகம் தான் கிடைத்தது. கைலாயம்
போகும் பாக்கியம் கிடைக்கவில்லை...
என்றாராம்..
அரசன் மறுபடியும் அவரை வணங்கி, நான்
இப்போது என்ன செய்ய வேண்டும் என்று
கேட்க, நீர் பாதசாரி யாகவே அந்த ஏழு
சிவாலயங்களையும் பிரதட்சணம் செய்...
என சொல்ல, அரசனும், ஆசார
சீலனாக பக்தியுடன், நடந்தே ஏழு
சிவாலயங்களையும் வலம் வந்து, அவர் முன்
வணங்கி நிற்க அடுத்த வினாடி, விமானம்
வந்து அரசனை, கைலாசத்துக்கு சகல
மரியாதைகளுடன், அழைத்து சென்ற தாக
வரலாறு......
இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள
வேண்டியது என்னவென்றால், ஆலயம்
வலம் வருவது என்பது அல்லது வேண்டுதல்
நிறைவேற்றுவது என்பது காலால் நடந்து வலம்
வர வேண்டும். ஏதாவது ஒரு வாகனத்தில்
ஏறி பவனி வந்து நானும் இறைவனை நூறு சுற்று
சுற்றி விட்டேன்... என்றால், அது எதற்கும்
பயன்படாது. ஆக, புண்ணியம் என்பது சரீர
சுகம் இல்லாமல் இறைவனின் மனம் குளிரும்
பொருட்டு வேண்டிப்பெறும்
பாக்கியமாகும். அவற்றை விலைக்கு
வாங்குவதல்ல.
எனவே, ஆலயங்களை பிரதட்சணம்
செய்வது என்பது ஒரு மகா புண்ணியம்.
வாக்கிங் போகிற மாதிரி தினமும் மாலை
வேளைகளில் கிளம்பி, ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு ஆலயத்தை சுற்றி
தரிசனம் செய்து வந்தாலே நமக்கு
ஆலயப் பிரதட்சணம் செய்த புண்ணியம்

கிடைத்து விடும்.

No comments:

Post a Comment