Sunday, 27 August 2017

எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் ?

ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்க்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அனைவரும் தெரிந்து கொள்ள பகிரவும்.

ஞாயிறு --- சூரியன்

கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம்.
சிம்ம ராசியினருக்கு நலம் உண்டாகும்.

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

திங்கள் --- சந்திரன்
பால் சம்மந்தமான உணவு - கடக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

செவ்வாய் --- செவ்வாய்

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.

மேஷ, விருச்சிக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

புதன் --- புதன்

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு, முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

மிதுனம், கன்னி ராசியினருக்கு நலம் உண்டாகும்.

வியாழன் --- குரு

சுக்கு காபி,அல்லது கஷாயாம், சோளம்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன ராசியினருக்கு நலம் உண்டாகும்.

வெள்ளி --- சுக்கிரன்

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

கம்பு தோசை,அவியல், தயிர், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு நலம் உண்டாகும்.

சனி --- சனி

எள் உருண்டை, ஜிலேபி, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம் , முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு நலம் உண்டாகும்

ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்
அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583



No comments:

Post a Comment