Sunday 22 October 2017

அய்யா அருள் வாக்கு

அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு

இகுதொப்ப, ஒவ்வொரு துளியும், புவி சுழன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது "இறை நோக்கி செல், இறை நோக்கி செல், இறை நோக்கி செல்" என்பதுதான். ஒரு பிறவியில் அதை விட்டுவிட்டால், எப்பிறவியில்? என்பதை மனிதனால் நிர்ணயிக்க இயலாது. விலங்குகளுக்கு கிடைக்காத பாக்கியம், மனிதனுக்கு இறை தந்திருப்பது, இறையின் கருணை. விலங்குகளும் உண்ணுகின்றன. மனிதனும் உண்ணுகிறான். விலங்குகளும், தன் இனத்தை விருத்தி செய்கின்றன. மனிதனும் செய்கிறான். பின் எதில்தான் வேறுபாட்டை காட்டுவது? என்றால், விலங்குகள் குகைக்குள் வாழ்கின்றன. மனிதன் தனக்கு கொடுத்த அறிவை கொண்டு குகையை வடிவமைக்க கற்றுக் கொண்டுவிட்டான். எனவே, மனதை தூய கருவறையாக்கி உடலை ஆலயமாக்கி, மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிடவேண்டும். "எங்கு சென்று அமர்வது?" என்று தெரியாமல், இறை திணறவேண்டும். அந்த அளவுக்கு மனம், புத்தி, செயல், எண்ணம், வாக்கு புனிதமாக இருக்க வேண்டும். எனவே, சண்டை, சச்சரவில் மனதை செல்ல விடாமல், அவரவர் தொண்டையில் சுரக்கும் தீர்த்தத்தை உணர்ந்தால், அதுவே சுய தீர்த்தம், மெய் தீர்த்தம்.

No comments:

Post a Comment