Sunday 22 October 2017

ஜீவ நாடி அதிசயம் உண்மைச்சம்பவம்

ஜீவ நாடி அதிசயம் உண்மைச்சம்பவம்

ஒரு பெரியவர் ஜீவ நாடி கேட்க வந்து அமர்ந்தார். அவருக்குப் பின்வருமாறு ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்தார்.
ஜீவ நாடி: சிறு கல்வி கற்றவன்
பெரியவர்: ஆம் சுவாமி
ஜீவ நாடி: இதுவரை தொழில் இல்லை தொல்லைதான். பெரிய சம்பாத்யமும் இல்லை.
பெரியவர்: ஆம் சுவாமி உண்மை
ஜீவ நாடி: பூமியும் வழக்கிலும் வம்பிலும் இருக்கும். நீதிமன்றம் ஏகவேண்டும்
பெரியவர்: ஆம் சுவாமி. எனது பூமி மீது வழக்கு உள்ளது. நீதி மன்றத்தில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
ஜீவ நாடி: இல்லற சாபம் இல்லாள் இல்லை பிள்ளை இல்லை. சந்நியாசி போல் அலைய நேரும்
பெரியவர்: சத்தியமான உண்மை. எனக்கு மனைவி குழந்தைகள் கிடையாது. ஒரு சந்நியாசி போல்தான் அலைந்து வருகின்றேன்.
ஜீவ நாடி:ஜோதிட சாத்திரம் ஆய வல்லவன் பலருக்கும் பயன்படக்கூடியவன். உன் மூலம் பலர் நலம் அடைவர். மற்றவரால் உனக்கு நலம் இல்லை. வேதாந்தம் ரகசியம் அறிவாய். அகத்தியன் ஆசி உண்டு. சித்தர்கள் மார்க்கத்தில் வருவாய். பல சித்துக்களும் பெறுவாய். இன்னும் ஆயுள் உண்டு. ஆரோக்யம் தொல்லை தரும். மூட்டோடு முதுகு வலி ரத்தம் என ரோகம் வரும் கவனம்.
பெரியவர்: மிகச் சரி மிகச் சரி.
ஜீவ நாடி: அம்பாள் ஒருவள் ஸ்தம்பனக்காரி அன்னவளே உன்னுள் இருந்து உன்னை வழி நடத்தி வருகின்றாள். அன்னவளின் மந்திரத்தை அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரை ஜபித்து வா. விரைவில் மௌனம் சித்திக்கும். பின் வழக்கும் வெல்லும். சொத்து வந்து சேரும். பலருக்கும் குரு போல் இருப்பாய். ஜோதிடம் சொல்வாய். உபாசனை புரிவாய். ஸ்தம்பனக்காரி உன்னிடம் வந்து விளையாடுவாள்.
பெரியவர்: கடவுளே….மிக மிக உண்மை. எனக்கு ஜோதிடம் தெரியும். பலருக்கும் சொல்லி வருகின்றேன். அப்படியே பலித்து வருகின்றது. நீங்கள் சொல்லும் இந்த அம்பாள்தான் எனக்கு உற்ற துணை. இந்த அம்மனின் கோவில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் மட்டுமே உண்டு. அடியேன் அமாவாசை மற்றும் முழு மதியில் தவறாமல் சென்று பூஜையில் கலந்து கொண்டு வருகின்றேன். அந்த அம்மனே எனக்கு எல்லாம். முருகப்பெருமான் புட்டு புட்டு வைத்து விட்டார் ஐயா. எனக்கு இனி என்ன வேண்டும். பல இடங்களில் சென்று அலைந்து திரிந்து இன்று இங்கு ஒரு பெரும் மன நிம்மதி கிடைப்பதை உணர்கின்றேன். இது வரை எனக்கு இது போல் யாரும் நாடி உரைத்ததது கிடையாது. நான் 3 மணிக்கே எழுந்து விடுவேன். நீங்கள் சொல்லும் மந்திரம் எனக்கு ஏற்கனவே உபதேசம் ஆகியுள்ளது. எனவே இனி முதலாய் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜபம் செய்யத் துவங்குகின்றேன். எனக்கு மௌனம் சித்திக்குமா சுவாமி?
ஜீவ நாடி: ஜபத்தால் ஸ்தம்பனம் ஆகும் மௌனம் சித்திக்குமே.
மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் அசையாமல் வைத்திருப்பதற்குப் பெயர்தான் மௌனம். ஆன்மீக வாழ்வை ஒரு கனி எனக் கொள்வோமேயானால், மௌனம் அதன் சுவையாகும். நாம் அடைகின்ற முடிந்த பூரண நிலையே மௌனம். எண்ணம், சொல், செயல் இந்த மூன்றிலும் கடைபிடிக்கப்படும் மௌனத்தில், பேசாமல் இருக்கும் வாக்கு மௌனமே எளிதானது. எனவே முதலில் மௌனம் பழகுகின்றவர்கள் பேசாமல் இருந்து பழகுவார்கள். வாயை அசைக்காமல் வைத்திருப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். இதனால் வாக்கு சித்தி உண்டாகும். இல்லறத்தார்கள் விரத நாட்களில் மௌனம் கடைபிடிப்பார்கள். மௌனத்தோடு இறை சிந்தனையும் சேரும் போது அதன் பலன் மிகுதியாகும். வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்கள் முதலில் தனிமையில் இருப்பதே நல்லது. அதில் சித்தி அடைந்த பிறகு கூட்டமாக உள்ள இடத்தில் அமரலாம். வாக்கு கட்டுப்படுத்தப்படும் போது மற்ற இந்திரியங்களும் கட்டுக்குள் வருகின்றன. வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்களுக்கு கோபம் என்கிற குற்றம் நீங்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். பெண்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனைத் தரும். அவர்கள் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளே ஏற்படாது. சக்தி விரையமாவது தடுக்கப்படும். பேச்சு குறைகின்ற அளவு செயல்திறன் அதிகரிக்கும்.
பெரியவர்: மிகுந்த மகிழ்ச்சி சுவாமி என்று கூறி ஆசி வங்கி விபூதி பெற்று விடைபெற்றார்.
                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

No comments:

Post a Comment