Sunday 22 October 2017

அய்யா வாக்கு - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே




இன்பம் என்ற ஒன்றை, எவன் ஒருவன் உணர்கிறானோ, அவனால்தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தைப் பார்க்கவில்லையோ, அவனுக்கு எதனாலும், எவற்றாலும் துன்பம் இல்லை. அது இறை ஒருவருக்குத்தான் சாத்தியம். அதனால்தான், "இன்பமும், துன்பமும் இல்லானே, உள்ளானே" என்று கூறப்படுகிறது. மற்ற, பற்றும், பாசமும், ஆசையும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு. இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. எதையெல்லாம் இவன், இன்பம் என்று எண்ணி, அதன் பின்னால் ஓடுகிறானோ, அவற்றால் இவனுக்கு துன்பம் வருகிறது. எதையெல்லாம் துன்பம் என்றெண்ணி பயந்து பின் வாங்குகிறானோ, அவற்றால் இன்பமும் உண்டு. இரண்டுமே வேண்டாம் என்ற நிலையை மனிதன் முடிவெடுத்துவிட்டால், நிம்மதியாக வாழ முடியும். இல்லையென்றால், ஒன்றன் பின் ஒன்றாக இவன் மாறி, மாறி ஓடிக்கொண்டே இருப்பான். மனித வாழ்க்கையில் "கடமையை செய்தோம், பிரார்த்தனை செய்தோம், பிறருக்கு நன்மையை செய்தோம்" என்று போக வேண்டும். பெரிய அளவிலே ஒன்றின் மீது பற்றும், அதி தீவிர பாசமும் வைத்தால், பிறகு அது நம்மை பாடாய்படுத்தும்.

No comments:

Post a Comment