Sunday 22 October 2017

அரிய தகவல் - மருதமலை பற்றி முருகர் ஜீவ நாடி

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள்

முருகப்பெருமான் ஜீவ நாடி மூலம் நடத்தி வரும் அதிசயங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். அதில் கோவையில் இருந்து வரும் அடியவர் பண்பாளர், முருக பக்தர் திரு.பாலச்சந்திரன் என்பவருக்கு முருகப்பெருமான் மருதமலையின் பெருமைகளை எடுத்துரைத்து மகிமைமிக்க மருதமலைக்கு ஒரு படி விழாவை ஏற்பாடு செய் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு பற்றி கோவை கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களிடம் கூற மகிச்சியடைந்த சுவாமிகள் கடந்த பல ஆண்டுகளாக மருதமலை படித்திருவிழா நடக்காமல் நின்றுவிட்டது என்றும் அன்றைய நாட்களில் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டே மருதமலைப் படிகளில் ஏற மற்ற அடியவர்கள் படி பூஜை செய்து கொண்டே மருதமலை ஏறி மருதாசல மூர்த்தியைக் கண்டு வணங்கி மகிழ்வார்கள் என்றும் அப்படி பல காலமாக நின்று போன இந்த பூஜையை செய்ய வந்துள்ள உத்தரவு மிகவும் அருள் நிறைந்தது என்றும், ஒவ்வொரு வருடமும் தை மாதம் 1ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று இந்த பூஜை நடந்ததால் நீங்களும் அப்படியே செய்யலாம் என்றும் ஒரு நல்ல ஆலோசனை வழங்கி ஆசி கூறினார்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில்சிறப்பு வாய்ந்தது மருதமலை முருகன் கோவில்.அறு படை வீடுகளைக் கொண்டு குன்று தோறும்குமரன் எழுந்தருளி இருக்கும் இந்த மருதமலை 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றிவணங்கப்படுகின்றது.  எழில் கொஞ்சும்இயற்கையான சூழலில் அமைந்திருக்கும்மருதமலைஅதன் மூன்று புறங்களிலும் மலைஅரண்களால் சூழப்பட்டு உள்ளதுகோவிலுக்குபின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கைஅமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில்தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது.இதனால் முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றம்தெரிகின்றதுமருத மரங்கள் அதிகமாககாணப்படுவதால் இந்த மலை மருதமலை எனவழங்கப்படுகிறதுமேலும் மருதமால்வரை,மருதவரைமருதவெற்புமருதக்குன்று,மருதலோங்கல்கமற்பிறங்குமருதாச்சலம்,வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில்கூறப்படுகிறது.  எனவே மருதமரங்கள் அடர்ந்தமலை என்ற பொருளில் மருதாச்சலம் என்ற பெயர்ஏற்பட்டதுஇந்த மலைச் சாரலில் 3 கற்கள் மாறுபட்டநிறத்துடன் இருப்பதை காணலாம்அதாவது இந்தமூன்று கற்களும் சிலையாகி போன திருடர்கள்என்பார்கள்ஒரு முறை முருகன் அடியார்கள்கோவில் திருப்பணி நடந்த போது பொன்,பொருளை உண்டியலில் போட்டனர்.  இதைக் கண்டதிருடர்கள் ஒரு நாள் இரவில் வந்து உண்டியலைஉடைத்து பொன்னையும்பொருளையும் திருடிமலைச்சரிவு வழியாக சென்றனர் அப்போதுமுருகப் பெருமான் குதிரைவீரனைப் போல் சென்றுஅவர்களைப் பிடித்து 'நீங்கள் கற்சிலைகளாகமாறுவீர்என சபித்தாராம்இதனால் அந்ததிருடர்கள் 3 பேரும் கற்சிலைகளாக நிற்பதாகசெவிவழிச் செய்தி கூறுகிறது.   அருணகிரிநாதசுவாமிகள் பாடிய கந்தர் அலங்காரம்,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடியதமிழ் அலங்காரம்வேல் அலங்காரம் போல் மருதமலை மீது நமது சிரவையாதீனம் இரண்டாம் குருமஹா சந்நிதானம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்அவர்கள் மருதமலை அலங்காரம் எனும்பாடல்களைப் பாடி உள்ளார்கள்.
அடுத்து முருகப்பெருமானின் இன்னுமொரு உத்தரவும் வந்தது அதுதான் மருதமலை அலங்காரம் எனும் நூல் பாராயணம். சிரவையாதீனம் இரண்டாம் குருமகா சந்நிதானமாக இருந்து அருளாட்சி செய்தவர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள். சுமார் 15000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கொங்கு நாட்டுக் கச்சியப்பர் எனும் பெருமையைப் பெற்றவர். பல்வேறு பாடல்களைப் பாடிய தவத்திரு.கந்தசாமி சுவாமிகள் மருதமலை மீது 100 பாடல்களைப் பாடினார்கள். அந்த நூலே மருதமலை அலங்காரம் என்பதாகும். எல்லோரும் காப்புச் செய்யுளில் கடவுளை வைத்துப் பாடி நூல் இயற்றுவார்கள் ஆனால் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் தனது ஞானதேசிகர் தவத்திரு இராமானந்த சுவாமிகளைக் காப்பாக வைத்து”மருதவரைக் குகன்தன் அலங்காரம் நல்கும் இராமானந்தன் பொன் அடித்துணையே” என்று இந்த மருதமலை அலங்கார நூலைப் பாடி இருப்பது குருவருள் மீது சுவாமிகள் கொண்ட கௌமார நெறியைப் பறைசாற்றுகின்றது எனலாம். அந்த மருதமலை அலங்காரத்தில் இருந்து ஒரு இரண்டு பாடல்களை மட்டும் இங்கு பார்ப்போம்.
பாடல்:
பகடேறி வந்ததட் டுங்கொடுங் கூற்றனும் பாவையர்த
மகடே றிடப்புரி மாரனும் வேதனு மான்றதையிற்
சகடே றிடுமரு தாசலன் றாளன்றிச் சாற்றுமண்ட
முகடேறி னாலும் விடார்மன மேசற்றுண் முன்னுதியே
விளக்கம்: எருமை வாகனத்தின் மீது வந்து அதட்டும் கொடும் கூற்றனாகிய எமதர்மனும்(இறப்பு), காமத்தை உருவாக்கும் மன்மதனும் (இருப்பு), படைக்கும் பிரம்மாவும்(பிறப்பு) விண்ணின் முகடு ஏறினாலும் விடமாட்டார்கள் மனமே ஆதலால் தை மாதத்தில் தேரில் ஏறி வரும் மருதாசலன் திருத்தாள்களே இந்த மூன்றையும் வெல்லும் சக்தியைத் தரும் ஆதலால் மருதாசலன் திருப்பாதங்களை மனதில் இருத்துவாயாக.
பாடல்:
திருவளிக் கும்பெருங் கல்வியு நல்கிடுஞ் சேணுலகார்
தருவளிக் கும்பத ம்யாவையு மீந்திடுந் தன்னனைய
வுருவளிக் குந்தொண்ட ரெண்ணிய யாவு முடனளிக்கு
மருவளிக் கும்பொழில் சூழ்மரு தாசலன் வண்பதமே. 
விளக்கம்:
செல்வம் அளிக்கும், பெரும் கல்வியைத் தரும், இந்திரலோகத்தில் உள்ள கற்பகத்தரு அளிக்கும் பதங்கள் எல்லாவற்றையும் ஈந்திடும், முருகப்பெருமான் போன்றே உரு அளிக்கும், தொண்டர்கள் எண்ணிய யாவும் உடனே அளிக்கும் இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும் மருதாசலனின் திருத்தாள்களே.
    இந்த திருவளிக்கும் எனும் பாடல் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டதாகும். அப்போதே தீர்க்க தரிசனமாக கோவை எப்படி இருக்கும் என்று பாடியிருப்பது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். இன்று இந்த பாடலின்படி கோவை விளங்குவது குறிப்பிடத்தக்கது. தொழில், கல்விச்சாலைகள், பெரும் தனவந்தர்கள் என இன்றைய கோவை விளங்குகின்றது. முருக பக்தர்கள் அனைவரும் போற்றிப் பாராயணம் புரியவேண்டியது இந்த மருதமலை அலங்காரம் நூலாகும். நமது ஜீவ நாடியில் பலருக்கு இந்த நூலைப் பாராயணம் செய்யச் சொல்லி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 101 வது பாடலாகிய நூற்பயனில் “திருவினை நல்கும் சற்குருவாகிய குமரேசன் நாள்தோறும் நடமாடும் மருதமலை மீது பாடப்பட்ட அலங்காரம் எனும் புகழ் மிக்க வளப்பம் மிகுந்த இப்பிரபந்தத்தில் உள்ள நூறு பாடல்களையும் ஓதும் ஊக்கம் உடைய அடியார்கள் மணம் வீசும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்(பிறப்பு), இயமன்(இறப்பு), மன்மதன்(இருப்பு) ஆகிய மூவராலும் பற்றப்படமாட்டார்கள்.” என்று சொல்லப்பட்டுள்ளதை வைத்தே இந்த நூலின் பெருமையை உணரலாம். முருகப்பெருமானே மிகவும் விரும்பி ஜீவ நாடியில் இந்த நூலைப் பாராயணம் செய்து கொண்டே மலை மீது இருக்கும் என்னை வந்து தரிசியுங்கள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்று சொல்லி இருப்பது பொற்குடத்திற்கு மாணிக்கப் பொட்டு வைத்தாற்போல இன்னும் சிறப்பாம்.
கோவில்களை நாடி இறைவனைத் தரிசிக்க நாம் படியேறித்தான் போக வேண்டும். நமது இறைதரிசனத்திற்கு உந்து கோளாய் இருப்பது படிக்கட்டுகளாகும். படியின் பெருமையை உணர திருமலை வேங்கடவா படியாய்க் கிடக்க அருள்புரிவாய் என்று குலசேகராழ்வார் வேண்டுதல் வைக்கின்றார். அடியார்கள், தேவர்கள், அரம்பையர்களாகிய தேவலோக மங்கைகள் போன்றோர் கோயில் வாசல் படியாய் இருப்பதாகவும் அவர்களுடன் தானும் படியாய்க் கிடந்து உன் பவழ வாய் காண்பேண் என்கின்றார். இதோ அந்தப் பாசுரம்
 ”செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின் கோயிலின்வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்துஇயங்கும்
  படியாய்க் கிடந்து உன் பவள வாய்காண்பேனே
 இந்த இரு கருத்துக்களையும் செவிமடுத்து ஆமோதித்த சிரவையாதீனம் நான்காம் சந்நிதானம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கௌமார மடாலயம் சார்பாகவும் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தர் பீடமாகிய நமது பீடத்தின் சார்பாகவும் மருதமலைப்படி விழா ஜீவ நாடியில் வந்த வண்ணம் பங்குனி மாதம் 1ம் தேதி 14.3.2017 அன்று மிகவும் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில்,

சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு.முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோருடன் அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த பீடம் முருக பக்தர்கள் அடியார்கள் மற்றும் தென்சேரிமலை தவத்திரு.மாரிமுத்து அடிகளார் மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் சுமார் 500 பேர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். முருகப்பெருமான் ஜீவ நாடியில் உத்தரவு கொடுத்ததோடு மட்டுமில்லாமல் உடன் இருந்தே இந்த விழாவை நடத்திக் கொடுத்தது போன்ற உணர்வும் ஏராளமான திருவிளையாடல்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!

3 comments:

  1. Sir I tried calling you for getting appointment but you didn't pick my call

    ReplyDelete
    Replies
    1. Please call guruji again 9585018295. They were busy in anna dhanam and temple construction work. For some time the nadi reading was stopped. Now they started giving appointments again. Thanks. Santhanam

      Delete