Wednesday 18 October 2017

ஊதியூர்

கொங்கண சித்தரின்  ஒளி ஐக்கியம் பீடம் ...மற்றும்  தம்பிரான் சித்தரின்   சமாதி பீடம் --ஊதியூர்.

       
        >>  பொன்னூதிமாமலை எனும் ஊதியூர்   வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஊராகும் ..இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழமையான பெயரே  பொன்னூதிமாமலை என்பதாகும் .

        >>  ஊதியூர்  மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது மிகவும் பழமை வாய்ந்த  கோவிலில் "உத்தண்டவர்" எனும்  திருநாமத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்  ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் .இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் ..

         >>  பின்பு சற்று தள்ளி மேலே "தம்பிரான் சித்தர் சமாதி"  உள்ளது . ""தப்பித்தது தம்பிரான் புண்ணியம்"" எனும் பழமொழி இன்னும் நமது பேச்சு வழக்கத்தில் உள்ளது ...ஆபத்தின் உச்சிக்கு சென்றவர் கூட தம்பிரானை தரிசிக்க -மயிரிலையில் அவர்கள் காப்பாற்றப் படுவார்கள்..தம்பிரானின் ஜீவ சமாதி இங்குதான் உள்ளது .இவ்விடம் வந்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் .தமது அடியார்களை துணிந்து காப்பதில் வல்லண்மை பொருந்திய தம்பிரானுக்கு இவ்விடம் மட்டுமே  சன்னதி உள்ளது ..வேறு எங்கும் இருப்பதாக நான் அறியவில்லை ..

           >> "தம்பிரான் சித்தர் சமாதிக்கு  மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு  மலை பாதையில் நடந்து சென்றால் வருவது  பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய "கொங்கண சித்தரின் " பல ஆண்டுகள் தவம் செய்து   பரிபூரண கிருபை பொருந்திய இடமாகும் ..இங்கு  தான் கொங்கண சித்தர் பல ஆண்டுகள் தவம் செய்துள்ளார்  . சொர்ண ஆகார்ஸன பைரவ பெருமான் கொங்கண சித்தருக்கு காட்சி தந்து  பொன்னை செய்யும் கலையை அருளியுள்ளார் ..

           >> அதற்கும் சற்று மேலே  கொங்கண  சித்தரின் ஒளி ஐக்கியம் பெற்ற குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . அமைதியான சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியாத ....தவத்திற்கு ஏற்ற .... அருமையான இடமாகும்..படத்தில் நாங்கள் குகைக்குள் அமர்ந்து இருக்கிறோம் கேமரா வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல் தெரிகிறது ...உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி ...உள்ளே வரவும் ..வெளியே செல்லவும் படுத்து தவழ்ந்து தான் போக ,வரமுடியும்

     
        >> இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை செய்த  மலையாதலால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..கொங்கன சித்தர் இம்மலையில் தான் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார் .நன்றி மறந்த  தன்மையுடனும்  சுயநலமும்  மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி பொன் செய்யும் கலையை விடுத்து ..அவர் வைத்திருந்த பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர்  தம்பிரான் சித்தரிடம் கொடுத்து ..இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என கூறி மறைத்து வைக்கும்மாறு சொல்லி  தவத்தில் ஆழ்ந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று குரு தண்டனை பெற்று  திருவருளால் அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார் ..
   
       
          > ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி எல்லோருக்கும் அளிப்பார்கள் ,முடிந்தவர்கள் சென்று  ரசத்தை அருந்தி வாருங்கள் .கொங்கணர் ஜனன  நட்சத்திரம்  உத்திராடம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது ...அருமையான பார்க்க வேண்டிய புண்ணிய தலம் ஒரு முறை சென்று வாருங்கள்





No comments:

Post a Comment