Sunday 19 July 2020

இன்று ஆடி- அமாவாசை*🙏 🙇‍♂️ *அப்பர் கயிலை காட்சி திருநாள்* 🙇‍♂️ 🙏 *திருநாவுக்கரசு சுவாமிகள் திருவையாற்றில் கயிலைக் காட்சியை தரிசித்த நாள்.

☁️☁️☁️☁️☁️🌥️🌥️🌥️🌥️⛅⛅⛅⛅🌤️🌤️🌤️🌤️🌤️🌤️☀️☀️☀️
==========================
*"உலகெலாம் தமிழ்வேதம் முழங்க செய்வோம்"*
===========================

            🙏 *சிவாயநம* 🙏
           *திருச்சிற்றம்பலம்*

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🙇‍♂️ *"நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்.. "* 🙇‍♂️

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌸 *இன்று சார்வரி ஆண்டு*
*ஆடி மாதம் 05-ஆம் நாள்*
 *(20-07-2020) திங்கட்கிழமை.*

🙏 *இன்று ஆடி- அமாவாசை*🙏
🙇‍♂️ *அப்பர் கயிலை காட்சி திருநாள்* 🙇‍♂️
🙏 *திருநாவுக்கரசு சுவாமிகள் திருவையாற்றில் கயிலைக் காட்சியை தரிசித்த நாள்.*

🔆படம்:-
*(1) அருள்நிறை ஐயாறப்பர் உடனமர் அறம்வளர்த்த நாயகி அம்மை.*
*(திருவையாறு)*
*(2)  அப்பர் கயிலைக் காட்சி.*

🔆இறைவர்:-
*அருள்நிறை பஞ்சநதீஸ்வரர், ஐயாறப்பர், செம்பொற்சோதீஸ்வரர்.*

🔆இறைவி:
*அருள்தரும் அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.*

🔆தலம்:-
*திருவையாறு*
(இத்தலம் தஞ்சாவூருக்கு வடக்கே பத்து கி.மீ. தொலைவில் உள்ளது, கும்பகோணத்தில் இருந்தும் செல்லலாம்)

🔆தல மரம்:
*வில்வம்*

🔆தீர்த்தம் :
*சூரியபுட்கரணி, காவிரி.*

🙏 *திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் - மூவராலும் பாடல் பெற்ற தலம்.*

🙏 *மூவர் பெருமக்களும் சேர்ந்து பதினெட்டு திருப்பதிகங்களை பாடி உள்ளனர்.*

🙏 *திருநந்தி தேவர், மகாலட்சுமி, இந்திரன், வருணண், வாலி, சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.*

 🙏 *பெயர்க் காரணம்:-*
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.
ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், *திருஐயாறு (திருவையாறு)* எனப்பெயர் பெற்றது.

🙏சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். *(இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)*

 🙏 *நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக "திருவையாறு" என அழைக்கப்படுகின்றது.*

 🙏இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம்.

🙏இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

 🙏 *அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.*

 🙏சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

 🙏இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.


🔆தேவாரப் பாடல்கள் :
🌸 *1. சம்பந்தர்* -
1. கலையார் மதியோடு (1-36),
2. பணிந்தவர் அருவினை (1-120),
3. புலனைந்தும் பொறிகலங்கி (1-130),
4. கோடல் கோங்கங் (2-6),
5. திருத்திகழ் மலைச்சிறுமி (2-32) என ஐந்து திருப்பதிகங்களைப் பாடி உள்ளார்.

🌸 *2. அப்பர்*
 - 1. மாதர் பிறைக்கண்ணியானை (4-3),
2. விடகிலேன் அடிநாயேன் (4-13),
3. கங்கையை சடையுள் (4-38),
4. குண்டனாய்ச் சமணரோடே (4-39),
5. தானலா துலக மில்லை (4-40),
6. அந்திவட் டத்திங்கட் (4-99),
7. குறுவித்த வாகுற்ற (4-91),
8. சிந்திப் பரியன (4-92),
9. சிந்தை வாய்தலு (5-27),
10. சிந்தை வண்ணத்த (5-28),
11. ஆரார் திரிபுரங்கள் (6-37),
12. ஓசை யொலியெலா) (6-38) என 12 திருப்பதிகங்களை பாடியுள்ளார்.

🌸 *3. சுந்தரர்*
  (1)பரவும் பரிசொன் (7-77). (ஒரு பதிகம் பாடியுள்ளார்)

🙏சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

 🙏நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழாவில் இத்தலத்து இறைவன் தனைத்தானே பூசித்தது ஆத்மபூஜை என்ற உத்ஸவம் நடக்கிறது.

🙏சப்தஸ்தான தலங்கள் என அழைக்கப்படும் (1)திருவையாறு, (2)திருப்பழனம், (3)திருச்சோற்றுத்துறை, (4)திருவேதிகுடி, (5)திருக்கண்டியூர், (6)திருப்பூந்துருத்தி மற்றும் (7)திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம்.

🙏சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர்.

🔆இத்தலத்து திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய  பதிகத்திலிருந்து ஒரு பாடல்:-
*"ஓசை யொலியெலா மானாய் நீயே..*
 *உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே..*
 *வாச மலரெலா மானாய் நீயே..*
*மலையான் மருகனாய் நின்றாய் நீயே..*
*பேசப் பெரிதும் இனியாய் நீயே..*
 *பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே..*
 *தேச விளக்கெலா மானாய் நீயே..*
*திருவையா றகலாத செம்பொற் சோதி."*
- அப்பர்.



No comments:

Post a Comment