Monday 27 July 2020

சிந்தை ஆசி நூல் ஆடி 12, அஷ்டமி


சிந்தை ஆசி நூல் ஆடி 12, அஷ்டமி

கும்பத்தில் உதித்த குருவே போற்றி

கணத்தில் எமை ஆட்கொண்ட கண நாதா போற்றி

அகத்துள் வாழும் எம் அகத்துள்ள அகத்தியரே போற்றி

அகத்துள் வாழும் எம் அகத்துள்ள அம்பிகையே போற்றி

உமைப்போற்றி நித்தம் பாமாலை இனிமேலும்

எழுத்துரைப்பேன் ஏகாந்தத்தில் இருந்து

அகத்துள் வாழும் அகத்தியனின் திருத்தாள் பணிந்து நிற்கும் பாலகனே

என் சித்தமே  உன் எண்ணம்

ஆடி மாதம் எம் அப்பனும் அன்னையும் கால் தூக்கி ஆடியே அருள் புரியும் மாதம்

ஓடி நீயும் அவர் பாதம் தொழுது அருள் பெரும் மாதம்

அய்யனின் பாதம் பட்டால் தீருமே உன் பாவம்

நன்றாக திருப்பணி செய்து திருத்தி செம்மையாக்கி

வாழ்வித்து வாழ்ந்து வழக்கொழிந்து

சீருடன் இருப்பாய் மகனே

நானும்  உன் அருகே அமர்ந்து கண்டுகளித்து

அன்னையின் திருப்பாதம் பணிந்து அனைவருக்கும் கூறுவேன் ஆசி

இறைவனின் பார்வை எப்போதும் எல்லோருக்கும் உண்டு

ஆனால் மனிதன் தன் பார்வையை இறைவனின் மேலே முழுமையாக வைப்பதில்லை

அதனாலே அருள் குறைந்து பொருளற்ற மாயையில் வீழ்ந்து துன்புறுகிறான்

எவன் ஒருவன் தன கண் இமை மூடாமல் இறைவனின் அருட்கடாட்ச பார்வையை பார்க்கிறானோ

அவனுக்கே பார்க்கும் இடமெல்லாம் அகத்தியனே தோன்றி ஆட்கொண்டு வழிகாட்டி வழிநடத்தி

தன்னுள் இணைத்து கொள்வானே

இவ்வுண்மையை அறியாத மாந்தருக்கு நீயே எடுத்துரை என் மகனே

தீதென்றும் ஏதும் இல்லை, எல்லாம் அவனவன் வினையே

அகத்தில் உள்ள ஜோதியே

அகத்தில் உள்ள தீயே அகத்தீ

அகத்தீ எரியும் பொது வினைகள் சுட்டெரிக்கப்பட்டு அழியும்

சுடரொளி பட்ட இடமெல்லாம் சிறக்கும்

இருளகன்று மெய்ஞ்ஞானம் ஒளிர்ந்து முக்தி பெறுவர்

அகத்தியனை பற்றினால் அகத்தீ ஏற்றப்படும் அகஜோதி ஒளிர்விடும்

அருள் என்ற நெய்யினாலே அகத்தின் ஜோதி ஒளிரும்

அருள் ஏற ஏற ஜோதி பெருகி தேகம், ஆத்மா அகத்திலும் புறத்திலும் ஒளிர்விடும்

அருள் ஞான ஜோதியே அகத்தின் ஜோதி

அதுவே அகத்தியனின் ஜோதி

இவண்

அகத்தியன் ஆத்மா சந்தானம்
27.07.2020

No comments:

Post a Comment