Monday 27 July 2020

சிந்தை ஆசி நூல் நவமி , 28.07.2020 ஆடி 13 ஆம் திகதி


சிந்தை ஆசி நூல் நவமி , 28.07.2020 ஆடி 13 ஆம் திகதி 


தமிழை உச்சரித்து பார்

தமிழ்தமிழ்தமிழ்தமிழ் என்று

அது கேட்கும் பொது அமிழ்து அமிழ்து அமிழ்து என்று வரும்

தமிழென்றால் அமிழ்தமடா

ஆன்மாவுக்கு அழிவில்லைதான்

ஆன்மாவுக்கு அழிவில்லை என்றால் பிறகு ஏன் தேவர்கள் அமிழ்தம் தேடி உன்ன வேண்டும்

ஆன்ம பலம் பெருக வேண்டும் ; ஆன்ம நிலைகள் பல உண்டு

ஆன்ம பலம் பெருக பெருக ஆன்மா உயர்ந்து ஈசனை ஒத்த நிலைக்கு வரும்

இனம் இனத்தை சேர்வது போல அதன் நிலை உயர்ந்தவுடன் ஈசனை வந்து சேர்ந்து சிவத்துடன் கலந்து நிற்கும்

இயக்கம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்

அவரவர் கடமை போல பணி செய்து கொண்டே இருக்கும்

ஆன்மாவின் நிலை இவ்வாறு உயர அமிழ்தினை பருக வேண்டும்

அதற்கு தான் சூட்சுமமாக அமிழ்தயே தமிழ் என்று இருத்தி வைத்தார்கள்

தன் வாய்க்கு உள்ளேயே அமிழ்தத்தை வைத்து கொண்டு தேடுகிறான் மனிதன்

தன்னிலை உள்ள இடம் தான் தலை எனப்படுகிறது

தன்னிலை அடைந்தவன் தான் தலைவன் என்றும் அறியப்படுகிறார்

தன்னிலை என்பது வாழ்க்கை பொருளுணர்ந்து புற மாயைகளில் இருந்து விடுபட்டு

சதா அகத்தில் உள்ள ஈசனை கண்டு சதா சிவமாக இருப்பதே தன்னிலை

ஈசனை கண்டால் அங்கே அன்னையும் யாமும், முருகனும், விநாயகனுக்கு உடன் உண்டு

அங்கே அனைவரும் ஒன்றாக ஒரே பரம்பொருளாக காண்கின்ற நிலையில் நீ உள்கலந்து அடையாளம் இன்றி பரம்பொருளாகவே இருப்பாக இருப்பாய்

இவண்

அகத்தியன் சந்தானம்
28.07.2020

No comments:

Post a Comment