Sunday 12 July 2020

ஸ்ரீபாலா கவசம்

*🔯 ஸ்ரீபாலா கவசம்
*

*🔱 தொடர் - 05*

*3. திரிபுரசுந்தரி திருவடி தாமரை*
*தினம் வந்து நம்மை காக்குமே*
*திரிபுரசுந்தரி திருவிழிப் பார்வையில்*
*தெய்வீக நிலை பூக்குமே*
*திரிபுரசுந்தரி திருக்கரம் படுவதால்*
*தீமைகள் தான் விலகுமே*
*திரிபுரசுந்தரி திருமுடி காண்கையில்*
*தேன் வாழ்வு தான் மலருமே*

*🌷 பொருள்:*

*நம் இதயத்தில் வசிக்கும் திரிபுரசுந்தரியின் தாமரை போன்ற மென்மையான திருவடிகள் என்றும் நம்மை காக்கும்.*

*அவளது கடைக்கண் கடாக்ஷத்தினாலேயே நம் அகமும், புறமும் தூய்மை பெற்று தெய்வீக ஒளியோடு மிளிருமே!*

*அவளது திருக்கரங்களின்* *ஸ்பரிசத்தினால் அனைத்து துர்குணங்களும் மறைந்து போகுமே!*

*அவளது திருமுடியின் ஸ்பரிசத்தினால் நம் வாழ்வு* *இனிமையாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.*

*(தொடரும் . . .)*

*🔯 ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ*

No comments:

Post a Comment